நாளை
நவராத்திரி
மண்பொம்மைகளைக்கூட
பிரித்து வைக்கிறரர்கள்
இந்த ஜாதி
வெறியர்கள்
பொம்மையின் முதல்
வரிசையில் ராமன், கிருஷ்ணன், சிவன்
முருகன், சீதை, பார்வதி, சரஸ்வதி, லட்சுமி
இரண்டாவது வரிசையில் புத்தர்
ஏசு, மீரா, தியாகராஜ பிரமம், சத்யசாயி
மூன்றாவது வரிசையில்
அம்பேத்கார், காந்தி, நேரு, அண்ணா
இறுதி வரிசையில்
உழவன், குறவன், குறத்தி, வள்ளி
மலைவேடர்கள் இவர்களின்
மத்தியில் நாரதர்
ஒன்பது நாட்களாக இந்த
பொம்மைகள் நின்றும்
உட்கார்ந்தும் சிரித்தபடியே
எங்களைப் பார்த்துக்
கொண்டு
இன்பமாக
இருக்கின்றன.
ஒரே ஒரு பொம்மையின்
முணு
முணுப்பு மட்டும் என்
மூளையை வந்து
மூளையின்
மூலையை
முட்டி மோதுகின்றது.
மனிதர்களே
மனிதர்களே
உங்களுக்குள் ஆயிரம்
சாதிச்
சண்டைகள்
சந்து
சந்திற்குத்
தலைவிரித்து ஆடினாலும்
இந்த ஒன்பது நாள்
கொலுவில் கூடவா
உங்களது சாதிப்
பிரிவினையைப்
புகுத்துவது?
மண்ணால் செய்யப்பட்டாலும்
நாங்கள் ஒற்றுமையுடனும்
பொறாமையின்றி
போட்டியின்றி
மன உறுதியுடன்
வரிசையாக இருந்தாலும்
எங்களைப் பிரித்து
வைத்து எங்களுக்குள்
சாதிப்பிரிவினையைப்
புகுத்தப் பார்க்கிறார்கள் இந்த
புத்தி கெட்டவர்கள்.