ஒரு பரிமாணமும்....
மூன்று பரிமாணமும்....

நாதன்

இரண்டு தர ஆறு பன்னிரெண்டு.

மிச்சம்....

என்ன பிறகு மிச்சம்?

நரகம்....!

விளங்கியும்,

விளங்காமலும்!

பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே....

கனியைத் ~திண்டும்|

நிர்வாணம் தெரியிதில்லை.

இலட்சியம் ஜ.....ஸ. ? ! ஜ.....ஸ

உடைமைகள் ப+த்த அறம் பல்வேறு அர்த்தத் தேய்மானங்களோடு - இலட்சியமாய் இன்றும் நீடிக்கவே செய்கின்றது.
மேற்கில் இருந்து சிந்திப்பதால் உலகம் தன்னை உதிர்த்தி முளைவிடுவதாகத் தெரிகின்றது. இருக்கும் இடத்தில் இருந்து சௌக்கியம் கேட்டால்...? தேவை... சமூக-உயிரியல் விஞ்ஞானிகள் தேவை! எந்தப் பண்பாட்டுத்தளத்தில் கை வைத்தால் குரல் வெடிக்கும் என ஆய்வுசெய்ய...!

உலகச்சமுதாயம் அனைத்தும் தமது நாட்டு மரபியல் ~மாந்திரிக|வசப்பட்டு, அதுவே தலை எழுத்து எனவும், விதி எனவும், எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் எனவும் எதிர்ப்புணர்வற்று, கேள்விக்குட்படுத்தாமல், பெரும்பான்மையினர் சகித்துப்போகின்றவர்களாகவே வாழுகின்றனர். சமுதாயங்கள் அனைத்தையும் மையப்படுத்தியிருப்பது, தனியுடைமைச் சமுதாயக் கருத்துருவமே.

பொதுவாக தனியுடைமைச்சமுதாயக் கருத்தியலானது மனிதனை நகர்த்தி எந்த இடத்தில் நிறுத்தியுள்ளது என்பதே இப் பிரதியின் சுருக்கம். அனைத்து ஊடகங்களினாலும் நிரூபணமானது போல் புனைவும், சித்தரிப்பாகவுமே இது இருக்கலாம். பல்வேறு சாத்தியப்பாடுகளில் ஏன் இதுவும் ஒன்றாக இருக்கக்கூடாது? அல்லது இதுவா நிரந்தரம். சப்பித் துப்பிடலாம்.

மனிதஇனம் தோன்றி மில்லியன் வருடங்களையும், நாகரீகம் நிறுவப்பட்டு ஆயிரக்கணக்கான வருடங்களையும் உருட்டித்தள்ளி, கேள்விகளுக்கெல்லாம் விடைகள் எழுதி, சூரியனின் கேள்விக்கு முடிவுரை எழுத சமுதாயம் ஒன்று நிமிர்ந்து நிற்கின்றது.

எந்தச் சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோமோ, அச்சமுதாயக் கருத்தியலின் ஊடாக எதை ஏற்பது, எவற்றைப் புதைப்பது, எதனுடன் சமரசம் செய்வது...? அனைத்தையும் உதறி உரிந்து அம்மணமாய் நிற்க நாம் தயாரா?

கருத்தியல் மாற்றத்திற்கான சாத்தியப்பாடுகள் அரசியலின் ஊடாகவாஃகலை இலக்கியங்களின் ஊடாகவா! அரசியலின் ஊடாகவே என கொடி உயர்த்தியவர்கள் எல்லோரும் அம்பலப்படுத்தப்பட்டு முச்சந்தியில் நிற்கும் காலம்.

மேலாண்மை நிரம்பிய சமுதாயக் கருத்தியல் நிர்வாக அதிகாரத்தைக்கொண்ட அரசு, அரசியல் அதிகாரத்தை இல்லாமற் செய்கின்ற இறுதியான நோக்கம் பற்றிய பிரக்ஞை இல்லாமல், நிர்வாக அதிகாரத்திற்கான போராட்டமாகவே சர்வதேசரீதியாக மையப்படுத்தப்பட்டு, அதிகாரமாக, அதிகாரத்தை நோக்கிய தனிமனித இலட்சியமாக நிர்மாணிக்கப்பட்டாகிவிட்டது.

மாற்றுக் கலாச்சாரத்திற்கான முதற்பணியே அரசியலைத் தோலுரித்துக் காட்டுவதாகத்தான் இருக்கமுடியும். சமுதாயப் பொதுச்சிந்தனையை உள்ளடக்கிப் பேணிப்பாதுகாக்கும் பணியை அரசு, அதிகார நிறுவனங்களின் ஊடாக தனது மேலாண்மை நலன்களுக்காக எல்லாவிதமான சாத்தியப்பாடுகளின்மூலமாகவும் மேற்கொள்ளும். இத்தீர்மானப் புரிதலுடன், சமுதாயக் கருத்தியல்மாற்றத்திற்கான குரல்கள் ஓங்கி ஒலிக்க இன்று கலை இலக்கியமே வாழ்க்கையின் நிர்ப்பந்தம் என ஊசலாடும்தன்மை முற்றாக மறைந்து போகாமல், ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பேணும் இச்சமுதாயக் கருத்தியலின் இலட்சியங்களை முன்தள்ளிக்கொண்டே!!! 'வாழ்க்கையை முன்தள்ளும் நிர்ப்பந்தக் கருத்தியலாக, ஆளும் கருத்தியலுக்கு, அதன் விருப்பத்திற்கு ஆட்படுத்தக்கூடியதாக உருவாக்கும் முயற்சிகள் அனைத்தும் வெட்டிப் புதைக்கப்படவேண்டியவை" என கலை இலக்கியங்களினூடாக முகம் காட்டுகின்றோம்.

மரபிலக்கியங்கள், பின்பு நவீன கலை இலக்கியங்களாக இன்று நவீனத்தைக் கடந்து தலித்தியம், ஆதிக்கக் கருத்தியலின் மனிதவிரோத குரூரங்களை அம்பலப்படுத்தி புஜபலம் கொண்டதாக இச்சமுதாயத்தில் பின்நவீனத்துவமாக வேர்விட்டுப் பரவுகின்றது. (நாளை என்ன~வீனமாகுமோ|)

பின்நவீனத்துவமானது பல்வேறு அலகுகளின் ஊடாக, அனைத்து வகையாலும் சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்ட இனங்களின் நம்பிக்கைக்குரியதாக தன்னை முன்னிலைப்படுத்தி, தொடர்ந்து அவர்களின் இருப்பிற்கான எல்லைநோக்கி நகர்த்தப்படவேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் உட்புகுந்துவிடமுடியாது. ஆனால்...! பெரும்பாலான தமிழிற்கான பின்நவீனத்துவ விநியோகமானது, அரசியல் ஊடாக தோற்றம்பெற்ற தீவிரம், அதிகாரம் போன்ற கருத்தியல் வியாதிகளை உள்வாங்கிப் பரப்புவதற்கான அறிகுறிகளை பார்வைக்கே தெரியக்கூடியதாக தன்னை அடையாளப்படுத்தி முன்தள்ளுகின்றது.

அதில் முதன்மைப்படுத்தி நிற்பதானது, தலித்திய-பின்நவீனத்துவ இலக்கிய எழுத்தாளர்களின் ~முறுகல்| பரிமாற்றம்@ புனைவினதும், சித்திரிப்பினதும் விபரீதங்களாகவுள்ளது.

பின்நவீனத்துவ எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கிடையிலான விமர்சனங்கள் பல தலித்திலக்கிய குழுமனப்பான்மை தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புகளை நிரப்பிக்கொண்டே, ஆதிக்க இலட்சியத்திற்காகவே தமது வாழ்க்கையின் அனைத்து மதிப்பீடுகளையும் தோற்றுவிக்கும் வாய்ப்பின் ஊடாக, இச் சமுதாயக் கருத்தியலானது தலித்திலக்கியமும் பிளவுபடும் வாய்ப்பை உருவாக்கும்.

எந்த இடத்தில் இருந்து எதை நகர்த்த நினைத்தார்களோ, அந்த இடத்தில் தம்மை இருத்தும் செயலாகிவிடும். இன்றைய முற்போக்கின் பொதுக் கருத்தியலாய் உருமாறிய இலட்சியம் பன்முகப் பேச்சுக்களால் உணர்ச்சிகரமான ஒருமைப்பாட்டை உருவாக்கி, சமூகத்தோடு வாழாமல், ~சமூகத்துள்| வாழ நிர்ப்பந்திக்கும்.

விட்டு விலகாமல் முதுகுகளுக்கு (.....) பின்னால் மறையாமல், எந்த அவசியத்தை ஏற்படுத்தியதோ அதற்கான எல்லையை நெருங்க முன்நிபந்தனைகளாக சிலவற்றை நெருங்கித் தாண்டியே நகரமுடியும். 'அனைத்து அதிகார நிறுவனங்களோடும் உறவாடிக்கொண்டிருக்க நாம் தயாரில்லை" என்பது ~சமூகத்துள்| வாழும் கோட்பாடாக போர்த்தியிருக்கலாம். நாம் சமூகத்தோடும் வாழவேண்டும்!

மாற்றப்படவேண்டும், தகர்க்கப்படவேண்டும் என்கின்ற இன்றைய சமுதாயக்கருத்தியலானது மனித சமூகங்களை பல்வேறு நிறுவனங்களின் ஊடாக பிளவுபடுத்தியே தன்னைப் பாதுகாத்துக்கொள்கின்றது. இலகுவானதும், முதன்மையானதுமான மதங்களின் ஊடாக அங்கீகரிக்கும் நிர்ப்பந்தக் கருத்தியல் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

'பிரான்சில் மட்டும் 8இலட்சம் மக்கள் பேய்ஆடும்ஃசாமிஆடும் நம்பிக்கைக் கருத்துக்களை உள்வாங்கி மூளைச்சலவைக்குள் ஆக்கப்படுகின்றார்களாம். உலகம் முழுவதுமாக 120மில்லியன் மக்கள் பேய் ஆட்டும் பூசாரிகளால் தீர்மானிக்கப்படுபவர்களாகவே மாறி உள்ளார்கள் எனத் தகவல்கள். பல மில்லியன் மக்கள் இரண்டாயிரம் ஆண்டை எதிர்கொள்வதற்காக விபரீதமான முடிவுகளை மேற்கொள்ள தங்களைத் தயாராக்கிக் கொண்டிருக்கிறார்கள்"

மேற்படி சமூகங்கள் பிற்போக்கான சமுதாயக் கருத்தியல் நிறுவனங்களால், சமுதாயப்போராட்ட உணர்விற்குத் தடையாக இருப்பதை உணர்வதோடு, அவர்களுக்கான, அவர்களின் வாழ்வின் அர்த்தத்தை உணரத்தூண்டும் சமுதாயக்கருத்தியல் மாற்றத்தின் அவசியம் கருதுவதோடு மட்டும் அல்லாது எல்லாவித அதிகார நிறுவனங்களுக்குள்ளும் நசிந்திருக்கும் சமூகத்தோடும்தான் வாழ்வின் நிர்ப்பந்தம்
('இப்பிரதியின் தொண்டைக்குள் ஏகாதிபத்தியக் கயிறு" ஹ....ஹ்....ஹா....)

அனைத்து ஊடகங்களின் மதிப்பீடுகளும், புனைவும் சித்தரிப்புமாகவே உள்வாங்கப்படுகின்றது. எழுத்தாளனின் நோக்கம் புரிதல்களினால் சிதைக்கப்படுவது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எழுத்தாளன் சுதந்திரமாக, சாத்தியப்பாடுகளாக முன்வைப்பவைகளை நிராகரிப்பதென்பது ஊடகங்களினாலான பிம்பம், புனைவு, சித்தரிப்பு போன்றவைகளும் காரணமாகும்.

ஓம் லும் உரையாடினால் ஒன்று முரண்பாடு தெரியும்ஃஉடன்பாடு புரியும் இதை பரஸ்பரம் மதிப்பளிக்கும் உரையாடல்களின்மூலமாக நெருங்க முடியும். ஊடகங்களினாலான பிரதிபலிப்புக்குள் மயங்குவதும், புலம்புவதும் இச்சமுதாயக் கருத்தியலின் தொங்குதசைக் குணாம்சமாகத்தான் இருக்கமுடியும். இயங்கியல் தொடர்புடையவையாக சாம்பல்ப+க்க மறுக்கும் நெருப்பாக தடம் பதித்து, பரிமாணப் பரவலின் ஊடாக மாற்றுச் சமுதாயத்தின் அவசியத்திற்கான முன்தள்ளும் பணியை, தரமான இலக்கியப் பரிமாற்றங்களின் ஊடாகவே விரிவுபடுத்தலாம்.