தவணை முறையில்...
நீலிதை

ஆடம்பரத்தை
தவணை முறையில்
தங்க வைக்கும்
கௌரவக் கடன்கள்

அடுப்பு முதல்
அலுவலகம் வரை
இடிதாங்கியாய்
சுமைதாங்கியாய்
கழுத்தினில் தாலிதொங்க
தவணை முறையில்
தட்சணைகள்

பெற்ற பட்டத்தை
பயனுடையதாக்க
தவணை முறையில்
கையூட்டு

உயிர்போகும்
நேரத்தில் கூட
மகன்களிடம்
தவணை முறையில்
உணவு பெறும்
தாய் தந்தை.