I
சிறிதே திறந்த கதவின் வழியே பார்க்கிறேன்
மாலையில்
தடங்களற்ற விரிந்த காட்சியாக
கணக்கற்ற அழுத்தமான
வெளிச்ச புள்ளியிடப்பட்ட இரவுகள்
தொடைகளுக்கிடையில்
அமைதியாய் ஒருவன் ஓய்வெடுக்கையில்
நம்பமுடியாத ஒன்று
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது
சிறையறை எண் 2-லிருந்து
II
சகோதரனே,
இது ஒரு கல்லறை
மரணத்திற்காக எங்கெல்லாம்
மனிதர்கள் காத்திருக்கிறார்களோ
அல்லது
வாழ்க்கையைத் தொடர
இச்சுவர்களுக்குள்
ஒரு கல்லறைக் கல்லற்று
இக்கல்லறைகள் குறைக்கப்படும்.
III
நாடுகடத்தும் தண்டனைச் சங்கிலிகள்
இரும்புச் சிறைகள்
மனிதர்கள்மீது வெற்றி கொள்கின்றன
அவர்களின் உயிர்கள்
அவர்களின் ஆத்மாக்கள் சுழன்று வெளியேறும்
போராட்டத்தின்வழி நம்பிக்கையுடன்
அறிவதாக:
அங்குச் சங்கிலிகளோ அல்லது
சிறைகளோ அல்லது தங்கமோ
இவைகளின் தைரியத்தில் சிக்கவைக்காத
உண்மையுடன் பித்துப்பிடித்த ஓர் உலகம்
அவர்கள் நிற்கும்போது
புதைக்கப்பட்டனர் உயிருடன் இருக்கும்போது
இன்னும் பைபிள் சொல்கிறது
மரணங்களும் அடக்கங்களும்
எதிர்மறையானவைகள்,
துநாழஎயா-வுடன் வாழமுடியாது
ஏழு மெழுகுவர்த்திகளின் சுடர்கள்
ஏழு சிறைகளின்மீது கொளுத்தப்பட்டுள்ளன
திருவெளிப்பாட்டின் பார்வைகள் போல.
சங்கிலிடும்போது
சங்கிலியாக
சிறையிலிடும்போது
சிறையாக
அவைகளுக்குள்ளிருந்து மனிதர்களாக
இங்கு.
முகமூடி நடனங்கள்
முகமூடியில்லாத நடனக்காரர்களுடன்
பார்வையற்ற முகமூடித் தயாரிப்பாளர்கள்
ஒரு மனிதனின் விதைப்பைகளை விட
வேறு சாபம்தான் என்ன
இவைகள் நிகழ
பனிமேகத்தை ஊடுருவிச் செல்லுமா
நாளையின் விதி.
IV
மேல்மாடியின்
சிமென்ட் படிகளின்மீது
உட்கார்கையில்
கண்ணுக்கெட்டிய தொலைவில்
பாத்ரூம்களும் கக்கூஸ்களும்
இயற்கைக்கு அழகூட்டுகின்றன
வருகைப் பதிவேடு நாடகம் முடிகிறது
சிறையதிகாரிக்கும் கைதிகளுக்குமிடையே
நாடகம் தொடங்குகிறது
நேற்றைய ஒமோகா-விற்கும்
நாளைய ஆல்ஃபா-விற்குமிடையே
V
எங்கள் எல்லோருக்கும் அப்பால்
இந்தச் சுவற்றிற்கு அப்பால்
இன்னமும் அந்தப் பேரச்சம் கிடக்கிறது
உயர்ந்த பட்ச பாதுகாப்புடன்
அது உருவாக்குகிறது உயரமான, அழகான
ஒடுக்குமுறை.