கண்ணாடி

நா. கண்ணன்

ஏலே! மூதி!
தூக்கிப் பிடி டோய்.

ஆகட்டும் எசமான்.
இப்ப நல்லா தெரியுதுங்களா?

சனிப் பயலே!
கீழே இறக்காதடா,
மேலே தூக்கிப் பிடி,
கேடு கெட்ட முண்டம்.

திட்டாதீக எசமான்,
இப்ப தெரியுதுங்களா?

மூதி, மூதி...
சாய்க்காத டோய்.

சொன்னா கோவிச்சுக்காதீங்க,
நான் எப்படி பிடிச்சாலும்
உள்ளதுதானுங்க தெரியும்!

என்னடா சொன்ன
தேவடியா மகனே...

காலின்
எகிறலில்
தாண்டி விழுந்து
உடைந்தது
கண்ணாடி.

சிதறிய
ஒவ்வொரு
சில்லிலும்

மீண்டும்
அதே முகம்.