சுதந்திரத்திற்கான பாதை

ஃபிரெட்டி ரெட்டி (இந்தியா)
தமிழில் : அ.ஜ. கான்
நன்றி : Third World Calling

 

சுதந்திரத்திற்கு உண்டு நீண்ட நெடிய பாதை
உன் பதற்றம்
நெடும்பாதையைச் சுருக்காது தோழனே
உன் எண்ணம் அறிவேன்
கோபத்துடன் வெடித்துக்கொண்டிருக்கும்
உனது மூளை எரிந்துகொண்டிருக்கும்
பழிவாங்கும் எண்ணத்துடன்
சித்ரவதைகளுக்காக காத்துக்கொண்டிருக்கும்
இங்குமங்கும், எங்கும், எல்லாவிடமும்
ஆர்வத்துடன்
நீடிக்கும் கேள்விகள்
சந்தேகம்
யார்இருக்கிறார்@ யார் இல்லை என
உன் வலியை நானறிவேன்
எல்லோரும் உணர்ந்துவிட்டனர்
அது ஆரம்பித்ததிலிருந்து.

புலம்பலற்ற அமைதியான அடக்கம்
இப்பாதையில் பயந்துவிட்டவர்கள் பலர்
உனக்கு முன்பு
அடிக்கடி பதிந்துள்ள ரத்தச்சுவடுகள்
அடையாளங்கள்
உனக்காகவும் எனக்காகவும்
பின் தொடர
நீண்ட, கடுமையான பாதை ஒன்று
சுதந்திரத்திற்காக.