அராயகமும் மாக்சியமும்

அழகலிங்கம்

ஆண்டாண்டுகாலமாக ஒடுக்குமுறையாளர்களும் சுரண்டலாளர்களும் குள்ளத்தனங்களாலும் நெட்டூரங்களாலும் மாத்திரமே ஒடுக்கிச் சுரண்டினார்கள். ஒடுக்கப்பட்டவர்களும் சுரண்டப்பட்டவர்களும் அந்த ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் அதேயளவு குள்ளத்தனத்தாலும் நெட்டூரத்தாலும் எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ளாமல் இருந்ததே இன்றுவரை உலகில் எண்ணற்றபேர் ஏழைகள் பேர்கேட்டு இன்னலுறுவதற்கான காரணமாகும் . பண்டைய எண்ணற்ற தோல்விகளிலிருந்து நேற்று நூறல்ல ஆயிரக்கணக்கான தடவை விட்ட தவறை மீண்டும் மீண்டும் விட்டு ஒடுக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தோல்விகளையே முத்தமிட்டார்கள். நேற்றைய தலைமுறையின் அனுபவங்களை உதாசீனம் செய்து இன்றைய தலைமுறை மீண்டும் அதே பரிசோதனைகளை மீண்டும் செய்து விரக்தியடைந்துவிடுகிறது. இதிலிருந்து மீள்வதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அதாவது நேற்றைய போராட்ட அனுபவங்களை சேகரித்து திரட்டி மீண்டும் பழைய தவறுகளை விடாமல் இருப்பதற்கு உணர்மையடைந்து போராடுவது. ஒடுக்குமுறையாளனின் நச்சுத்தனம் வாய்ந்த குள்ளத்தனங்களில் ஒடுக்கப்பட்டவர்களையும் சுரண்டப்பட்டவர்களையும் காத்துமழைக்குத் தாங்கக் கூடியவிதத்தில் நிறுவனப்பட விடாமல் வியாகூலப்படுத்துவது முக்கியமானது. அந்த வியாகூல வியூகங்களிற் தலை சிறந்தது தான் அராயகவாதம். இந்த அராயகவாதம் நடுத்தரவர்க்கப் புத்திஜீவிகளால் ஓகோகோ என்று புகழப்பட்டு ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினுள் ஓங்கி ஒலிக்கிறது.

ஒக்டோபர் புரட்சியின் வெற்றி அனாக்கிசத்தின் விஷப்பற்களை களட்டி மூலைக்குள்ளே முடக்கிவைத்தது. ஆனால் சோவியத் யூனியனில் ஸ்டாலினிசத்தின் வளர்ச்சி அதற்கு உயிர்கொடுத்ததோடு முழுக் கிழக்கு ஐரோப்பாவின் பொறிவுகள் அதை மேலும் ஊதிப் பெருக்க வைத்தது. அராயகவாதிகள் சொல்கிறார்கள். 'சோவியத் யூனியனிலே ஸ்டாலினிச அதிகாரத்துவம் வளர்ந்ததற்கான மூலகாரணம் போல்சவிக் கட்சியின் ஜனநாயக மத்தித்துவக் கட்சி அமைப்பு முறையாகும். அங்கே லெனின் ஆண்டாலென்ன ரொக்சி ஆண்டாலென்ன அது தனிமனித சர்வாதிகாரத்திற்கே இட்டுச் செல்லும். எங்கே அரச வடிவம் இருக்கிறதோ அங்கே அது ஒடுக்குமுறைக்கு வழிசமைக்கும். ஆதலால் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுதலே தவறாகும். இந்த நிலைப்பாடு ஏற்கனவே ஆட்சியிலிருக்கும் முதலாளித்துவ ஏகாதிபத்திய அரசுகள் எந்தவித நிரந்தர ஒடுக்குமுறைக் கருவிகளும் இல்லாமல் வெறுங்கையோடு ஆட்சி செய்யுமாக இருந்தால் சிலவேளை சரியாகக் கூடும். அன்றேல் பாட்டாளிவர்க்க அரசிடம் வேண்டிக் கட்டுவதிலும் பார்க்க முதலாளித்துவ அரசினால் ஒடுக்கப்படுவது துன்பங் குறைந்தது. ஏனெனில் அது ஏற்கனவே பழக்கப்பட்ட ஒன்று. வஞ்சகமே வேண்டாம் என்ற நிலைப்பாட்டின் மூலம் முதலாளித்துவம் பாதுகாக்கப்படவில்லையா?"
'முதலாளித்துவ உற்பத்திமுறை வளரவளர பெரிய முதலாளித்துவங்களின் பொருளாதார அரசியல் வல்லாண்மையும் கூடவே வளருகிறது. அது செல்வம் முழுவதையும் அபகரிப்பதோடு நிர்வகிக்கும் அரச யந்திரத்தையும் தனது கைக்குள்ளே வைத்திருக்கிறது. அது முதலாளித்துவத்திற்கு அடிபணிந்தவொன்று. அது இரக்கமற்ற நெட்டூரத்தையும் சந்தர்ப்பவாத முறையில் ஜனநாயகத்தையும் மாறிமாறி மிக நறுக்காகக் கையாள்வதன் மூலம் தன் இலக்கை அடைந்துவிடுகிறது. பாட்டாளிகளின் உற்பத்திப் பாத்திரம் வளரவளர முதலாளித்துவத்தின் ஆதிக்கமும் வலுக்கிறது. பாட்டாளிவர்க்கம் எந்த மட்டத்திற்கு ஸ்தாபனப்பட்டுக் கெட்டியாகி அரசியலைக் கற்றுக் கொள்கிறதோ முதலாளித்துவம் அதை ஈடுகொடுக்கக் கூடிய வகையில் தனது ஆளும் கருவிகளை நறுக்காகப் பலப்படுத்தி மேலும் மேலும் புதிய புதிய சமூகத் தட்டுகளை குறிப்பாக தொழிற் புத்திஜீவிகளை பாட்டாளிவர்க்கத்திற்கு எதிராகக் கிளப்பிவிடுகிறது"

-ரொக்சி மூன்றாமகிலத்தின் முதல் ஐந்து வருடங்கள் பாகம்1, பக்கம் 82

'மிரட்டல்தான் முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்தத் தூண்டும் முறையாகும். அதற்கு சொற்களிலே விசுவாசம் கிடையாது. அது செயலையே கோருகிறது. சிறைப்பிடித்தல், ஆர்ப்பாட்ட ஊர்வலங்களைச் சிதறடித்தல், பறிமுதல் செய்தல், சுடும் படைகள் என்பன அதன் நாளாந்த நடைமுறை. முதலாளித்துவத்திற்கு தங்கள்மேல் நல்லெண்ணம் ஏற்படச் செய்வதற்காக முதலாளித்துவ மந்திரிகள் தாம் உருக்காலான மனிதர்கள் என்று போஸ் கொடுக்கப் பிரயாசைப்படுகிறார்கள். ஜேர்மன் மந்திரிகளுக்கு தங்களது சொந்தச் சமூகங்களை 1871 பிரான்சில் செய்தது போல சுட்டுத்தள்ளும்படி லொலிட் ஜோர்ச் கொதிப்போடு கட்டளையிட்டுள்ளார். ஒரு மூன்றாம் நிலையிலுள்ள சிப்பாய் தான் தொழிலாளர்களை மிரட்டிப்பேசிய அறிக்கையை மேல் அதிகாரிகள் சபையிலே கொந்தளிப்போடு புழுகித்தள்ளுகிறான். உத்தியோகபூர்வ அரச யந்திரம் மேலும் மேலும் வெளிப்படையாகவே தொழிலாளர்களை குரூரமாக இரத்தவெறிகொண்டு ஒடுக்கும் ஸ்தாபனமாக உருமாறிக்கொண்டுள்ளது. தனிச்சொத்துடைமையையும் முதலாளித்துவ ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காக அதனோடு கூடவே முதலாளித்துவத்தின் ஆதரவோடும் அதுவே தயாரித்துவிட்ட பிரத்தியேக எதிர்ப்புரட்சி நிறுவனங்கள் வேலைநிறுத்தங்களைப் பலாத்காரமாக உடைப்பதற்காக, ஆத்திரமூட்டாளர்களாக, சோடினைவழக்குகள் போடுபவர்களாக, புரட்சிகரஸ்தாபனங்களை சின்னாபின்னப்படுத்துவதற்காக, கொம்யூனிச அமைப்புகளுக்குள் பாய்ந்து அவர்களின் உடமைகளையும் ஆவணங்களையும் பறிப்பதற்காக, வெகுசனக்கொலைகளுக்காக, மண்கொள்ளைக்காக, தீக்கிரையாக்குவதற்காக, புரட்சிகரத் தலைவர்களைக் கொல்வதற்காக, இதேபோன்ற மேலும் பல எதிர்ப்புரட்சித் தீச்செயல்களுக்காகத் தயாரித்து விடப்பட்டிருக்கிறார்கள்.

நிலப்பிரபுக்களதும் முதலாளிகளதும் இளம் மைந்தர்களும் குட்டிமுதலாளித்துவ தன்நிலைமை தாழ்ந்தவர்களும், மற்றும் தங்களின் வர்க்கத்தை இழந்த மனிதர்களும், சோவியத் றைசியாவிலே இருந்து குடியேறிய முதலாளித்துவப் பெருமான்களும் முக்கியமான பெரிய அந்தஸ்துக்களை வகித்து எதிர்ப்புரட்சி கொறில்லா அமைப்புக்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஏகாதிபத்திய நரபலிப்பள்ளியில் சித்தியெய்திய பட்டாளத்தலைவர்கள் இவர்களுக்குத் தலைமை கொடுக்கிறார்கள்.

20000 கொயென் சொல்லேர்ண் இராணுவத்தின் அதிகாரிகள் கப்லூற்விச் சதிக்குப் பிறகு தம்மைத்தாமே வலிமையான எதிர்ப்புரட்சிக் கருவாக அணிவகுத்துள்ளார்கள். இதைக் கலைப்பதற்கு ஜேர்மன் ஜனநாயகம் லாயக்கற்று இருக்கிறது. இதற்கு மரண அடி அடிக்கப் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தால்தான் முடியும். பழைய அதிகாரத்தின் மத்தித்துவப்படுத்தப்பட்ட இந்த பயங்கரவாத நிறுவனத்திற்குத் துணையாக யங்கர் எஸ்டேட்டுகளிலிருந்து அணிவகுக்கப்பட்ட வெண்காவலர்கள் இருக்கிறார்கள்.

அமெரிக்காவிலே ~தேசிய பாதுகாப்புக் கழகம்|, ~அமெரிக்க விசுவாசக் கழகம்|, ~சுதந்திரத்தின் சுத்தவீரர்கள்| போன்ற நிறுவனங்கள் முதலாளித்துவத்தின் அதிரடிப்படையாகி நிற்பதோடு இவர்களின் அதீத கன்னையான பிரத்தியேக துப்பறியும்படை சாதாரண கொலைக்குண்டர்படையாக இயங்குகிறது.

பிரான்சிலே தொழிலாளர்கள் சம்மேளனத்தை சட்டவிரோதமாக்கும் பொழுது வேலை நிறுத்தங்களை உடைப்பதற்காக ~குடிமக்கள் கழகம்| என்ற ஒன்றை சமூகத்திலே தேர்ந்தெடுத்தார்கள்.

சோவியத் அரசுக்கும் புரட்சிகர எழுச்சிகளுக்கும் எதிராக, நாகரீகத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் உதாரணமாக உலகப்பாட்டாளிகளுக்கு என்னத்தைக் கொடுத்துள்ளார்கள் என்றால் இங்கிலாந்தின் ஒத்தாசையோடு இயங்கும் அரசாங்க எதிர்ப்புரட்சி வால்களையும் அவர்களோடு கூடவே இரகசியமாக இயங்கும் வெள்ளைக் கங்கேரி மாபியாக்களையும் தான்.

ஜனநாயக அரசுகளான பின்லாந்து, ஜோர்யியா, லாட்வியா, எஸ்தோனியா போன்றவை நறுக்குத்தெறித்த கங்கேரித் தினுசுகள் தான்.
பார்சிலோனாவில் பொலிஸ் கட்டளையின் பேரில் தலைமறைவுக் கொலைக்குண்டர்கள் இயங்குகிறார்கள். அங்கு பார்த்தாலும், இங்குபார்த்தாலும், எங்குபார்த்தாலும் இப்படியே நிகழ்ச்சிகள்.

தோற்கடிக்கப்பட்டு அழிந்து கிடக்கும் பல்கேரியாவிலே கிடைக்கும் முதற்சந்தர்ப்பத்திலேயே தொழிலாளர்களது முதுகுகளையும் எலும்புகளையும் பதம்பார்ப்பதால் தங்களது தேசப்பற்றைக் காட்டுவதற்காக வேலையிழந்த அதிகாரிகள் இரகசிய சமூகமாக இயங்குகிறார்கள்.
முரண்பாடுகளை மெதுமையாக்கும் வேலைத்திட்டமும், பாராளுமன்ற சீர்திருத்தவாதமும், சீராகச் சமூகமயமாக்குவதும், தேசிய ஐக்கியமும், உலகயுத்தத்திலிருந்து மீண்டுகொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் முகத்தில் அவலட்சணமான கேலிக்கூத்தாகத் தோன்றும்.
முதலாளித்துவம், சீர்திருத்தத்தினூடு பாட்டாளிவர்க்கத்தோடு சமரசம் பேசுவதை எப்பொழுதோ கைவிட்டுவிட்டது. அது தொழிலாளிவர்க்கத்தின் உச்சியிலுள்ள பிரபுக்களுக்கு சில துணிக்கைகளை வீசியெறிந்து ஊழல் செய்து அதன் மூலம் வெகுசனங்களை இரும்பாலும் இரத்தத்தாலும் அடக்கி ஆளுகிறது..

இன்று கரிசனையான ஒரு சின்னப்பிரச்சினையையாவது வாக்களிப்பின் மூலம் தீர்த்துவிட முடியாது. சீர்திருத்தவாதிகளின் மண்டைக்குள்ளே ஜனநாயகத்தின் அற்பசொற்பத்தைக் கூடக் காணமுடியாது. முழு அரசநிறுவனமும் ப+ர்வ வடிவத்திற் கெட்டியாக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய மனிதர்களின் நிறுவனமாகிவிட்டது. . முதலாளித்துவம் வோட்டுக்களை எண்ணுவதற்குப் பதிலாக துப்பாக்கிகளையும், இயந்திரத் துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் அவசர அவசரமாக எண்ணும்படி கேட்கிறது. அவைகள் அவர்களின் கைவசமுள்ளதால் ஆட்சியதிகாரத்தையும் சொத்துடைமையையும் காப்பாற்றுவதா இல்லையா என்ற பிரச்சினை நேருக்கு நேர் வந்து அதைச் செய்யும்படி சொல்லுகிறது.

கூடிவாழ்வதற்கோ சமாளித்து வாழ்வதற்கோ எந்த இடமும் கிடையாது. எங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் முதலாளித்துவத்தைத் தூக்கி எறிய வேண்டும். இதை பாட்டாளிவர்க்கத்தை எழுச்சிகொள்ள வைப்பதன் மூலம் தான் சாதிக்கலாம்.

-ரொக்சி. மூன்றாமகிலத்தின் முதல் ஐந்து வருடங்கள் பாகம் 1, பக்கம் 146-147

ரொக்சியின் கொலைவிசாரணையினூடு அம்பலமான இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் ஏகாதிபத்திய சதிகாரர்கள் தங்களின் சர்வதேச வலைப்பின்னலோடு தாமே தொழிலாளர்வர்க்கக் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் உண்டாக்கி விட்டிருக்கிறார்கள். தொழிலாளவர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் நலன்களைப் பேணும் விசுவாசமான தொழிலாளவர்க்க கட்சிகளை தோற்கடிக்கும் புதிய மூலோபாயம் இது. அதுமாத்திரமல்ல மிக விசுவாசமாக தொழிலாளர் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை ஊடறுப்பதற்காக அவர்களே தயாரித்துவிட்டுள்ள ஏகாதிபத்திய ஏஜண்டுகள் கொஞ்சநஞ்சமல்ல. இதே போன்ற சிக்கலான கொள்ளை அனுபவங்களின் பின்னணியிற்தான் மாக்சியம் ~ஜனநாயக மத்தித்துவத்தை| தனது அமைப்புமுறைக் கொள்கையாகப்பாவித்து அராயகத்தின் அத்தனை வகையறாக்களையும் மறைமுகமாகவோ நேரடியாக தெரிந்தோ தெரியாமலோ உணர்வுப+ர்வமாகவோ உணர்வுப+ர்வமற்ற இவர்கள் ஏகாதிபத்தியத்தின் துணைக்கருவிகள் என்று கூறுகிறது. மாக்சியம் எப்பொழுதுமே ஆயிரம் மாற்றுவழிகளை பலபக்கக் கோணங்களில் ஆராய்ந்தபின்பே ~ஜனநாயக மத்தித்துவத்தை| தனது அமைப்பு முறைக் கொள்கையாகக் கொண்டது. இதைமேலும் சிறிது விளங்கிக் கொள்வதற்காக அராயகத்தின் வரலாற்றைப் பார்ப்போம்.

அராயகம் ஒரு கற்பனாரீதியான குட்டி முதலாளித்துவ போலியான புரட்சித்தத்துவமும் போலியான இயக்கமும் ஆகும். இது விஞ்ஞான சோசலிசத்திற்கும் கட்டுப்பாட்டோடு கூடிய ஸ்தாபனத்தினூடு அரசியல், வர்க்கப்போராட்டத்தில் பங்கு கொள்வதையும் நானாவித அரசியல் நிறுவனங்களையும், ஸ்தாபனத்தினுள் கட்டுப்பாட்டோடு இயங்குவதையும், புரட்சிக்கட்சியின் தலைமைத்துவத்தின் ஆதிக்கத்தையும் நிராகரிப்பதோடு பூரணமான விடுதலையையும் பூரணமான உரிமைகள் அத்தனையையும் சமுதாயத்திலே நிலவுகின்ற சுரண்டி, ஒடுக்குகின்ற அரசையும் அதன் ஒடுக்குமுறை நிறுவனங்களையும் நிர்மூலமாக்கி உண்மையான சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதை நிராகரிக்கும் ஒன்றாகும். அராயகவாதம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிரான்சு, இத்தாலி, ஸ்பானியா,சுவிற்சலாந்து போன்ற லத்தீன் தாய்மொழிவழி நாடுகளில் தொழிலாளர்வர்க்க இயக்கங்களில் கணிசமான ஆதிக்கத்தை வைத்திருந்தது. ஆனால் றைசியா, ஜேர்மனி போன்ற நாடுகளில் அராயகத் தொழிற்சங்கவாதமாக ஓரளவு செயற்பட்டது. ஒரு பிரத்தியேக ரூப முதலாளித்துவத் தத்துவம் அராயகவாதத்தில் விஞ்ஞான சோசலிசத்தை எதிர்த்துக் கோலோச்சுகிறது. அரசியல்ரீதியாகத் தொழிலாளி வர்க்கத்தை விடுவிப்பதற்கு உருக்கு உறுதியும் கட்டுப்பாடும் வாய்ந்த போல்சவிக் கட்சியைக் கட்டிவளர்த்து சோஷலிசப் புரட்சிமூலம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிர்மாணிப்பதை அது மூர்க்கமாக எதிர்க்கிறது. அதற்குப் பிரதியாக முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கும் இடை நடுவிலான சமூகப் போராட்டம் வேண்டுமெனவும் அதைத் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பொதுவேலை நிறுத்தத்தின் மூலம், அதுவும் ஏற்கனவே வரிசைக்கிரமமாகவும் திட்டமிட்டும் தயாரிக்காமல் தன்னிச்சையாய் வெடித்துக் கிளம்புவதன் மூலம், அதுவும் ஒரேயொரு எதிர்ப்புக் கிளர்ச்சிமூலம் எல்லாச் சமூக எதிர்ச்சக்திகளையும் முதலாளித்துவத்தையும் அதன் அரச நிர்மாணத்தையும் நிர்மூலமாக்கி சோஷலிசத்தை எந்தவித அரசஸ்தாபனமும் நிர்வாகமும் அதிகார ஆதிபத்தியமும் இல்லாமல் செயற்படுத்துவதாகும். றடிக்கல்வாத போலிப்புரட்சிகர வார்த்தை மொங்கான் மூலமும் பயங்கரவாதத்தின் மூலமும் தொழிலாளிவர்க்க இயக்கத்தை நிதானமும் திக்குத்திசையுமற்று கொக்கு மீனுக்கிழுக்க நண்டு தவளைக்கிழுக்க வித்தையடா மாமா கொத்துதடா கோழியென்று ஸ்தாபன வினாசம் பண்ணி அதன் மூலம் தானே வார்த்தை மொங்கான்களாற் திட்டித்தீர்க்கும் முதலாளித்துவ ஆட்சியதிகாரத்திற்கு அடிபணிய வைப்பதாகும். லெனின் தனது அராயகமும் சோஷலிசமும் என்ற ஆய்வுக்குறிப்பில் கூறியாங்கு, அராயகம் பிறந்தநாட் தொடக்கம் சுரண்டலுக்கெதிரான நானாவித வார்த்தை மொங்கான்களைத் தந்ததைத் தவிர வேறொன்றையும் தரவில்லை. அதனோடு அவர்கள் ஏன் முதலாளித்துவச் சுரண்டல் நடைபெறுகிறது. ஏன் முதலாளித்துவச் சமூகமுறை உருவாகிறது. ஏன் முதலாளித்துவம் சோஷலிசமாக அபிவிருத்தியடையும் என்பதன் கட்டாய விதிகளையும் பாட்டாளிவர்க்கம் வர்க்கப்போராட்டத்தினூடு சோஷலிசத்தை படைக்க வல்லது என்பதையும் விளக்கிக் கூறுவதில்லை. அராயகம் வியாகூலத்தின் விளைபொருளாகும். அவர்களின் மனோநிலையானது புத்திஜீவிகளினதும் உதிரிப்பாட்டாளிகளதும் மனோநிலையேயொழிய பாட்டாளிவர்க்க மனோநிலையல்ல.

- லெனின் பாகம்; 5, பக்கம் 334

அராயகத்தின் தாய்ப்பூமி மூலத்தில் சிதறிக்கிடக்கும் தனியாள் உற்பத்திமுறையாகும். குட்டிமுதலாளித்துவத்தின் சமூகபொருளாதார முரண்பாடு என்னவென்றால் பெருமுதலாளித்துவ உற்பத்திமுறையிலே அதுவும் இன்று அது பூகோளமயமாகிப்போன நேரத்தில் சிறு முதலாளித்துவ உற்பத்தி முறையானது தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதும் ஒவ்வொரு பொருளாதார நெருக்கடிகளின் போதும் ஏற்ற இறக்கங்களின் போதும் பொருளாதார லாபப் போட்டிக்கிணங்க இச்சிற்றுடமையாளர்கள் மூச்சுத்திணறப் பண்ணப்படுவார்கள். ஆதலால் அவர்கள் பெரிய முதலாளித்துவச் சொத்துடைமைக்கு எதிராக அவைகளை அழிக்குமட்டும் தொழிலாளிவர்க்கத்தோடு சேர்ந்து இழுபடுவார்கள். அடுத்தபக்கத்தில் அவர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட சொந்த உடைமைகளை உண்டாக்கும் ஆசையாலும் அதை மேலும் பெருக்கும் ஆசையாலும் தொழிலாளி வர்க்கத்திலிருந்து விலகிப்போய் மீண்டும் முதலாளித்துவத்தோடு சேருவார்கள். அவர்கள் முதலாளித்துவ அரசுக்கு எதிர், ஏனெனில் அது பெரிய மூலதனத்தை பாதுகாப்பதால்@ அதேநேரத்தில் பாட்டாளி வர்க்கத்திற்குப் பயம், ஏனெனில் தனது தனிச்சொத்துக்கு அபாயம் ஏற்படுமென்பதால்.

சிக்கல் நிறைந்த இதன் வெளிப்பாட்டை யாழ்ப்பாணத்து சிறுவிவசாயிகள் கதியாலுக்கு சண்டைப்பட்டு காணி விற்று வழக்குப் பேசின விடயங்கள், அதனையடுத்து தரப்படுத்தல் வந்ததுதான் தாமதம் றோட்டுக்கு றோட்டு ரியூசன் கொட்டில்களும் பொதுத்தராதரப் பரீட்சைக் கிறடிற்றுகளுக்காக குதிரையோட்டமும் முடிந்ததுதான் தாமதம் சவுக்கங்காடுகளிலே களையெடுப்பு நிகழ்ச்சிகளிற் காணலாம். வரலாற்றுக்குக் குறுக்குவழி சமைப்பதற்கும் சொர்க்கத்திலிருந்தும் தப்புவதற்கு ஓட்டை வைத்திருக்கும் இவ்வர்க்கம் உலகமெல்லாம் ஓடினார்கள். வந்தது தான் தாமதம் லண்டனிலுள்ள பெற்றோல் குதங்களையெல்லாம் வாங்கி பாரிசிலே லாச்சப்பலிலும் கனடாவில் ஸ்காபறேவிலையும் கடை கடையாகப் போட்டார்கள். அடுத்தபக்கம் புத்திஜீவிப்பகுதியினர் பட்டத்திற்கு மேலே பட்டங்களை எடுத்தபோதும் ஆழுமையோ நிர்வாகப்பொறுப்பை எடுக்கும் தைரியமோ இல்லாமல் கட்டளையிடு சேவை செய்கிறேன் என்ற மனப்பான்மையோடு வாழ்ந்து கொண்டு நீ காலாற் கட்டளையிடு தலையாற் செய்கிறேன் என்று வாழ்ந்து கொண்டு ஆனால் வயிற்றைக் குமட்டுமளவுக்கு தொழிலாளர்வர்க்கத்தின் மேல் வெறுப்பு. அண்மையில் நடந்த ஈராக் மேலான ஏகாதிபத்திய யுத்தத்தின்போது சோனியளுக்குக் குடுக்கத்தான் வேண்டுமென்று வாய்கூசாமல் வாந்தியெடுத்துக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வறிய முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதை வெட்கமில்லாமற் புழுகிக் கொட்டுகிறார்கள். தரப்படுத்தலிலே ~ஏ|களை எடுத்துக்கொட்டி உலகின் பிரபல சர்வகலாசாலைகளில் பொறியியல், எக்கவுண்டன், டாக்டர் பட்டங்களையும் சொத்தாக சீதனங்களையும் வேண்டினால் பெட்டிக்கடை பினாட்டு யாவாரத்தைத் தவிர ஒரு தொழிற்சாலையை முன்முயற்சி செய்ய லாயக்கில்லாமல் இருக்கிறார்கள். உலகச்சந்தையின் தொழில்நுட்பச் சந்தை சவால் என்ற எண்ணக்கருகூட அவர்களுக்குத் தெரியாது.
சிற்றுடமையாளர்கள் தமது சமூக அழிவை எண்ணித் தொடர்ந்து பயத்தோடு வாழ்ந்துகொண்டு தங்களது சிற்றுடமையை பேணுவதற்காக இலங்கை முதலாளித்துவம் போன்ற வலதுசாரிகளையும் எதிர்த்து அரசியல் வர்க்கப்போராட்டத்திலும் அரசியல் புரட்சியிலும் இடது சாரிகளையும் எதிர்த்து எரிச்சலடைந்து இருப்பவற்றைத் தூக்கியெறியும் இலக்கை விட்டுவிட்டு மாறாக அதற்குள்ளேயே மேலும் சமாளித்து இருக்க முனைகிறது. குட்டி முதலாளித்துவத்திற்கு என்ன மாதிரியான சமூகமுறை நல்லதென்றால் அரச ஆதிக்கம் அற்றதும் ஏனெனில் சமுதாய அரசியல் பிணைப்புகள் இல்லாமல் வரிக்கப்பம் போன்றவை இல்லாமல் சுதந்திரமாகவும் தனக்குத் தானே பொறுப்பாகவும் லாபமடையத்தான் விருப்பம்.

அராயகம் எங்கே பிறந்தது என்றால் பத்தொன்பாதாம் நூற்றாண்டில் தொழிற்துறை முதலாளித்துவம் உருவாகிவரும் பொழுது சின்னச் சின்ன உற்பத்தி முறைகள் உருவாகிய இடங்களிற்தான் ஏனெனில் வளர்ந்துகொண்டிருக்கின்ற பெரிய முதலாளித்துவம் தன்னை அழித்துப்போடும் என்ற பயத்தினால் தான் முதலாளித்துவ சமூகத்தில் வர்க்கமுரண்பாடுகள் முற்றி முதலாளித்துவத்தின் நிரந்தர நெருக்கடிகள் குட்டிமுதலாளித்துவத்தை நெருக்கவே அராயகத்திற்கு ஏதுவான தத்துவமும் சமூக பொருளாதார நிலைமைகளும் உருவாகின்றன.
அராயகத்தின் தத்துவார்த்த தந்தையும் அதற்கு வழிசமைத்துக் கொடுத்தவரும் யாரென்றால் இங்கிலாந்தின் வில்லியம் கோட்வின் (றுடைடயைஅ புழனறin 1756-1836) பிரான்சின் புருடோன் (Pநைசசந துழளநிh Pசழரனழn 1809-1865) இவர் தான் அனாக்கிசம் என்ற நாமத்தைச் சூட்டியவர். மற்றும் ஜேர்மனியரான ஸ்ரேனர் (ஆயஒ ளுவசைநெச 1806-1856).

இங்கிலாந்தில் தொழிற்துறை முதலாளித்துவம் உருவாகும் காலத்தில் கோட்வின் ஒரு புரட்சிகரமான சமூகவிமர்சனச் சிந்தனையாளர். பிரான்சியப் புரட்சிக் காலத்தில் சமத்துவம், சுதந்திரம், மனிதாபிமானம் என்பவற்றால் தூண்டப்பட்டு ~அரசியல் நியாயத்தின் தேடல்| (நுஙெரசைல ஊழnஉநசniபெ Pழடவைiஉயட துரளவiஉநஇ 1793) என்ற இரண்டுபாகமடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். அதிலே மனிதர்களை நீதியான முறையிலே ஆளவேண்டும் என்றும் அரசியல் மதச் சுமைகளில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அராயக-கொம்யூனிச சிந்தனை முறையால் நிலவுகின்ற சமுதாய அமைப்பை தூக்கியெறிந்து விட்டு மனிதர்கள் இதமாக இசைந்து வாழக்கூடிய சமுதாய அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் கோரினார். அவரது பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால் கணிசமான சமுதாயக் கொடுமைகளுக்கான மூலகாரணம் என்னவென்றால் சமுதாய நீதியின்மை, சமத்துவமின்மை, நீதியற்ற விநியோகமும் சுரண்டலும், கண்டாமுண்டித்தனமும், அறிவுக்குறைவும், போரும், மற்றைய மக்கள்மீது விரோதமும் ஆட்சியிலே தனிச்சொத்துடமையும் அரச பலாத்காரமும் ஆகும்.

நெட்டூரங்களை களைய வேண்டுமானால் அதன் ஊற்றிடமான தனிச்சொத்துடமையையும் அரச பலாத்காரத்தையும் அகற்றவேண்டும். இந்த நெட்டூரங்களை பலாத்காரத்தினாலோ நிர்ப்பந்தத்தினாலோ அகற்றக் கூடாது. மாறாகப் பிரகடனங்களாலும் மனிதர்களுக்கிடையேயான உறவை வளர்ப்பதாலும் அவர்களின் அறிவை வளர்ப்பதாலும் அகற்ற வேண்டும். ஒருதடவை தனிச்சொத்துடமையையும் அதிகாரத்துவ அரசாங்கமும் இல்லாமல் போன அரசாங்கம் ஒன்று உருவாகி விட்டால் நீதி, நேர்மை, பகுத்தறிவானது மனிதர்களிலே இலகுவாகப் புகுந்து அவர்கள் அதியுயர் அறிதிறனைப் பெற்று சமூகநீதியும் உளவனப்பும் பெற்று சுதந்திரமும் மகிழ்வும் பெற்று உடல் உள்ளச் செழுமையோடு வாழ்வார்கள். கோட்வின் தனது கற்பனையான அனாக்கிச கொம்யூனிச சமுதாய முறையை அங்குராப்பணம் செய்து நிர்மாணிக்க முனையும் போது பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளின் ஆங்கிலேய பிரெஞ்சு சடவாதம், புலனுணர்வு வாதம், நாத்திகம், மற்றும் இயற்கை உரிமை, நன்னெறித்தத்துவம் போன்றவற்றின் பிரகடனங்களையும் போதனைகளையும் துணையாகக் கொண்டார். இந்த தத்துவத்தின் ஆத்மாவாக அவர் மனிதர்களுக்கு மேலும் மேலும் அதியுயர் உண்மைகளை அறியும் சக்தியும் மனோவளர்ச்சி நிறைவைப் பெறும் கெட்டித்தனமும் இருப்பதாக நம்பினார். மனிதர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் மூலகாரணத்தை அகற்றி நீதியும் பகுத்தறிவும் சமுதாயத்தை பரிபாலிக்க வேண்டும். பகுத்தறிவு வளர்ந்து உலகைப்பற்றிய அறிகை வலுத்திருந்தால் மக்கள் நீதி நேர்மையான விடயங்களை அறிந்து சமுதாயத்திலே இசைந்து வாழ்ந்து அனைவரின் உரிமைகளும் மதிக்கப்பட்டு வெல்லப்படும் வழித்துறைகளிற் செல்வார்கள்.

இப்படி யோசித்த கோட்வின் அந்த நாளைய ஆங்கிலேய தொழிற்துறை முதலாளித்துவப் புரட்சியின் தாக்கத்திற்கு உள்ளான குட்டிமுதலாளித்துவத்தின் மனோநிலைகளை வெளிக்கொணர்ந்தார். அன்றைய இளைய ஆங்கிலத் தொழிலாளர்கள் இடையே அவரின் சிந்தனைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு ஆங்கிலேய முதலாளித்துவ புரட்சியின் போது அவரின் போதனைகளை கடைப்பிடித்தார்கள். அதன் காரணமாகவே பிரெஞ்சு, அமெரிக்கப் புரட்சிபோன்று முடியாட்சி முற்றாக ஒழிக்கப்படாமல் அது சட்டசபையோடான முடியாட்சியாகியது. ஆங்கிலேயக் கவிஞரான செல்லியும் கோட்வினால் ஆட்கொள்ளப்பட்டு பிரமைநிறைந்த அராயக எண்ணங்களை வெளிக்கொணர்ந்தவராகும்.

(Pசுழுனுர்ழுN) புறுடோனை மாக்ஸ் பிரான்சிய குட்டிமுதலாளித்துவத்தின் ஊதுகுழல் என்றார், அவர் தனிச்சொத்து என்பது என்ன? பொருளாதார முரண்பாடு அல்லது வறுமையின் தத்துவம் என்ற நூல்களை எழுதினார். புறுடோனின் போதனை இதுதான்: சமவுரிமை, பரஸ்பரம், வட்டியில்லாத கடன், மக்கள் வங்கி, உற்பத்திப்பொருட்களைச் சமமாகப் பங்கிடுதல்மூலம் எல்லாத் தொழிலாளர்களும் சின்னச்சின்ன உற்பத்தியாளராகவும் சின்னச் சொத்துள்ளவர் ஆகலாமென்றும் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை நியாயமானமுறையில் பண்டமாற்றிக் கொள்ளலாமெனவும் முதலாளித்துவத்தைச் சமாதானமுறையிற் சீர்திருத்தி அரசபலாத்காரத்தை இல்லாமற்செய்து ஒரு மனிதனை மற்ற மனிதன் சுரண்டுவதை இல்லாமற் செய்யலாமெனவும் கூறினார். ஏற்கனவே பிரெஞ்சுச் சிந்தனையாளர்கள் தனிச்சொத்தென்பது மற்றவர்களின் உழைப்பைக் களவெடுப்பதால் மாத்திரமே திரளுமென்றும் வரலாற்றில் ஓரடி முன்னேறவேண்டுமெனிலும் ஒட்டுமொத்தச் சமுதாயமாக இணைந்து செயற்பட்டே முன்னேறமுடியுமென்றும் உள்உரசல்களும் உள்முரண்பாடுகளும் நிலவினால் முழுச்சமுதாயமுமே உக்கி உழுத்து உருக்குலைந்து போகும் என்ற கருத்துக் கோலோச்சிய காலம்.

புறுடோன் முதலாளித்துவ அரசின் வர்க்கப் பாத்திரத்தை பிழையாக விளங்கி அரசியலிலிருந்து விலகிநிற்க வேண்டுமென்று பிரசாரம் செய்தார். இதனூடு அவர் பாட்டாளிவர்க்கம் ஜனநாயக உரிமைகளுக்காகவும் வாக்குரிமைகளுக்காகவும் போராடக்கூடாதென்றும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றக் கூடாதென்றும் கூறினார். நிறுவனமாகி பொருளாதாரப் போராட்டங்களை நடத்துவதையும் தொழிற்சங்கப் போராட்டங்களையும் நிராகரித்தார். தொழிலாளர்கள் ஒருவரையொருவர் பரஸ்பரம் நேசிப்பதாலும் ஒருவருக்கொருவர் உதவிசெய்வதாலும் பொருளாதாரக் குணவியல்களில் விடுதலைபெறலாமென்று நம்பினார். 1863இல் சமஷ்டித்தத்துவத்தைப் பிரகடனப்படுத்துவதன் மூலம் அரசபலாத்காரத்தை அகற்றமுடியாதென்றும் சமஷ்டிமுறைமூலம் அதிகாரத்தைப் பரவலாக்கி அதைக் குறைத்துக்கொள்ள முடியுமென்றும் ஆனால் அராயகம்தான் சிறந்ததென்றும் அரசபலாத்காரம் இல்லாததென்றும் கூறினார்.

மாக்ஸ் தனது ~மெய்யியலின் வறுமை| என்ற புத்தகத்தில் புறுடோனின் குட்டிமுதலாளித்துவ கருத்துவாதப் பொருளாதார தத்துவார்த்தப் போதனையைத் தகர்த்தெறிந்தார். இளம் மாக்சினது சிந்தனையிலே இயங்கிய சடவாதம் ததும்பி வழிவதையும் எதிர்காலத்தில் எழுத இருந்த ~மூலதனம்| புத்தகத்தின் கரு கர்ப்பமாவதையும் அந்த நூலிற் காணலாம். இன்னும் மேலாக இந்தப் புத்தகம் விமர்சனக் கலைக்கு ஓர் பதச்சோறு. மாக்ஸ் ஒரு நாளும் தனது சொந்தப் புரட்சிக்கரக் கருத்துக்களை தானே முதற்கண் பிரேரித்தது கிடையாது. மற்றயவர்களின் கருத்தை விமர்சிக்கும் பொழுது அவர்களின் தவறுகளை வரலாற்றுரீதியாகவும் பலபக்கப் பார்வையோடும் தொகையிட்டு முழுமையாக எந்தவித சிலேடைக்கும் வியாகூலத்திற்கும் இடம் விடாது தெட்டத்தெளிவாக ஸ்தூலமாக விளக்கிய பின்னர் தனது புதிய புரட்சிகரமான சொந்தக் கருத்துக்களான பொருள்முதல்வாத நோக்கிலான வரலாற்றையும் உற்பத்திச்சக்திகளுக்கும் உற்பத்திஉறவுகளுக்கும் உள்ள பரஸ்பர தொடர்புகளையும் நேரடியாக விளக்கிக் காட்டி அப்போது நிலவும் உற்பத்தி தரும் சமூக உறவுகளின் அருவப்படுத்தலே பொருளாதார வகையினங்களின் தத்துவார்த்த வெளிப்பாடு என்பதற்கு பொருள் முதல்வாத விளக்கம் தருவர். விமர்சனத்தின்போது விசமத்தனமாய் குறைகூறிவிட்டு இறுமாப்போடு இறும்பூதெய்தியவர் அல்லர். தனது சொந்தக் கருத்துக்களைப் பிரேரித்து வேண்டிக்கட்டி காலத்தின் நீதி வழங்கலுக்குக் காத்திருப்பார். அவர் அப்புத்தகத்தை நண்பனான புறுடோன் காரசாரமான உனது விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் என்று கடிதம் எழுதியதன் பேரிலேயே எழுதினார். எழுதும்பொழுது விஞ்ஞானத்திற்குத் துரோகமிழைக்காமல் தனது நட்பைத் தாரைவார்த்தார். முழுமையாகக் கரிசனையோடு கட்டாயம் பலமுறை படிக்கவேண்டிய அந்த நூலிலிருந்து.

'முதலாளித்துவ உற்பத்திஉறவுகளான உழைப்புப்பிரிவினை, கடன், மதிப்பு, பணம் முதலியவற்றை நிலைபேறுடைய, மாற்றவொணாத, நிரந்தரமான வகையினங்களாகப் பொருளாதாரவாதிகள் காட்டுகிறார்கள். தயார்நிலையிலே தம் எதிரே உள்ள இவ்வகையினங்களை வைத்துக் கொண்டு திரு. புறுடோன் இந்த வகையினங்கள், கோட்பாடுகள், விதிகள், கருத்துக்கள், எண்ணங்கள் ஆகியன அமைவுற்றதன் செய்கையை, அவற்றின் தோற்றத்தை நமக்கு விளக்க விரும்புகிறார்.

மேலே சொன்ன உறவுகளில் எப்படி உற்பத்தி நிகழ்கிறது என்பதை பொருளாதாரவாதிகள் விளக்குகிறார்கள். ஆனால் இந்த உறவுகளே எப்படி உற்பத்தியாகின்றன என்பதை அதாவது அவற்றை ஈன்றெடுத்த வரலாற்று இயக்கத்தை விளக்குவதில்லை.

'திரு புறுடோன் என்கின்ற பொருளாதாரவாதிக்கு நன்றாகப் புரியும், மனிதர்கள் திட்டவட்டமான உற்பத்திஉறவுகளிலே இருந்து கொண்டு கம்பளி, பஞ்சு, பட்டுத் துணிகளைச் செய்கிறார்கள் என்று. ஆனால் கம்பளி, பஞ்சு முதலான துணிகளை உற்பத்தி செய்வது போலவே இந்த திட்டவட்டமான உற்பத்திஉறவுகளையும் மனிதர்களே உற்பத்தி செய்கிறார்கள் என்பதைத்தான் அவர் புரிந்து கொள்ளவில்லை. சமுதாய உறவுகள் உற்பத்திச்சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. புதிய உற்பத்திச்சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்திமுறையை மாற்றிக்கொள்கிறார்கள். உற்பத்திமுறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும்முறையையும் மாற்றிக்கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றிவிடுகிறார்கள். கையால் ஆட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது. நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழிற்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.

தமது பொருள் உற்பத்திக்கும் தரத்துக்கும் பொருத்தமாக தமது சமுதாய உறவுகளை நிறுவிக்கொள்கிற அதே மனிதர்கள்தாம்,அந்தச் சமுதாய உறவுகளுக்குப் பொருத்தமாகக் கோட்பாடுகளையும் கருத்துக்களையும் வகையினங்களையும் உற்பத்தி செய்கிறார்கள்.
ஆகவே இந்தக் கருத்துக்களும் இந்த வகையினங்களும் வெளியிடுகிற உறவுகள் எந்த அளவுக்கு நிரந்தரமானவையாக இல்லையோ அதே அளவுக்குத் தாமும் நிரந்தரமானவை அல்ல. அவை வரலாற்று ரீதியான, தற்காலிகமான விளைபொருட்களே.

உற்பத்திச்சக்திகளின் வளர்ச்சியிலே சமுதாய உற்பத்தியின் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஓர் இடையறாத இயக்கம் இருக்கிறது. மாற்றவொணாத ஒரே விஷயம் இயக்கத்தின் சூட்சுமத் தன்மையேயாகும் அது ~சாகாவரம் பெற்ற சாவு|.
'மனிதர்கள் தாங்களாகவே ஏதாவதொரு சமுதாயத்தைத் தேர்ந்து கொள்ளச் சுதந்திரம் பெற்றிருக்கிறார்களா? நிச்சயமாகவில்லை.'
'தமது வரலாற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் பொருளாதாரச்சக்திகளை தேர்ந்து கொள்ள மனிதர்கள் சுதந்திரமுள்ளவர்களாயில்லை." 'எந்தப் பொருளாதார வடிவங்களில் மனிதர்கள் உற்பத்தி செய்தும், நுகர்ந்தும், பரிமாற்றம் செய்தும் வருகிறார்களோ அந்தப் பொருளாதார வடிவங்கள் தற்காலிகமானவை, வரலாற்று ரீதியானவை"".

கம்பன், மில்ரன், வைற்லிங், டால்ஸ்டாய், யேசு போன்றோரின் சமத்துவ கொம்யூனிசத்திற்கும் மாக்சியம் சொல்லும் கொம்யூனிசத்திற்குமுள்ள வித்தியாசத்தை ஏங்கல்ஸ் ~மெய்யறிவின் வறுமையின்| முகவுரையிலே விளக்குகிறார்.

'சமுதாய விளைபொருள் முழுவதும் தமது விளைபொருள் என்கின்ற முறையில் தொழிலாளர்களுக்குச் சொந்தமாகும். ஏனெனில் அவர்கள் மட்டுமே உண்மையான உற்பத்தியாளர்கள் என்னும்படியான ரிக்கார்டோ தத்துவத்தின் மேற்கூறிய செயற்பாடு நேராகக் கம்யூனிசத்திற்குக் கொண்டு செல்கிறது. ஆனால், மேலே மேற்கோள் காட்டிய பகுதியில் மார்க்கிசம் குறித்துக் காட்டுகிறபடி, புறவடிவு வகையிலே அது பொருளாதாரரீதியிலே தவறாகும். ஏனெனில் அது வெறுமனே நீதிநெறிமுறைமையை அரசியல் பொருளாதாரத்தில் செயற்படுத்துவதாகும். முதலாளித்துவ பொருளாதாரத்தின் விதிகளின்படி, விளைபொருட்களின் மிகப் பெரும்பகுதி அதை உற்பத்தி செய்த தொழிலாளர்களுக்குச் சொந்தமாக இல்லை. அது அநியாயம், அப்படி இருக்கக் கூடாது என்று இப்போது சொல்வோமானால் அதற்கும் அரசியல் பொருளாதாரத்துக்கும் உடனடி சம்பந்தம் ஒன்றும் இல்லை. இந்தப் பொருளாதார உண்மை, நமது நீதி நெறி உணர்ச்சிக்கு முரண்பாடாக இருக்கிறது என்று மட்டுமே சொல்லிக்கொள்கிறோம். எனவே தான், இதனை எப்போதும் மார்க்ஸ் தமது கம்யூனிச கோரிக்கைகளுக்கு ஆதாரமாக கொள்ளவில்லை. முதலாளித்துவ உற்பத்திமுறையின் தவிர்க்கமுடியாத வீழ்ச்சியையே ஆதாரமாகக் கொண்டார். அவ்வீழ்ச்சி நம் கண்ணெதிரே மேன்மேலும் அதிகரித்த அளவிலே தினந்தோறும் நிகழ்ந்து வருகிறது."

'கேடான ஆட்சி ஒரு காரணமல்ல, அது ஒரு பி;ன்விளைவுதான். அது படைப்பாளி அல்ல அதுவே படைக்கப் பெற்றது. அது சொத்துடைமையின் சமமற்ற நிலை பெற்றெடுத்த பிள்ளையாகும் என்பதையும் சொத்துடமையின் சமமற்ற நிலை நமது தற்கால சமுதாய அமைப்பு முறையோடு பிரிக்கவொணாதபடிக்கு பிணைக்கப் பட்டிருக்கிறது." என்பதை மாக்ஸ் நிர்மாணித்து புறுடோனின் பொருளாதார தத்துவத்தைத் தகர்த்தெறிந்தார்.

செப்டம்பர் 7, 1867 முதலாமகிலத்தின் லவ்சான காங்கிரஸ் தொழிலாளி வர்க்கத்தின் சமுதாய விடுதலை என்பது அரசியல் விடுதலையில் இருந்து பிரிக்கவொணாதது என்று பிரகடனப்படுத்தியது. அராயகவாதிகள் பிரேரித்த அரசியல் செய்யக்கூடாது. பாராளுமன்றத் தேர்தலிலே பங்குகொள்ளக்கூடாது. தொழிற்சங்கமாக இயங்கிப் போராடக் கூடாது. தொழிலாளர்கள் சுதந்திரமாக ஒருபுரட்சிக் கட்சியை கட்டி வளர்க்கக்கூடாது என்ற தீர்மானங்கள் லவ்சனாக் காங்கிரசிற் தோற்கடிக்கப்பட்டது. அந்தக் காங்கிரஸ் தொழிலாளிவர்க்கத்தின் சமுதாய விடுதலை என்பது அரசியல் விடுதலையில் இருந்து பிரிக்கவொணாதது என்று பிரகடனப்படுத்தியது.

பாரிஸ் கொம்யூன் தொழிலாளிவர்க்கத்தின் அரசாங்க வடிவமொன்று மாக்ஸ் சுட்டிக்காட்டி வர்க்கப்போராட்டம் தான் தொழிலாளிவர்க்கத்தின் பொருளாதார சமூகவிடுதலையை தரவல்லது என்பதையும் நிறுவிக்காட்டி புரட்சி, அரசு பற்றிய தத்துவத்தால் புறுடோனிசத்தைப் பிழையென்று நிறுவிக்காட்டினார். முதலாம் அகிலத்திலுள்ள பிரெஞ்சுக் கிளையில் அதிகம்பேர் இடது புறுடோனிஸ்ட்டாகவும் அதேவேளையில் பாரிஸ் கொம்யூன் தலைவர்களாகவும் இருந்ததே பாரிஸ் கொம்யூன் வீழ்ச்சிக்கு காரணமாகும். 1891இல் ஏங்கல்ஸ் கூறுகையில் பாரிஸ் கொம்யூன் தான் சோஷலிசத்தின் புறுடோனின் பள்ளியின் சுடலைக் கல்லென்று கூறினார்.

பாரிஸ் கொம்யூன் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டது என்று சொல்லவந்த மாக்ஸ்:

'ஒவ்வொரு புரட்சிக்குப் பிறகும் தியோர் பாவர் டியூக் போர், கர்னியே-பழே (இதே தரத்தைக் கொண்ட சில போக்கிரிகள் மட்டுமே இவர்களுக்கு உதவியாக பலத்தைக் கொடுக்கிறார்கள்.) ஆகியவர்களைப் போன்ற காலாவதியாகிப்போன நாடாளுமன்றக் கோமாளிகளும் சூழ்ச்சிக்காரர்களும் மேற்பரப்பில் தொடர்ந்து மறுபடியும் தோன்றுவதும் நிர்வாக அதிகாரத்தைத் தகாத வழியில் கைப்பற்றுவதும் எப்படியென்று கேட்கப்படலாம். இந்த மனிதர்கள் எப்பொழுதுமே புரட்சியைத் தங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டு, புரட்சிக்குத் துரோகம் செய்து, புரட்சி செய்த மக்களை சுட்டுக்கொன்று, முந்திய அரசாங்கங்களிடமிருந்து பறித்த சில சலுகைகளை (அவற்றை இவர்கள் எதிர்த்தவர்கள்.) தாங்கள் எடுத்துக்கொண்டதால் அதை எப்படி நிறைவேற்றமுடியும்.

இது மிகச் சாதாரண விஷயமே. பெப்ரவரி புரட்சிக்குப்பின் தியுயோரைப் போல அவர்கள் மிகவும் வெறுக்கப்பட்டாற்கூட, பொதுமக்களுடைய பெருந்தன்மை அவர்களை விட்டுவிடுகிறது. மக்களுடைய ஒவ்வொரு வெற்றிகரமான எழுச்சிக்குப் பின்பும் மக்களின் உறுதியான எதிரிகள் சமரசம் என்று கூக்குரலிடுகிறார்கள். வெற்றியினால் ஏற்பட்ட உற்சாகத்தின் முதல் வினாடிகளில் மக்களும் அதை எதிரொலிக்கிறார்கள். அந்த முதல் வினாடிக்குப் பின் மக்களிடம் சடத்துவ சக்தி இருக்கின்றவரை தியோர் மற்றும் டியுக்போரைப் போன்ற நபர்கள் வேண்டுமென்றே தங்களை மறைத்துக் கொள்கிறார்கள். இருட்டில் உழைக்கிறார்கள். மக்கள் நிராயுதபாணியாக்கப்பட்டவுடன் அவர்கள் மறுபடியும் தோன்றுகிறார்கள். அப்பொழுதே முதலாளிவர்க்கம் அவர்களைத் தமது தலைவர்கள் என்று பேரொலியுடன் பாராட்டுகிறது.

அல்லது பாவ்லர், கர்னியே-பழே, யூல் சிமோன், இதரர்கள் போலவே, செப்டம்பர் 4ஆம் திகதிக்குப் பின் தயோரைப் போல அவர்கள் லூயி பிலிப்பின் கீழ் ~கவுரவமான| குடியரசுவாத எதிர்க்கட்சியாகக் கருதப்பட்டவர்கள். இதுவே பின் லூயி பொனப்பாட்டின் கீழ் நாடாளுமன்ற எதிர்க்கட்சியாயிற்று, புரட்சியானால் அவர்கள் அதிகாரத்திற்கு உயர்த்தப்படுகின்றபொழுது அவர்கள் துவக்கி வைக்கின்ற பிற்போக்கு ஆட்சிமுறைகள் உண்மையான புரட்சிக்காரர்களை வெளியேற்றி, கொலைசெய்து நாடுகடத்தி அவர்களை எதிர்க்கட்சி ஆக்குகிறது. 'மக்கள் அவர்களுடைய கடந்தகாலத்தை மறந்து விடுகிறார்கள். முதலாளிவர்க்கம் அவர்களை தங்களுடைய நபர்களாகக் கருதுகிறது. அவர்களுடைய இழிவு நிறைந்த கடந்தகாலம் மறக்கப்படுகிறது. இவ்வாறாக அவர்கள் தங்களுடைய துரோகத்தையும் இழிவான செயலையும் மறுபடியும் தொடங்குவதற்காகத் தோன்றுகிறார்கள்."

-மார்க்ஸ் பிரான்சில் வர்க்கப்போராட்டங்கள்

இதுபோன்ற எண்ணற்ற புரட்சிகள் தோற்கடிக்கப்பட்ட நுட்பங்களை இடித்துச் சொல்லும் ஓர் உருக்குறுதி வாய்ந்த மத்தித்துவப் புரட்சிக்கட்சி இருந்தால் மாத்திரம் தான் எழுச்சிகொண்ட புரட்சிகளை எதிர்ப்புரட்சியிலிருந்து காப்பாற்றலாம். வரலாற்றில் எத்தனையோ புரட்சிகள் ஒரு போல்சவிக் கட்சிபோன்ற அனுபவச்செழுமை நிறைந்த புரட்சிக்கட்சி இல்லாமையால் வெற்றியின் விளிம்பில் தோல்வியை முத்தமிட்டன.
மார்ச் 21, 1919இல் உண்டாகிய சோவியத் கங்கேரி ஆகஸ்ட் 1, 1919 தோற்கடிக்கப்பட்டது. ஏப்ரல் 14, 1919 ஏற்படுத்தப்பட்ட முன்னிச்சின் பவேரிய சோவியத் குடியரசு மே 1, 1919 தோற்கடிக்கப்பட்டது. 1918 இலையுதிர்காலத்து ஜப்பானியத் தொழிலாளர்களின் எழுச்சி அந்த மக்களின் 25 வீதமான மக்களை ஒடுக்கி மிக்காடோ அரசாங்கத்தாற் தோற்கடிக்கப்பட்டது.

ஜேர்மனியில் ஜனவரி 1918 பொதுவேலைநிறுத்தம் 1919 ஜனவரி-மார்ச் புரடசிகர எழுச்சி, 1920 கப்புச் சதி, 1921 பெரிய எழுச்சி, 1923இல் ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய அத்தனை நிலைமைகளும் இருந்தன. இந்தா பிடி சோஷலிசப் புரட்சி வருகிறேன் என்றிருந்தது. உடனே அது எதிர்ப்புரட்சியாக மாறியது. 1920இல் இத்தாலியில் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளையும் மில்களையும் எஸ்டேட்களையும் கைப்பற்றியிருந்தும் கூட சோஷலிசப் புரட்சியை முழுமையாக்க முடியாமற்போயிற்று. இப்படித் தொழிலாளர்களின் எத்தனையோ எழுச்சிகளைக் காட்டமுடியும். அவை ஒவ்வொன்றும் ஒரு சுயாதீனமான பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்சியின் தேவையையும் அந்தக் கட்சியின் குணாம்சம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவைகளை போல்சவிக்கட்சியோடு ஒப்பிட்டுக் காட்டியுமே சென்றன.

பாரிஸ் கொம்யூன் காலத்தில் அரசைப்பற்றி சொல்லவந்த மாக்ஸ், 'அரசுகள் பிரமாண்ட அளவிலான நிரந்தர இராணுவங்களையும் ஏராளமான அரச புல்லுருவிகளையும் மாபெரும் தேசியக்கடன்களையும் ஏற்படுத்துவதில் மையங்கொண்டிருந்தன. ஆனால் அரசு என்ற இரத்தமுறிஞ்சும் இயந்திரம் இரண்டாவது பேரரசின் கீழ் மட்டுமே அதன் கடைசி வளர்ச்சியை அடைந்தது. நிரந்தரமான இராணுவத்தையும் அனைத்தையும் இயக்குகின்ற அதிகாரவர்க்கத்தையும், எல்லோரையும் முட்டாளாக்குகின்ற மதக்குருக்களையும் அடிமைப்புத்தியுள்ள நீதிமன்றங்களின் படிநிலைவரிசையையும் கொண்ட அரசாங்க அதிகாரம் சமூகத்திலிருந்து மிகவும் சுதந்திரமடைந்துவிட்ட படியால் இரைதேடி அலைகின்ற கொள்ளைக்கூட்டத்தைத் தனக்கு பின்னால் வைத்திருக்கின்ற ஒரு அருவருப்பான, சாதாரணமான துர்ச்சாகசக்காரன் அதை ஆட்சிசெய்யப் போதுமானதாக இருந்தது.

பெருந்திரளான பொதுமக்களின், அதாவது உற்பத்தி செய்கின்ற பெருந்திரளான மக்களின் பெயராலும். பகிரங்கமாக அவர்களுடைய நலன்களுக்காகவும் புரட்சி நடைபெறுவது இதற்கு முந்திய எல்லா புரட்சிகளையும் போல் இந்தப் புரட்சியிலும் ஒரு கூறாக இருக்கிறது. மக்கள் முதல் எழுச்சிக்குப்பின் தங்கள் ஆயுதங்களை எறிந்துவிடாதிருப்பதும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்களின் குடியரசுவாதக் கோமாளிகளின் கைகளில் அதிகாரத்தை ஒப்படைக்காதிருப்பதும் கம்யூனை ஏற்படுத்தியதன் மூலம் அவர்கள் புரட்சியின் நடைமுறை நிர்வாகத்தை தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டு அதே சமயத்தில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தினரின் அரசாங்க இயந்திரத்திற்கு, அரசஇயந்திரத்துக்குப் பதிலாகத் தங்களுடைய சொந்த அரசாங்க இயந்திரத்தை ஏற்படுத்தி வெற்றி கிடைக்கின்றபொழுது மக்களுடைய கைகளிலேயே அந்த அதிகாரத்தை தக்கவைப்பதற்குரிய சாதனத்தை கண்டுபிடிப்பதும் இங்கே புதிய அம்சம் எனலாம்.
தொழிலாளிவர்க்கத்தின் மெய்யான விருப்பார்வங்களையும் உண்மையான இயக்கத்தையும் பற்றி எவ்விதத்திலும் அறிவில்லாத இந்தப் பரோபகார ஆதரவாளர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். குறுங்குழுக்களை நிறுவிய சோஷலிசவாதிகள் அனைவருமே உலக அரங்கத்தில் தொழிலாளிவர்க்கம் வரலாற்றின் உந்து சக்தியாக நுழைவதற்கு முதலாளித்துவச் சமுதாயத்தின் முன்னேற்றத்தின் மூலம் போதிய பயிற்சியளிக்கப்பட்டு ஸ்தாபனமாக அமைக்கப்படாத காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். தொழிலாளி வர்க்கத்தினரின் விடுதலையின் சடத்துவ நிலைமைகள் பழைய உலகத்தில் போதிய அளவுக்கு முதிர்ச்சி அடையவுமில்லை. அவர்களுக்குத் துன்பம் இருந்தது. ஆனால் அவர்களுடைய சொந்த இயக்கத்துக்குரிய நிலைமைகள் இன்னும் ஏற்படவில்லை. இக்குறுங்குழுக்களின் கற்பனாவாத ஸ்தாபகர்கள் இன்றைய சமுதாயத்தைப்பற்றி தங்களுடைய விமர்சனத்தில் கூலி உழைப்புமுறை மற்றும் வர்க்கஆதிக்கத்தின் அனைத்துப் பொருளாதார நிலைமைகளையும் அகற்றுதல் என்ற அந்தச் சமூக இயக்கத்தின் இலட்சியத்தை தெளிவாக விவரித்தாலும், அவர்கள் சமூகத்தில் அதன் மாற்றத்துக்கு அவசியமான சடத்துவ நிலைமைகளைப் பார்க்கவில்லை. தொழிலாளிவர்க்கத்திடமும் அந்த இயக்கத்தின் அமைப்புரீதியான, உணர்வுபூர்வமான சக்தியைப் பார்க்கவில்லை. அவர்கள் ஒரு புதிய சமூகத்தைப்பற்றி புனைவுச் சித்திரங்களையும் திட்டங்களையும் தீட்டி இயக்கத்திற்கு அவசியமான வரலாற்று நிலைமைகள் இல்லாததை ஈடுசெய்ய முயன்றார்கள். அவற்றின் பிரச்சாரத்தில் மீட்சிக்குரிய உண்மையான வழிகளை அவர்கள் கண்டார்கள். தொழிலாளிவர்க்கத்தின் இயக்கம் யதார்த்தமாகிய வினாடியிலிருந்து இப்புனைவுக் கற்பனைகள் மறைந்தன. இக்கற்பனாவாதிகளின் குறிக்கோள்களை தொழிலாளிவர்க்கம் கைவிடவில்லை. அதற்குப் பதிலாக அவற்றை நிதர்சனமாக்க வல்ல சடத்துவசாதனங்களை அது கண்டு கொண்டதே அதற்குக் காரணம். அவற்றுக்குப் பதிலாக இயக்கத்தின் வரலாற்று நிலைமைகளைப்பற்றி உண்மையான நுண்ணறிவு ஏற்பட்டது. தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க ஸ்தாபனம் மென்மேலும் பலமடைந்தது. ஆனால் கற்பனாவாதிகள் பிரகடனம் செய்த கடைசி இரண்டு குறிக்கோள்களும் பாரிஸ் புரட்சியும் அகிலமும் பிரகடனம் செய்திருக்கும் கடைசிக் குறிக்கோள்களே! அவற்றை அடைகின்ற வழிகள் மட்டுமேவேறு"

-மாக்ஸ் பிரான்சில் வர்க்கப்போராட்டங்கள்-

ஸ்ரேர்னர் ளுவசைநெச

ஜேர்மனியில் ஸ்ரேர்னர்தான் அராயகத்தைப் பாவனை செய்தார். இவர் ஏங்கல்ஸ்சோடு பெர்லினில் இளைய கெகலிய இயக்கத்தில் இருந்தவராகும். ஸ்ரேர்னர் தனது ~ஒரேயொரு தனது சொத்துடமை| (1845) என்ற புத்தகத்தில் அகவயவாதத்தையும் தனிமனிதவாதத்தையும் தனது தத்துவமாக வெளிப்படுத்துகிறார். அவரது தத்துவங்களில் உலகமும் உலகத்தின் மனிதர்களும் வர்க்கப்போராட்டமும் போட்டியும் என்பவைகளில் தனிமனித விருப்பங்களையும் ஆசை அபிலாசைகளையும் ஜேர்மனியின் குட்டிமுதலாளித்துவ புத்திஜீவிகளின் பிரதிபலிப்புகளையும் வெளிப்படுத்துகிறார். வரலாற்றுரீதியற்ற நிதர்சனத்தோடு எந்தவித சம்பந்தமும் இல்லாத எழுத்துக்களில் அதீத அகவய மனப்பாங்கோடு உலகமே தனது ~தனிச்சொத்தென்றும்| நானே எனது நான் என்றும் நானே எனது உண்மையான நண்பனென்றும் அது ஒன்றுதான் நிதர்சனமானதென்றும் அதற்கப்பால் வேறு நிதர்சனமில்லையென்றும் அரச அதிகாரமும் ஆதிக்கமும் தன்னை அங்கீகரிக்காதென்றும் கூறினார். இந்த ~நான்| இந்த ~என்நலம்| எல்லாவற்றிற்கும் முன்னிலையில் நின்று எல்லாவற்றிற்கும் எதிராக நின்று அவைகளின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும். ஸ்ரேர்னர் குட்டிமுதலாளித்துவத்தின் ஆத்மாவாக தனிமனிதத்துவமும் தன்னலமுமே தனது தன்னுணர்மைத்தத்துவத்தினதும் நடவடிக்கைகளினதும் அடிப்படை என்றியம்பினார். மனிதர்கள் இயற்கையிலேயே தன்னை மையமாக உடையவர்கள் என்றும் தனக்கு மிஞ்சியதுதான் தானம் என்றும் பிரகடனப்படுத்தினார். ஒரு சமூக ஸ்தாபனத்திலே இயங்குவதென்பது தனது தனிமனிதத்துவத்தை நசுக்கித் தனது சுயத்தைக் கொன்றால் மாத்திரம்தான் முடியுமென்றும் அதுவே ஒரு சிறைக்கூடமென்றும் கூறினார். இதன் மூலம் குட்டிமுதலாளித்துவத்தைத் தனிமைப்படுத்தி அரசியல்ரீதியிலும் பொருளாதாரரீதியிலும் சக்தியற்றவர்களாக்கி இதனூடு அவர்களை இனிது இனிது ஏகாந்தம் இனிதென்று சொல்லப்பண்ணி தன்னையும் தனது செல்வத்தையும் உலகில் வளர்ப்பதே கடமையென்றாக்கி தாமே தங்களின் உலகமாக வாழ்வதே சரியென்றார். தானும் தனது தேவைகளையும் தவிர மற்றவர்கள் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லையென்று வாழ்ந்தால் உலகில் காட்டுமிராண்டித்தனம் தான் கோலோச்சும். மனிதன் ஒரு சமூகமிருகமென்றும் அனேக மனிதர்களோடு கலந்துரையாட - அனேகமனிதர்களோடு பழகிக் கூடிவாழும்போது மனிதர்கள் மேலும் மேலும் மனிதத்துவத்தைப் பெறுவார்கள் என்று கேகல் ஏற்கனவே கண்டிருந்தார். ஸ்ரேர்னர் தனது தனிமனிதத்துவத்தால் முழுமானிட சம்பிரதாயங்களையும் பகைத்து அடிப்படை ஜேர்மனியத் தத்துவத்தையும் இலக்கியத்தையும் பகைத்து மற்றைய மனிதர்களுக்கு தான் செய்யும் கடமை ஒன்றுமில்லையென்று சொல்லி மற்றைய மனிதர்கள் துன்பமும் கஷ்டமும் அடையவிடாதபடிக்கு தான் நடக்கவேண்டிய நன்னெறியொன்றுமில்லை என்றும் அரசாங்க சமுதாய ஒழுங்குகள் என்பது ஒரு கற்பனையான காட்டுமிராண்டிச் சமுதாய ஒழுங்குகள் என்றும் அவைகள் மனிதர்களின் சுய ஆளுமைக்கு இடைஞ்சலானவை என்றும் கூறினார். உலகின் அதியுயர் விதியும் கடமையும் என்னைப் பேணுவதுதான். எனக்குமேல் உலகில் ஒன்றுமில்லை. தன்னைவிட்ட சம்பிரதாயம் மேலுமில்லை கீழுமில்லை. பிரதானமானது என்னவென்றால் தனிமனிதத்துவத்தால் எந்த ஆதிக்கத்தையும் ஆளுமையையும் எதிர்த்து அராயகத்தை நிர்மாணிப்பதால் ஒவ்வொரு தனிமனிதர்களும் பூரண சுதந்திரம் பெற்று, அரசாங்கம் சமுதாயம் என்ற கற்பனைக் குளறுபடிகளை தன்னலம் கொண்ட மனிதர்களின் கூட்டத்தால் இடம் பெயர்க்கவேண்டும்.

அந்தக்கூட்டத்திலே உனது சொந்த ஆதிக்கமும் சொந்த உடைமையும் உன்னைப் பலமாக்கி உன்னைச் சமுதாயத்தில் பலவானாக்கும்.
மாக்சும் ஏங்கல்சும் தங்களது ~ஜேர்மானியத் தத்துவத்தில்| ஸ்ரேர்னரை விமர்சித்து அவரது தத்துவத்திலுள்ள விஞ்ஞான விரோதத்தை நிறுவிக்காட்டினார்கள்.

கவுட்ஸ்கி கொம்யூனிசவாதியாக இருந்து லெனின் போன்றோரைக் கற்பிக்கும் காலத்தில் கான்ரின் நன்னெறியின் அடிப்படை விதிகளை விமர்சிக்கும் பொழுது:- ~கான்றுக்கு தனிமனிதத்துவத்தையும் மனிதர்களையும் மாத்திரம் தெரியும். அவர் சமுதாயத்தை ஒட்டுறவோ பிணைப்போ இல்லாத ஒன்றையொன்று புறநீங்கலாக வைத்திருக்கும் தனித்தனி மனிதர்களின் குவியலாகப் பார்க்கிறாரேயொழிய அந்த சமுதாயமென்ற ஜந்துவின் ஒவ்வொரு கலங்களே தனி மனிதர்களென்றும் இவர்கள் தனித்து ஒருவரையொருவர் மாறிமாறி எதிர்ப்பதை மாத்திரம் செய்யவில்லை. மாறாக தங்களுக்குள்ளே உழைப்புப் பிரிவினையைச் செய்து ஏதோ ஒரு சமூகவடிவத்தில் சேர்ந்து வாழ்கிறார்கள். அந்தக் கூட்டு வாழ்க்கையானது அவர் இவரின் நல்ல குணம் கெட்ட குணத்தாலோவல்ல மாறாக அங்கே நிலவுகின்ற உற்பத்திச்சக்திகளுக்கு இசையவே அப்படி வாழப்பண்ணியது. எவ்வளவுக்கெவ்வளவு முதலாளித்துவ சமுதாயம் வளர்ச்சி கண்டுள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு தனி மனிதர்களின் கடமைகளை ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு எதிராக்கி புரியாத புதிராக்கியும் சிக்கறுக்க முடியாத சிக்கலாக்கியும் அதனூடு தனி அங்கங்களின் கடமைகளை ஒட்டுமொத்தத்திற்கு எதிராக்கி அது மேலும் மேலும் நடைபெறவே தனிப்பட்ட நலன்களுககும் ஒட்டுமொத்த நலன்களுக்குமிடையே முட்டிமோதல் நடைபெற்று, அதனூடு தனித்தனி சமூக ஸ்தாபனங்களுக்கிடையே முட்டிமோதல்களையுடைய அங்கங்களின் சேர்க்கையால் சமுதாயம் உண்டாக்கப்பட்டிருக்கிறது. இந்த முட்டிமோதல்களின் கடைசிவடிவமே தத்துவார்த்த வடிவமாகியுள்ளது. இங்கே எந்தவடிவம் பேரழிவைத் தோற்றுவிக்கிறது என்பதற்கு கான்ரின் நன்னெறியிலே விடை கிடையாது. ஏனெனில் சமுதாயவிதிகளின் எல்லாவடிவங்களும் பொருளாதார உறவுகளின் நிபந்தனைக்கு உட்பட்டதென்பதை கான்ரிய நன்னெறி கருத்திற் கொள்ளவில்லை."

ஒட்டுமொத்த இயற்கைவிதிகளின் விளையுளாகவே பொருளாதார உறவுகளும் ஒரு தொகை பொருளாதார உறவுகளின் நிபந்தனைக்குட்பட்டே சமுதாயவிதிகள் அமைகின்றன.

பகூனினும் பகூனினிச அராயகமும்.

பத்;தொன்பதாம் நூற்றாண்டில் அனாக்கிசத்திற்குத் தலைமை கொடுத்தவர் மைகேல் பகூனின் ஆவர். இவர் ஒரு றைசியப் புரட்சியாளர். இவரை ஏங்கல்ஸ் முதன் முதற் சந்திக்கும் பொழுது பிரெஞ்சும் ஜேர்மனும் நறுக்காகக் கதைக்கக்கூடியவராக இருந்ததோடு புரட்சி செய்ய வேண்டுமானால் பல மொழிகளிலே புலமை வேண்டும் என்பதையும் உணர்ந்திருந்தார். இவர் ஒரு நிலவுடமையாளனுக்கு மகனாகப் பிறந்து பீற்றர்ஸ் பேக்கில் கல்விகற்றார். குiஉhவநயின் தத்துவ வழித்தோன்றல். பெர்லினிலே கேகலின் தத்துவத்தையும் செல்லிங்கிடமிருந்து ~வெளிப்பாட்டின் தத்துவத்தைக்| கற்றார். 1840இல் பெர்லினில் இடது கெகலியவாதியாக இருந்து ஜேர்மனியில் நிலவிய பிற்போக்குத்தனத்தை எதிர்த்தவர். 1842; சூறிச்சில் வைற்லிங்கோடு நண்பராகி கொம்யூனிசத்தின்பக்கம் ஆகர்சிக்கப்பட்டவர். 1844 பாரிசில் புறுடோனோடும் மாக்ஸ் ஏங்கல்சோடும் நண்பரானவர்.

பகூனினது வெளிநாட்டுப் புரட்சிகர நடவடிக்கையைக் கேள்வியுற்ற றைசிய சார் றைசியாவுக்கு வருமாறு கோரினார். அவர் வராது போகவே அவர் இல்லாமலே வழக்குத் தொடர்ந்து 1844 அவரது குடியுரிமையைப்பறித்து றைசியாவுக்கு திரும்பியதும் சைபீரியாவில் கடூழியத்தண்டனைக்கு அனுப்பப்பட வேண்டும் என தீர்க்கப்பட்டது. 1847இல் பாரிசில் போலந்து (1830-1831) நினைவாண்டுவிழாவில் சாரிசத்தைக் கண்டித்து போலந்து மக்களை றைசிய முற்போக்குச் சக்திகளோடு இணைந்து முழு செலவாக் விடுதலையணியிற் சேரும்படி அறை கூவினார். றைசிய அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தால் பிரான்ஸ் பகூனினை றைசியாவுக்குத் திருப்பி அனுப்பியது.
இவர் 1848-1849 புரட்சியிலே சுறுசுறுப்பாக பங்கேற்றுக் குறிப்பாக சிலேவிக் மக்களின் இயக்கத்தில் வேலை செய்வதோடு 1848இல் பிராக்கில் நடந்த சிலேவிக் காங்கிரசில் பங்குகொண்டு அந்த காங்கிரசின் தலைவர்களில் ஒருவரானதோடு யூனில் நடந்த எழுச்சியிலும் பங்குகொண்டார். கங்கேரியிலும் ஜேர்மனியிலும் உள்ள சிலேவிக் மக்கள் கூட்டாக ஒரு சிலேவிக் குடியரசை நிறுவவேண்டுமென்று கோரினார். 1849 மேயில் திறெஸ்டனில் (சாக்சன்) நடந்த எழுச்சியில் பங்கு கொண்டார். இந்த எழுச்சி நசுக்கப்பட்டு அவர் செம்னிட்ஸ் என்ற இடத்தில் கைதானார். 1850 ஏப்ரல் மாதத்தில் சாக்சனிக்கோடு அவருக்கு மரணதண்டனை வழங்கி மீண்டும் மன்னிப்பளித்து ஆயுள்தண்டனையாக்கியது. 1851இல் சிறைக்குள்ளே செய்த புரட்சிகரப் பிரச்சாரத்தின் காரணமாக 1851 மே மாதத்தில் சாக்சனை ஆஸ்திரியாவிடம் ஒப்படைத்து ஆஸ்திரியாவில் ஓல்பூட்ஸ்கோடு இவருக்கு மீண்டும் மரணதண்டனை வழங்கி மீண்டும் மன்னி;க்கப்பட்டு ஆயுள் தண்டனை ஆக்கப்பட்டது. மீண்டும் ஆஸ்திரிய அரசாங்கத்தால் நிக்கலஸ் மன்னனிடம் கையளிக்கப்பட்டு அலெக்சாய் றவலினிலுள் பீற்றர் பவுஸ் கோட்டைக்குள் அடைக்கப்பட்டார். அங்கே தந்திரோபாயமாக தான் இனிமேல் ஐரோப்பாவில் புரட்சியிற் பங்குபற்றமாட்டேனென்றும் முந்திப் பங்குபற்றியதற்காக மனம் வருந்துகின்றேன் எனவும் சார் மன்னனுக்குக் கடிதமெழுதி மிகப்பாடுபட்டு விடுதலையடைந்து 1857இல் சைபீரியாவிற் குடியேற்றப்பட்டார். 1881;ல் சைபீரியாவிலிருந்து ஜப்பானுக்கும் ஜப்பானிலிருந்து அமெரிக்காவுக்கும் அமெரிக்காவிலிருந்து லண்டனுக்கும் தப்பியோடினார். 1862-1863இல் கேட்சனோடும் ஒகறேவோடும் சேர்ந்து ~நாடும் சுதந்திரமும்| என்ற இரகசிய புரட்சிகர அமைப்பை ஏற்படுத்தினார். 1864-1867இல் இவர் இத்தாலியிலும் சுவிற்சலாந்திலும் வாழ்ந்தார். 1870 செப்ரம்பர் பிரெஞ்சு பிறஸ்சிய யுத்தத்தில் இவர் லியொன் எழுச்சியிற் பங்கு கொண்டு 1874இல் இத்தாலி பொலொக்னா எழுச்சியில் அராயகச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

பகூனின் சுவிற்சலாந்தில் மடிந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். இவரது இந்த மிக நீண்ட விட்டுக்கொடுக்காத செயற்பாடுகளும் தியாகங்களும் அவருக்கு அங்கீகாரத்தையும் ஆளுமையையும் கொடுத்தது. அதன் பலாபலனாய் இன்றுவரை அராயகத்தை பூண்டோடு அழிக்க முடியவில்லை.

பகூனினின் கருத்துப்படி வரலாறு என்பது மெல்லமெல்லவும் வரிசைக்கிரமமாகவும் கூர்ப்படைந்து செல்லும் இந்தக் கூர்ப்பினூடு மிருகங்கள் போல் அடிமையாக வாழும் மனிதன் சுதந்திரமனிதனாக வாழும் நிலைக்குக் கூர்ப்படைவான். இந்தக் கூர்ப்பின் ஆதிவடிவங்களே மதமும் அரசுமாகும். மனிதன் மிருகங்களிலிருந்து சிந்தனையாலேயே வித்தியாசப்படுகிறான். இதுவே மிருகங்களுக்கில்லாத மதம் மனிதனுக்கு உருவாகக் காரணம். அரசு என்பது கொடுங்கோன்மையையும் சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்டது. அதற்காக அது கற்பனையான கடவுளைத் தனக்கு ஆதாரமாகப் படைத்துள்ளது. எதிர்கால சமுதாயம் எல்லையற்ற சுதந்திரமுள்ளதாக மாறிவந்து மனிதர்கள் எல்லாவித ஆதிக்கத்திலிருந்தும் பிரிந்து தனது முழுச் சக்தியையும் பாவித்து பூரணமாக அபிவிருத்தியடைவான்.

பகூனினது அராயகத் தத்துவம் ஸ்ரேனரது தனிமனிதவாதத்திலிருந்தே தொடங்கியது. அவர் எந்தவடிவ ஸ்தாபனத்தையும் நிராகரித்தார். அவர் தொழிலாளிவர்க்க அரசையும் மாக்சிய மூலதத்துவமான பாட்டாளிவர்க்க அரசையும் நிராகரித்தார். அவர் தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் சுதந்திர சம்மேளனத்தைக் கோரினார். அவரது ஆதரவாளர்கள் அரசியலிலே பங்கெடுப்பதை அதுவும் நிலவுகின்ற அரசுவிட்ட எல்லைக்குள் பங்கெடுப்பதை நிராகரித்தனர். பகூனின் சோஷலிசப் புரட்சியின் உண்மையான உள்ளடக்கத்தை விளங்காமல் அதற்கான பொருளாதார அரசியல் நிலைமைகளை விளங்காமல், அதைச் செய்யும் வரலாற்றுசக்தியான தொழிலாளிவர்க்கத்தையும் விளங்கிக்கொள்ளவில்லை. ஒரு வர்க்க சுயாதீனமான தொழிலாளர்வர்க்க கட்சியை உண்டுபண்ணுவதை நிராகரிப்பதோடு தானாகவே வரும் தன்னிச்சையான எழுச்சிவேண்டுமென்றார்.

அதற்கான உந்துசக்தி தொழிலாளர்களோடு சேர்ந்து விவசாயிகளிடத்தும் உதிரிப்பாட்டாளிகளிடத்தும் மாணவர்களிடத்தும் இருப்பதாகக் கண்டார். மாணவர்களிடையே அராயகத்தின் ஆதிக்கம் அதிகமாக வலுத்திருந்தது. பகூனினது அராயகம் என்பது முதலாளிவர்க்க அமைப்புமுறையில் விரக்தியடைந்த குட்டிமுதலாளித்துவப் பகுதியினரின் தன்னிச்சையான எழுச்சியாகும். தனிச்சொத்துடைமையை இல்லாமற் செய்யும்படி கோரிய பகூனின் சிற்றுடமையாளர்களை ஒரு சம்மேளனமாக இணையும்படி கோரினார்.

இவரும் இவரது ஆதரவாளர்களும் ஆயிரத்து எண்ணூற்றி அறுபதுகளில் வித்தியாசம் வித்தியாசமான இரகசிய அமைப்புகளைக் கட்டினார்கள். உதாரணத்திற்கு 'சோஷலிச ஜனநாயகத்தின் சர்வதேச சகோதரத்துவ ஐக்கிய சங்கம். இவர்கள் சர்வதேச தொழிலாளர் சங்கத்தினுள் ஊடுருவி எப்பாடுபட்டும் அதன் தலைமையைக் கைப்பற்ற முயற்சித்தனர். தலைமையிலே இருந்தாற்தான் தங்களது அராயக சிந்தனைகளை சர்வதேச தொழிலாளர் இயக்கத்தினுள்ளே கொண்டுசென்று அதன் நிறுவனத்தை சீர்குலைக்கலாம் எனக் கண்டனர். அவர்கள் மாக்சியத்தைப் பொருளாதாரச் சடத்துவவாதம் என கண்டனர்.

மாக்சும் ஏங்கல்சும் பகூனினுக்கும் அவரின் ஆதரவாளர்களுக்குமெதிராக ஜீவமரணப் போராட்டத்தை நடாத்தினர். அவர்களைத் தொழிலாளி வர்க்கத்தைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் என்று அம்பலப்படுத்தினர். 1872 முதலாம் அகிலத்தின் (சர்வதேச சங்கத்தின்) கவுக் காங்கிரஸ் அவர்களது செயற்பாடுகளையும் சிந்தனைமுறையையும் ஸ்தூலமாக விபரித்துக்காட்டி அவர்களைச் சர்வதேசக் கட்சியிலிருந்து அகற்றினர். அவர்கள் அந்தக் காங்கிரசில் உள்நுளைவதற்காக நானாவித சதிவேலைகளையும், சேறடிப்புகளையும், உளவுவேலைகளையும் பயங்கரவாதமுறைகளையும் பாவித்தனர்.

இவர்களது அடுத்த நோக்கு அராயகக் கொம்யூனிசம். அவர்களது சமூக நன்னெறிக்கொள்ளை பரஸ்பரமாக உதவுவது. அவர்கள் கற்பனையாக அரசில்லாத கொம்யூனிச சமுதாயத்தால் தொழிலாளர்களின் நன்னெறிகளைவளர்த்து சமூகநலனுக்கு மேலாக தன்னலங்கொண்ட தனிமனிதர்களை வைப்பதாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்சில் அராயகத் தொழிற்சங்கவாதம் ஆதிக்கம் செலுத்தியது. தொழிலாளிவர்க்கம் அரசியலுக்காகப் போராடுவதையும், அப்போராட்டத்தை நடாத்துவதற்கு தேவையான புரட்சிக் கட்சியையும் அதன் முழுவெற்றியான பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் நிராகரித்தனர். அவர்கள் புரட்சிக் கட்சியிலுள்ள தொழிற்சங்கப் பகுதியினருக்கு பூரணமான சுயாதீனம் யுரவழழெஅல தேவையென்று அடம்பிடித்தனர். இவர்களின் வாரிசுகள்தான் இன்றைய ஓட்டோனோமன்கள். முதலாளித்துவத்தைத் தோற்கடிப்பதிலே தொழிற்சங்கமே நிர்ணயமான பாத்திரத்தை வகுக்குமேயொழிய புரட்சிக்கட்சியல்லவென்று அவர்கள் சொன்னார்கள். தொழிலாளர்கள் புரட்சியில்லாமல் ஒரு பொதுவேலைநிறுத்தத்தின் மூலம் முதலாளித்துவத்தைத் தோற்கடித்து உற்பத்திச்சாதனங்களை சமுதாய உடமையாக்கி உற்பத்தியை ஒவ்வொருவரின் கைகளிலுமெடுக்கவேண்டுமென்று சொன்னார்கள். அக்டோபர் புரட்சி நிதர்சனமாகி பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஏற்பட்டதே அராயகத்தின் தோல்வியாகும்.

முதலாம் அகிலம் தனது கவுக்காங்கிரசில் சில தீர்க்கமான நடைமுறை அனுபவங்களைப் பிரகடனப்படுத்தியது.

உடமை வர்க்கத்தின் காலாகாலமாகத்திரண்டு கெட்டியான நிறுவன அதிகாரத்திற்கு முன்னால் பாட்டாளிவர்க்கத்தால் ஒரு கட்சியாக மாத்திரமே அதுவும் உடைமை வர்க்கத்திலிருந்து தன்னை முற்றிலும் சுயாதீனமாக்கிய தன்னை முற்றிலும் அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் கட்சியாகமாத்திரமே செயற்படமுடியும்.

முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் தங்களது அரசியற் சலுகைகளின்மூலமே தங்களது பொருளாதார ஆதிக்கத்தையும் தொழிலாளர்களை அடிமையாக்குவதையும் நிர்மாணித்து நிலைநிறுத்தி நீடிப்பர். ஆதலால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல் பாட்டாளிவர்க்கத்தின் மிகப் பெருங்கடமையாகும்.

எங்கேயாவது ஒரு ஸ்தாபனமிருந்தால் ஐக்கியப்பட்டுச் செயற்படுவதற்காக சில சுயவிருப்பங்களைத் தியாகம் செய்ய வேண்டுமென்பதை அராயகவாதிகளால் விளங்கமுடியவில்லை. முதலாமகிலம் போராடுவதற்காக அணிவகுக்கப்பட்டதேயொழிய அருமையான தத்துவங்களுக்காகவல்ல.

அடிமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்பட்ட வர்க்கம் தனது சொந்தமுயற்சிகளின்மூலமும் சொந்த செயற்பாடுகளின்மூலம் மாத்திரம்தான் தனக்கான புரட்சிக்கட்சியைத் தானே கட்டிவளர்த்து அந்தப் புரட்சிக்கட்சியின்மூலம் ஒடுக்குமுறை அரசை ஆயுதமேந்திய போராட்டத்தின்மூலம் நிர்மூலமாக்கி தனது அரசை நிர்மாணித்துப் பாதுகாத்து அதன்மூலம் சுரண்டுகின்ற தனிச்சொத்துடமையை இல்லாமற் செய்து உற்பத்தியையும் விநியோகத்தையும் நவீனவிஞ்ஞான வளர்ச்சியின் மட்டத்திற்குப் புரட்சிகரமாக உயர்த்துவதன்மூலம் வர்க்கங்களை இல்லாமற் செய்ய வேண்டும்.

அகிலத்திற்கு யுத்தங்களில் வெற்றியுமில்லை. தோல்வியுமில்லை. அது ய+தவிரோதத்தை றைசியவிரோதத்தால் சமன் செய்யவில்லை. (தமிழ்விரோதத்தை சிங்கள விரோதத்தால் சமநிலையாக்கப்படாது.)

அகிலத்தின் விசாலமான வேலைத்திட்டத்தையும் மிகப்பெரிய குறிக்கோளையும் உன்னதமான இலட்சியத்தையும் குறுங்குழுவாத வேலைத்திட்டத்தால் பிரதியிடக்கூடாது. (உதாரணமாக முதலிற் தமிழீழம் பிறகு சோஷலிசம்......)

பரந்துபட்ட தொழிலாளர்களின் ஆதரவை வெல்வதற்கு கடுமையாக உழைத்து பெரிய அர்ப்பணிப்புக்களைச் செய்யாமல் இலகுவான குறுக்குவழிகளில் எதையும் சாதிக்கமுயல்வது சந்தர்ப்பவாதத்திற்கு வழிதிறந்து காட்டிக்கொடுப்பைப் பூரணப்படுத்தும்.

பேண் காங்கிரசிலே அராயகவாதிகள் வர்க்கங்களையும் தனிமனிதர்களையும் சமப்படுத்துவோம். ஆண்பாலையும் பெண்பாலையும் சமப்படுத்துவோம் என பிரேரித்துத் தோல்விகண்ட படிப்பினையை மனதிற்கொண்டு சோஷலிசம் வர்க்கங்களைச் சமப்படுத்தாது வர்க்கங்களையே இல்லாமற் செய்யவேண்டும்.

அராயகவாதிகளின் வேலைத்திட்டம்.

அராயக இயக்கத்தின் இலக்கு சர்வவியாபகப் புரட்சி. ஒரேதடவையில் சமூக, தத்துவார்த்த, பொருளாதார, அரசியற் புரட்சியைச் செய்தல். ஏனெனில் இப்போதுள்ள அமைப்பு முறை தனிச்சொத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அங்கே சமய, மறநிலைமனோபாவ, முதலாளித்துவத் தத்துவம் அன்றேல் யக்கோப்பியன் புரட்சி அதிகாரம் நிலைகொண்டிருந்தாலென்ன எல்லாவற்றையும் கல்லுக்குமேல் கல்லில்லாமல் தவிடுபொடியாக்க வேண்டும். முதலில் இவைகளை ஐரோப்பாவில் சாதித்து பின் உலகம் முழுவதும் சாதிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு சமாதானம், ஒடுக்கப்பட்டவர்களுக்கு சுதந்திரம், ஆழ்வோருக்கும், சுரண்டுவோருக்கும் இது போன்றவற்றை பாதுகாக்கும் எல்லோருக்கும் சாவுமணி, நாம் எல்லா அரசுகளையும், எல்லா கோவில்களையும் அவர்களின் ஸ்தாபனங்களோடு, சட்டதிட்டங்களோடு, மத, அரசியல், நீதிமுறை, நிதி, பொலிஸ், சர்வகலாச்சாலை, பொருளாதார சமூகம், முழுவதையும் தகர்த்தெறிவோம். இவைகளெல்லாம் மில்லியன் கணக்கான வறிய மனிதர்களை ஏமாற்றி, அடிமையாக்கி, சித்திரவதை செய்து சுரண்டுகின்றன. இதைச் செய்பவர்கள், இந்த அமைப்புக்களை இயக்குபவர்கள், ஆதரித்து லாபமடைபவர்கள், காரியாளர்களும் அதிகாரிகளும், பலபேர் ஸ்தாபனமாக ஐக்கியப்பட்டும் தனிமனிதர்களாகவும் செய்கிறார்கள். இவர்கள் எல்லோரினதும் அழிவிலேயே சுதந்திரக் காற்றை பூரணமாகச் சுகிக்க முடியும்.

அதிகாரத்துவங்கள் தம்மை திருச்சபை என்றும், முடியரசு என்றும் சட்டசபையென்றும், முதலாளித்துவ குடியரசு என்றும், புரட்சிகர சர்வாதிகாரமென்றும் சொல்கின்றன. எம்மைப் பொறுத்தவரை நாம் எல்லாவற்றையுமே வெறுக்கின்றோம். ஏனெனில் எல்லாமே சுரண்டலினதும் கொடுங்கோன்மையினதும் ஊற்றிடங்கள்.

புரட்சியாளர்கள் புரட்சியைச் செய்த மறுநாள் ஒரு புரட்சிகர அரசை அமைத்தால் அது இப்போது இருக்கின்ற எல்லா அரசுகளைக் கூட்டிப் பார்ப்பதிலும்பார்க்க அபாயகரமானது.

ஆகவே அராயகவாதிகளான நாங்கள் புரட்சியாளர்களின் இயற்கையான எதிரிகள், ஆகவே புரட்சியை நிர்மூலமாக்குவதுதான் அராயகவாதிகளது முன்னணிக் கடமையாகும்.

அராயகம் நன்றாக நம்புகிறது புரட்சிகளை தனிமனிதர்களோ இரகசிய ஸ்தாபனங்களோ உற்பத்தி செய்வதில்லை. அவை தானாகவே வரும். அதற்கேற்ற காலமும் நேரமும் வந்தால் வரும். அவை பல சக்திகளால் உற்பத்தி செய்யப்படும். அவை காரண காரியங்களாலும் உண்மையினாலும் வரும். அவை வெகுசனங்களின் ஆழமான பாரம்பரிய உணர்மையாக நீண்டநாட்களாக உருவாகிக்கொண்டுவந்து பற்றிப்படர்ந்து வெடித்துக் கிளம்பும்.

-அராயக சகோதரர்களுக்காக மைகேல் பகூனின் மாக்ஸ் ஏங்கல்ஸ் மொத்தப்படைப்பு பக்கம் 23- பக்கம் 466.

இதுதான் புரட்சிக்குமேற் புரட்சியாகும். இதைச் சாதிப்பதற்கான முதல் நிபந்தனையாக இப்போது ஆட்சிசெய்கின்ற அரசுகளையும் அரசாங்கங்களையும் எதிர்த்து நிலவுகின்ற புரட்சிமுறைகளின்மூலம் போராடக் கூடாது. ஆனால் பெரிய சத்தமாக வாய்கிழியக் கத்த வேண்டும்.
ஆளுகின்ற பொனப்பாட்டிச அரசையல்ல பிறைசிய அன்றேல் றைசிய அரசையல்ல நொருக்கியெறியவேண்டும். ஆனால் ஒரு சூக்குமமான அரசை எங்கும் நிலவாத அரசை தோற்கடிக்க வேண்டும். அராயகவாத சகோதரர்கள் எங்கேயோ புகைமண்டலத்தில் பதுங்கியிருக்கும் அரசுக்கெதிராகப் போராடும் நேரத்தில், யதார்த்தத்தில் நிலவும் அரசுகள் சாதாரண புரட்சியாளர்கள் மேல் ஏவிவிடும் குண்டாந்தடிக்கும் சிறைச்சாலைக்கும் குண்டுகளுக்கும் தப்புவதென்று அவர்களுக்குத் தெரியும். முதலாளித்துவ அரசுகள் வழங்கும் சலுகையினால் தாம் தப்பிக் கொண்ட அராயக சகோதரர்கள் கொஞ்ச நஞ்சமானவர்களல்ல.

பகூனினது சிந்தனையினதும் செயலினதும் ஐக்கியம் என்பதன் அர்த்தம் வேதவிசுவாசமும் கண்மூடித்தனமான கீழ்ப்படிவுமாகும். ஒருபட்டாளம்போன்று இருக்கவேண்டும். யெசூவிற்களது யேசு சபைபோன்று எதிர்வார்த்தை பேசாத விசுவாசிகளை யூனியர் அங்கத்தவர்களாகக் கொண்ட அராயக சபை வேண்டும்.

-மாக்ஸ் அதேபுத்தகம்.

கடந்த அரை நூற்றாண்டுகாலமாக இலங்கை ரொக்சியத்தின் வரலாற்றை உருக்கமாகப் படித்தவர்கள் இந்த எதிர்வார்த்தை பேசாத விசுவாச ரொக்சியவாதிகளை உருவாக்க ஐரோப்பிய சமூகசோவனிஸ்ட்டுகள் மீண்டும் மீண்டும் முயன்றதாற்தான் இன்றைய இலங்கை சுடுகாடாகியுள்ளதென்பதை விளங்கிக் கொள்வர்.

போல்சவிசபாணி ஜனநாயக மத்தித்துவக் கட்சியில் ஏதும் பிழை இருக்கிறதா என்று மில்லியன் முறை 1903லிருந்து 1924இல் தான் சாகும் வரை லெனின் பரிசீலித்துப்பார்த்தார். அவரது அந்திமநாட்களில் அதிகாரத்துவம் வளர்ந்து கொண்டுவந்த அந்த சோவியத் பாட்டாளிவர்க்க சர்வாதிகார ஆட்சியில் வேறு மாற்றுவழிகள் ஏதுமுண்டா என ஆராய்ந்து பார்த்தார். அவரும் போல்சவிக்குகளும் ஜனநாயக மத்தித்துவக் கட்சியற்ற வேறு எந்த மொடல் கட்சியாலும் இன்றல்ல என்றைக்கும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாதென்ற முடிவுக்கே அவர்கள் வந்தார்கள். மாக்சியவாதிகளின் உன்னதமான விதி முறையில் ஒன்று என்னவென்றால் ஆயிரம் மாற்றுவழிகளை அவர்கள் யோசித்து பிரேரித்து வாதித்து விவாதித்து அதன் பின்னரே முடிவுக்குவந்து செயற்படுவர். ஆதலாற்தான் அவர்கள் அளந்துவைத்த அடியெடுப்புகளில் இலகுவில் பின்வாங்குவதில்லை. மூன்றாமகிலம் பிரஞ்சுக் கொம்ய+னிசக் கட்சிக்குள் நிலவிய அராயகத்திற்கு எதிராகப் போராடும் பொழுது எழுதுகிறது.
'வௌ;வேறு கொம்யூனிச அமைப்புக்களுக்கிடையே சகோதரத்துவத்தோடு கூடிய புரட்சிகரக் கலந்துரையாடல்கள் கரடுமுரடற்று இசைவாக நடைபெற வேண்டும்.

மூன்றாம் அகிலத்தினால் விதிக்கப்பட்ட ஸ்தாபன விதிகளும் கட்டுப்பாடுகளும் வெறுமனே புத்திகூர்மையின் வெளிப்பாடுகளல்ல மாறாக இந்தப் பூகோளத்திலுள்ள முக்கால் நூற்றாண்டு பாட்டாளிவர்க்க விடுதலைப் போராட்டத்தின் கடைந்தெடுத்த முடிவுகளாகும். அது தனது முதலாவது புரட்சிகர காலகட்டத்தைக் கடந்து போகையில் அனுபவித்த தொழிலாளிவர்க்கத்தின் போராட்டங்களும் வீணே கழியவில்லை. தோல்விகள் வெற்றிகள் என்ற இரண்டுமே, போராடும் பாட்டாளிகள், தங்களது அங்கத்தவர்களை சிதறவிடாமல் எவ்வாறு கெட்டியாக்கி வைப்பதும், வர்க்கத்தினுடைய ஸ்தாபனத்தின் கட்டுப்பாடுகளை எவ்வாறு பேணுவதும் எவ்வாறு ஐக்கியப்படுத்தப்பட்ட ஒரு தலைமைத்துவத்தை வைத்திருப்பதும் இன்றியமையாதது என்பதையே.

ஆதலாற்தான் உலக கொம்யூனிச காங்கிரஸ் அவர்களது ஆய்வுரைகளிலும் விசேட தீர்மானங்களிலும் உலகத்தொழிலாளர் கட்சிகள் பெற்ற அறிவினதும் அனுபவத்தினதும் சாராம்சத்தை இரத்தினச் சுருக்கமாகத் தருவதோடு ஜனநாயக மத்தித்துவத் தத்துவத்தை பாட்டாளிவர்க்க அரசியல் ஸ்தாபனத்தின் முக்கிய அத்திவாரமாகக் கடைப்பிடிக்கும்படி முன்மொழிந்தார்கள்.

மத்தித்துவம் ஊநவெசயடளைஅ - ஏனெனில் அது ஒரு தொழிலாளிவர்க்கத்தின் எல்லாப் பகுதிகளையும் நடைமுறைச் செயற்பாடுகளில் ஐக்கியப்படும்படி கோருவதோடு அந்தச் செயற்பாடுகளை ஒரே நேரத்தில் ஒரு பொதுச் சுலோகத்தின் கீழ் செயற்படும்படியும் கோரும்.
இதை ஒரு மிக நேர்மையாகக் கூட்டிக் குவித்துச் செறிந்த தலைமைத்துவத்தின் கீழ் மிகப் பொறுப்புவாய்ந்த மத்திய பிரதேச அமைப்புகளினால். அவைகளின் சேர்க்கையும் அரசியற் குறிக்கோளும் நிலையானதாக இருக்கும்பொழுது மாத்திரம்தான் சாதிக்கலாம்.

ஜனநாயகம் னுநஅழஉசயஉல - ஏனெனில் இந்த மத்திய பிரதேச தலைமைகள் சில நிபந்தனைகளினால் மிகச் சிறிதாக இருப்பதினால்@ அவர்கள் கட்டாயமாக கட்சி அங்கத்தவர்களினால் மாத்திரம் பிரேரித்துத் தேர்ந்தெடுக்கப்படுவதினால் அவர்களாற் கட்டுப்படுத்தப்படவும் அவைகளுக்கு வகைசொல்ல வேண்டியும் இருக்கவேண்டும் என்பதற்காகவேயாகும். மத்தித்துவப்படுத்தப்பட்டு கூட்டிக்குவிக்கப்பட்டு செறிந்த தலைமையை சிலவேளைகளில் புரட்சியாளர்கள் எதிர்க்கக் கூடும். ஏனெனில் சிலவேளைகளில் அங்கத்தவர்கள் போதியமட்டத்திற்கு உற்சாகமாகச் செயற்படாத பட்சத்தில் அது தலைவர்களின் தன்னிச்சையான ஆதிக்கத்திற்கு இட்டுச்சென்று குறுங்குழு ஆதிக்கம் படைக்கக்கூடும். (ழுடபையசஉhiஉ) என்று அனுமானித்து எதிர்க்கக் கூடும். இங்கே மத்தித்துவத்தைப் பிழையாகப் பிரயோகித்ததால் தலைமை உருக்குலைந்து குறுங்குழு ஆதிக்கமாக மாறியது என்பதே எல்லோருக்கும் தெரிந்தவிடயம் இருந்தபோதும் இங்கே மத்தித்துவத்தின் தவறல்ல மாறாக அதன் விதிமுறையையும் அனுகூலத்தையும் பிழையாகப் பிரயோகித்ததன் விளைவே அதுவாகும். ஆனால் இதன் இயற்கையான தன்மையில் மிகக் கட்டுப்பாடான மத்தித்துவ ஸ்தாபனம் ஒரு வரிசைக்கிரமமான நிலையான தொடர்ச்சியான அரசியற் தலைமைத்துவத்தை அளிக்கும் உத்தரவாதத்தினால் வெகுசனங்களின் செயற்பாடுகளை உயர்ந்தமட்டத்திற்கு உயர்த்தும் தொழிலாளர்களுக்கு ஒரு தலைமையும் தேவையில்லை என்பவர்கள் வெறுமனே தொழிலாளர்களைப் பிழையானவழிக்கு இட்டுச் செல்பவர்களாகும். பிரதேச, தேசிய அளவில் மிகக் கவனமாகத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்காமல் அவர்களது செயற்பாடுகளை தொடர்ந்து பரிசோதிக்காமல் தொழிலாளிவர்க்கம் ஒருநாளும் வெற்றியீட்டாது. சமஷ்டிமுறையிலான ஒரு கட்சியமைப்பு முறை தலைமைத்துவத்தை துகள்களாகச் சிதறடித்து சிதறிய தலைமைத்துவமாக்கி ஒரு திட்டவட்டமான சொந்தப் பொறுப்புணர்ச்சி இல்லாத தலைமையுள்ளதாக்கிவிடும். நறுக்காக அப்படியான நிலைமைகளிலே ஸ்தாபனத்தினுள்ளே குழுக்கள் படிமமாகி, அவைகள் எவரின் கட்டுப்பாட்டின் கீழும் இல்லாத ஒன்றாகி அவைகள் அங்கத்தவர்களுக்குப் பின்புறமாக தலைமையாகி கற்பனையான சமஷ்டிமுறைத் தலைமை அமைப்புமுறையின் மேன்மையென்பதால் ஓராட்டும்.

சோவியத் குடியரசின் சமஷ்டிமுறை அமைப்பைச் சுட்டிக்காட்டி பாட்டாளிவர்க்கக் கட்சிக்குள்ளும் சமஷ்டிமுறை வேண்டுமென்று நியாயம் கூறுவது வெறும் தப்பபிப்பிராயமாகும். சோவியத் குடியரசான அரச ஸ்தாபனத்தில் சமஷ்டிமுறையைப் பிரயோகிப்பது ஏனெனில் மிகப்பரந்த நிலப்பரப்பில் வௌ;வேறு வித்தியாசம் வித்தியாசமான தேசிய இனமக்களும் இனக்குழுக்களும் அமைந்திருப்பதால் (பைலோறைசியா, உக்கிரேன், யோர்ஐpயா ஆர்மானியன்....) அவைகளோடு கூட்டாக அரசாட்சி நடாத்துவதற்கு அது இன்றியமையாதது. இப்படியான சமஷ்டிமுறையிலான ஸ்தாபனமுறையை ஏற்படுத்த வேண்டிய அத்தியாவசியம் ஏன் ஏற்பட்டதென்றால் சில தேசிய அரச செயற்பாடுகளுக்காக (அரசகருமமொழி, தேசிய பாடசாலை போன்றன) ஆனால் நாம் இந்தச் சமஷ்டிமுறையை ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சியைக் கட்டிவளர்ப்பதற்குப் பிரயோகிக்க இயலாது இப்பொழுது நாம் அப்படிச் செயற்படவில்லை. உக்கிரேனியன், யோர்ஜியன் ஆர்மானியன் மற்றும் அனேக கொம்யூனிச அமைப்புகள் ஒரேயொரு ஸ்தாபனத்தில் ஐக்கியப்படுத்தப்பட்டார்களேயொழிய சமஷ்டிமுறையிலல்ல. மாறாக இறுக்கமான மத்தித்துவ முறையிலாகும். இந்தக் கட்சி மத்தித்துவம் இல்லையென்றால் றைசியத் தொழிலாளிவர்க்கம் சோவியத்குடியரசைப் பாதுகாப்பதில் வெற்றியீட்டியிருக்கமாட்டாது மாத்திரமல்ல, ஏன் ஆட்சியதிகாரத்தைக்கூடக் கைப்பற்றியிருக்கமாட்டாது.

மிகக் கண்டிப்பான மத்தித்துவமும் கட்டுப்பாட்டுடன் கூடிய அதிகாரமுமுடைய முதலாளித்துவத்திற்கு முன்னால் முகங்கொடுக்க அதற்குக் குறைவில்லாத மத்தித்துவமும் கட்டுப்பாடுமுடைய பாட்டாளிவர்க்க அதிகாரம் வேண்டுமென்று ஒவ்வொரு வர்க்க உணர்மையுள்ள தொழிலாளர்களுக்கும் தெளிவாகத் தெரியும். ஆதலாற்தான் ஜனநாயக மத்தித்துவச் சிந்தனையை எதிர்ப்பவர்களை, பாட்டாளிவர்க்கத்தின் உணர்மையடைந்த பகுதியினரின் ஆவல்களுக்கு விரோதமாக ஆளுமைசெலுத்துவதனூடு தங்களையறியாமலே புரட்சியின் நலனுக்குக் கேடு விளைவிப்பவர்களாகும் என்று மூன்றாவது கொம்யூனிச அகிலம் பிரகடனப்படுத்திக்காட்டும்.

கொம்யூனிசக் கட்சிகள் வித்துவான்களின் கலந்துரையாடற் கழகமோ அன்றேல் பிரச்சாரச் சபைகளோவல்ல. அவை எதிரியை எதிர்த்துப் போராடும் நிறுவனங்களாதலால் அவைகள் அதற்கேற்றமுறையிலேயே கட்டப்படவேண்டும்.

நவீனகாலத்துத் தொழிலாளர்கள் புரட்சிகள் எல்லாமே முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கெதிரான பயங்கரமான போராட்டமாகும். தொழிலாளர்வர்க்கத்தின் சிறந்த பகுதியினர் செய்த எண்ணற்ற தியாகங்கள் அத்தனையும் சோஷலிசப் புரட்சிக்காகப் போராடும் முன்னணிப்படையினரால் மறந்து விடக்கூடாத படிப்பினைகளாகும். என்ன காரணத்திற்காகப் பாரிஸ் கொம்யூன் தோற்றது என்பதை, பாரிஸ்கொம்யூனின் ஆத்மீக உரிமைக்காரனான சைனே சம்மேளனம் மாத்திரம் தான் கடைசியாக உதாசீனம் செய்யும். அது குட்டி முதலாளித்துவ ஜனநாயக சமஷ்டித்தத்துவங்களாலேயே தோற்கடிக்கப்பட்டது. அங்கே தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி கட்டுப்பாடுள்ளதாக்கி மத்தித்துவப்படுத்தி புரட்சிக்கு வழிகாட்ட ஒரு பலமான கை இல்லாததனாலேயே.

-மூன்றாமகிலத்தின் முதல் ஐந்து வருடங்கள். ரொக்சி பக்கம் 158-164

'போல்சவிக்கட்சியின் ஸ்தாபனப் பிரச்சனை அதன் வேலைத்திட்டத்தோடும் தந்திரோபாயத்தோடும் நீக்கமறப் பிணைந்த ஒன்று அதன் ஜனநாயக மத்தித்துவத்தின் உட்கட்சி ஆதிபத்தியம் கட்சிக்குள்ளே கலந்துரையாடவும் விமர்சிக்கவும் அதிருப்தியை வெளியிடவும் தேர்ந்தெடுக்கவும் தலைமையிறக்கம் செய்யவும் பூரணமாக அனுமதிக்கும் அதே வேளையில், நடைமுறையில், தேர்ந்தெடுக்கவும் திருப்பி இறக்கவும் கூடிய ஆனால் பூரண ஆதிபத்தியத்தையுடைய தலைமையின்கீழ் உருக்குறுதிக் கட்டுப்பாட்டை கோருகிறது. அதன் ஜனநாயக அர்த்தம் கட்சிக்கு கட்சியின் மற்ற எல்லாக் கிளைகளிலுமிருந்தும் தனித்துவத்தையும் மத்தித்துவம் என்பதன் அர்த்தம் போராட்டசக்திக்கு உத்தரவாதமளிக்கக்கூடிய வர்க்க உணர்மையால் உண்டான கட்டுப்பாடு லெனின் மரணத்திற்குப்பிறகு ஸ்டாலினால் எழுதப்பட்ட நகல்வேலைத்திட்டத்தில் இந்த ஜனநாயக மத்தித்துவம் போதாதென்று சொல்லி சுநஎழடரவழையெசல ழசனநச புரட்சிகர உத்தரவு புரட்சிகரப் பதவிவரிசை என்ற சூத்திரத்தை உட்புகுத்தி அக்கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தைத் திருகி அதிகாரத்துவ மத்தித்துவம் புகுத்தப்பட்டது. இதன்மூலம் கட்சியின் உச்சியிலுள்ள அதிகாரிகள் கட்சிக்கு மேலால் உயர்த்தப்பட்டு கட்டுத்தர்ப்பார் நடாத்தும் சுதந்திரத்தை சுகிக்க அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் கட்சியின் சட்டதிட்டத்தை நசுக்கி கட்சி மாநாடுகளை ஒத்திப்போட்டு அதிகாரத்துவம் அனாதி ஆகியது. இதன்பலாபலனால் ஜனநாயக மத்தித்துவம் என்பது மேலேயுள்ள உத்தியோகத்தர்களுக்கு மறுவார்த்தை பேசாது அடங்கி நடத்தல் என்ற அர்த்தமாகியது. கட்சியின் ஜனநாயகம் மேலதிகாரிகளின் சுற்றுநிருபக் கடிதங்கள்மூலம் களைந்தெறியப்பட்டு 58வது கட்சிச் சட்டத்தின் கீழ் மிரட்டப்பட்டது.

இந்தப் புரட்சிகர உத்தரவு றைசியக் கொம்யூனிஸ்ட் கட்சிக்கு மாத்திரமல்ல கொம்யூனிச அகிலத்தினுள்ளும் புகுத்தப்பட்டது. இந்தப் புரட்சிகர உத்தரவென்பது கட்சிக்குள் தத்துவார்த்த கன்னைகளும் குழுக்களும் உருவாவதோடு தொடர்புடையது. கட்சிக்குள் நடைபெற்ற ஒவ்வொரு வாக்குவாதங்களும் அபிப்பிராயபேதங்களும் இந்தப் புரட்சிகர உத்தரவு மூலம் நசுக்கப்பட்டது. கட்சிக்குள் தற்காலிகமான தத்துவார்த்தக் குழுக்கள் உருவாகாமல் கட்சியின் தத்துவார்த்த வளர்ச்சியென்பதை நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. அப்படி ஒரு வழியை இன்னுமொருவரும் கண்டுபிடிக்கவில்லை. அப்படிக் கண்டுபிடிக்க முயன்றவர்கள் கட்சியின் தத்துவார்த்த ஆன்மாவை திருகி எறிந்தார்கள்.
இயற்கையாகவே குழுக்களும் அபிப்பிராய பேதங்களும் தீதானவைதான். ஆனால் இந்தத் தீமை கட்சி அபிவிருத்தி இயங்கியலோடு இணைந்தவொன்றாகும். என்ன மாதிரி வுழஒin என்ற ஏற்புநொதியம் உடலோடு இணைந்துள்ளதோ அதேமாதிரி.
இந்தக் குழுக்கள் கன்னைப்போக்காக வளர்ச்சியடைதல் ஆபத்தானதுதான். தலைமைத்துவக் கலையென்பது இந்தக் கன்னைப்போக்கு அபிவிருத்தியடையவிடாமல் தடுப்பதுதான். இதை வெறுமனே தடை செய்வது மூலம் இல்லாமற் செய்துவிட முடியாது."

-ரொக்சி லெனினுக்குப் பின் மூன்றாமகிலம் பக்கம் 111

மாக்சியம் கடந்துவந்த பாதை கொஞ்சநஞ்சமல்ல. அதிலேயுள்ள அராயகத்திற்கு எதிரான எழுத்துக்களும் குறைவல்ல. ஒன்றை மட்டும் நாம் சொல்வோம். அராயகம் ஆதிக்கமடைந்த இத்தாலியிலே முசோலினியும் ஸ்பானியாவில் பிறாங்கோ பாசிசமும் வந்ததை வரலாறு சொல்லும். எங்கே அராயகம் கணிசமான வளர்ச்சிகண்டதோ அங்கே தொழிலாளிவர்க்கம் தோல்விகண்டது. எங்கே தொழிலாளிவர்க்கம் தோல்விகண்டதோ அங்கே பாசிசம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. எங்கே தொழிலாளிவர்க்கம் தோற்கடிக்கப்பட்டதோ அங்கெல்லாம் பாசிசம் நிர்மாணமானது.

'மனிதர்கள் தாம் வாழும் சமூகத்தை திருப்பி புரட்சிகரமாகக் கட்டமுடியவில்லையென்றால், அவர்கள் கொம்யூனிசத்தை அடையமுடியவில்லையென்றால் மனித சமுதாயம் ஓர் அழுகின முட்டைக்குக்கூட பெறுமதி இல்லாததாகிவிடும். அவர்கள் அனாதியாக சுமை மிருகமாகவே இருப்பார்கள். ஏன் அவர்கள் சுமை மிருகத்திலும் கேவலமானவர்களாகும். இந்த மிருகங்களுக்கு வர்க்கமாகப் பிரிந்திருக்கத்தெரியாது. ஒரு மாடு இன்னொரு மாட்டையோ ஒரு குதிரை இன்னொரு குதிரையையோ ஆளுவது கிடையாது."
-ரொக்சி- எப்படி புரட்சி ஆயுதபாணியாக்கப்பட்டது பாகம் 1
பக்கம் 53