சொர்க்கங்களடைய வாழ்த்துகிறோம்
எப்போதும் எல்லா காலத்திலும்
எதிரியின் கையில்
மரணிக்கும் அனைத்து வீரர்களும்
போர்க்களத்தில்
சித்ரவதைக் கூடங்களில்
சிறைகளில்
ரத்தம் சிதறும் இவ்விடங்களில்
போராட்டம் மிகவும் துல்லியமானது
வீரனின் வாழ்வு அர்த்தம் பெறுகிறது
சோதனைக் காலங்களில்
தைரியமான இறுதி மூச்சுவரை
மரணத்திற்கு அப்பாலும்
தியாகிகளின் வாழ்வு உயிர்ப்பிக்கப்படுகிறது.