காற்றை எதிர்த்து ஒரு காலடி
சேரன்
1. ஒரு கவிதை
ஊரில் சிறையிருக்கும் நண்பருக்கு
திசைகளுக்கு அப்பால்
எல்லோரும் பிரிந்து போய்விட்ட பிற்பாடு
காடுகளைவிட்டு வெளியேறுவதற்கான
கடைசி ஒற்றையடிப்பாதையையும்
புல்லும் புதர்களும்
பின்பனியும் மூடித்
தடங்களை அழித்துவிட்ட
பிற்பாடு
வாழ்க்கையும் கூடச்
சிந்தனை மூடுண்ட வெற்றிடத்துக்குள்
உலர ஆரம்பித்த
பிற்பாடு
இன்று
எங்களுடைய நிலத்தில்
மனித விடுதலையின் மூலவேர்
கோடை நெடுந் தூக்கத்துள்
ஆழ்ந்து போயுள்ளது.
'அன்றே பறந்து போயிருக்கலாமே"
என்று வெம்பிச் சினந்து
கொடிய தனிமைச் சிறையில் உறைகிறாய்.
கண்ணீர் எல்லோருக்கும்
நேசமான பொருளென்றாலும்
இப்போது அழாதே
இணையின்றிப்
பாலைவெளியில் தனித்துப்போன
ஒற்றைப் பனைமரங்கள் அல்ல நாம்.
வெறுங்காற்றில் பற்றியெரிய
இருப்பிழந்த மூங்கில்காடுகளும் அல்ல
நம் வாழ்க்கை.
காலத்தைக் கேள்
சொல்லும் அது
காத்திருப்புக்கு அப்பாலே
ப+ச்சூடும் புல்வெளிகள்.
2. ஒரு கடிதம்:
அன்புள்ள செல்வி
உண்மைதான். இலக்கியத்தின் விளைவுகள் அப்படியொன்றும் எடுத்துக் காட்டும்படியாக இல்லை. இன்று இலக்கியம் படைப்பவர்கள் ஏதோ ஒரு தற்பாதுகாப்புக் காரணத்துக்காகவே செயற்படுகிறார்கள். அவர்கள் தைரியத்தை இழப்பதற்கான காரணங்கள் பல. உள்ளன. தங்கள் நம்பிக்கைகள் நிறைவேறாததைப்பற்றிய வரவுஇ செலவுக் கணக்குப் போடும்போது அவர்கள் சொல்லுவார்கள்:
'இலக்கியம் என்றுமே அரசியலை அப்புறப்படுத்தி அரியாசனம் ஏறமுடியாது."
இப்படிப்பட்ட நம்பிக்கை இழந்தஇ மனம் தளர்ந்த நிலையிலும் ஒரு கேள்வி மட்டும் எழுகிறது. ஏன் ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கியம் அதிகாரவர்க்கத்தின் கவனத்தை ஈர்க்கிறது? இலக்கியத்தின் குறிக்கோள் குறித்துச் சந்தேகமும் ஏன் அவர்களுக்கு எழுகிறது?
இலக்கியத்தை அவ்வப்போது ஒடுக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள்கூட இலக்கிய வரலாற்றின் ஒரு அம்சம்தான்.
இலக்கியம் என்ன சாதிக்கமுடியும் என்ற எண்ணத்துக்குப் பின்னணியில் அது மிகவும் ஆபத்தானது என்று எழுதப்பட்டிருக்குமோ? ஒரு பக்கம் இலக்கியம் ஆபத்தானது என்ற நிலையும் மறுபக்கம் இலக்கியகர்த்தாக்களை அதிகாரவர்க்கத்தின் ஒலிபெருக்கியாக மாற்றுவதற்கான முயற்சிகளும் ஏன் மேற்கொள்ளப்பட்டன? இப்படிப்பட்ட ~ஒலி பெருக்கி இலக்கியகர்த்தாக்கள்| என்ன கூறினார்கள்?
எங்கு சமாதானம் நிலவுகிறது?
கற்பனைத் திறனைக் குறைத்துக்கொண்டுஇ மேலெழுந்தவாரியாகக் கானல்நீரை நிர்வகிப்பவர்களாக இலக்கியகர்த்தாக்கள் இருக்கவேண்டும் என்றுதான் அதிகாரவர்க்கம் மிக விரும்புகிறது.
கண்ணாடித்தொட்டியின் நான்கு சுவர்களுக்குள் அலையும் தங்கமீன்களைப்போலவே இந்த இலக்கியவாதிகளின் கதையும் முடிந்தது. அப்படிப்பட்ட தங்கமீன்களைத்தான் அதிகாரவர்க்கம் சகித்துக்கொண்டது.
இந்த நீண்ட மேற்கோளைஇ ஜேர்மன் புத்தகவெளியீட்டாளர் சங்கத்தின் சமாதான விருதைப்பெற்றபோதுஇ புகழ்பெற்ற ஜேர்மன் நாடகாசிரியர் ஸிக்ஃபிறீட் லென்ஸ் ஆற்றிய உரையில் இருந்து எடுத்து உனக்கு அனுப்புகிறேன்.
எனக்கு இலக்கியத்தில் நம்பிக்கை உண்டு. உனக்கும் அந்த நம்பிக்கை அளவற்று உண்டு என்பதும் நான் ஏற்கனவே தெரிந்துகொண்ட விடயம். எனினும்இ சர்வதேச எழுத்தாளர்இ கவிஞர்இ நூலாசிரியர் சங்கம் வருடாவருடம் தருகிற அறிக்கைகளைப் பார்க்கிறபோது இலக்கியத்துக்கு அப்பாலும் ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றுகிறது.
உதாரணத்துக்குப் பாருங்கள்: உலகெங்கும் 305 எழுத்தாளர்களும்இ பத்திரிகையாளர்களும்இ கவிஞர்களும் கொடுங்கோலர்களின் சிறைகளில் வாடுகின்றார்கள் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த வருடம் ஏறத்தாழ நூறு எழுத்தாளர்கள்இ பத்திரிகையாளர்கள் தங்களுடைய எழுத்துக்களுக்காகக் கொல்லப்பட்டனர் என்று இன்னொரு அறிக்கை தெரிவிக்கிறது.
நீ நான்கு சுவர்கொண்ட கண்ணாடித்தொட்டியுள் இருக்கின்ற மீன் அல்ல. சிறையில் வாடும் சிட்டுக்குருவி. உன்னையும் உன்னைப் போன்றவர்களையும் சகித்துக்கொள்ளமுடியாத அரசுஇ எவ்வளவு நொய்மையான கலாச்சார பலம் உள்ளது என்பது இப்போது வெட்டவெளிச்சமாகவே தெரிகிறது. அதிகாரம்இ தான் ஏற்படுத்த விரும்புகிற மயான அமைதிக்கு சமாதானம் என்று பெயர் சூட்டி அமைதிகாண விரும்புகிறது. இதுவே உலகெங்கும் வரலாறாக இருக்கிறது. அதுபோலவே அந்த அமைதிகாணலை உடைத்துக்கொண்டு குரலை உயர எழுப்புபவர்களே உன்னைப்போன்ற எழுத்தாளர்இ கலைஞர்இ பத்திரிகையாளர்கள். இன்றுடன் நண்பனும் பத்திரிகையாளனுமான குகமூர்த்தி காணாமல்போய் இரண்டு வருடங்கள் நீ கொண்டு செல்லப்பட்டு ஒரு வருடமும் எட்டு நாட்களும்.
இந்த நிலையில் ~பரிப+ரணமாகத் தன்நிலையில் இருத்தல்| எனக்குச் சாத்தியமில்லை. எங்களுடைய வார்த்தைகள் உயிர்கொல்லும் வார்த்தைகள் என்று அவர்கள் கருதினால் கருதட்டும். உயிர்கொல்வது அல்ல எங்களுடைய வேலை. வார்த்தைக்கு உயிர்கொடுப்பதே எங்களுடைய வேலை.
விரைவில் சந்திக்கமுடியும் என்று நம்புகிறேன்.
3. மறுத்தோடி வாழ்வு
என்னுடைய அந்த நம்பிக்கை வீணாகப் போயிற்று. செல்வி என்று என் நண்பர்களால் அழைக்கப்பட்டு வந்த செல்வநிதி தியாகராசா விடுதலைப்புலிகளால் கொண்டு செல்லப்பட்டு ஒரு வருடம் முடிந்த பிற்பாடு எழுதப்பட்ட மேலுள்ள கடிதம்ஃகட்டுரைஇ வீரகேசரி தினசரியில்இ சனிக்கிழமைதோறும் நான் எழுதிவந்த பத்தியில் டிசம்பர் மாதம் பன்னிரண்டாம் தேதிஇ 1992இல் வெளியாகி இருந்தது. அதற்கு நீண்டநாளைக்குப் பிற்பாடுஇ அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற தகவலைப் புலிகள் செல்வியின் தங்கை வீட்டாருக்குத் தெரிவித்துவிட்ட தகவல் எங்களுக்குத் தெரியவந்தது.
அதே காலகட்டப்பகுதியில்தான் எங்களுடன் இணைந்து நாடகமுயற்சிகளில் ஈடுபட்டு வந்த நெருங்கிய நண்பர்கள் தில்லைநாதன்இ தருமலிங்கம் ஆகியோரும் கடத்திச் செல்லப்பட்டுப் புலிகளால் கொல்லப்பட்டு விட்டார்கள். அவர்களோடு கூடவேஇ வெளியில் அதிகம் தெரியவராதஇ ஆனால் பல இலக்கிய நண்பர்களுக்கு அறிமுகமாகவும் புரவலராகவும் இருந்த நண்பன் யோகசுந்தரமும் இதே விதிக்கு ஆளானான். போராட்டத்தின் இயக்கவிதிகளின் விளைவாகக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரில் இவர்களும் வரலாற்றின் சில ஏடுகளாகப் புதையுண்டு போகக்கூடிய அவலமும் சாத்தியமும்தான் நிறைய உள்ளன. எனினும் இவர்களும்இ இவர்களைப்போன்ற பலரும்இ மாற்றுக் கருத்துக்கள்இ எதிர்ப்புக்குரல்கள் என்பவற்றின் விளக்கேந்திகளாக இருந்தனர்.
ஆட்சிபெற்றிருந்த கருத்தியலோடும் ஆதிக்கம் செலுத்துபவர்களோடும் ஒத்தோடிகளாக நிற்க மறுத்த இவர்களது மறுத்தோடிவாழ்வுஇ அதிருப்தியாளர்கள்இ மறுத்தோடிகள்(னளைளனைநவெள) பற்றிய சிந்தனைகளை சமூகஇ அரசியல் மற்றும் அறவியல் தளங்களில் எழுப்பத் துணைசெய்கிறது. இந்த அம்சங்களைப்பற்றிப் பேசுவதே இந்தக்கட்டுரையில் என்னுடைய நோக்கமாகும்.
4.
மறுத்தோடி என்று ஒருவரை அழைக்கிறபோதுஇ அதற்கான சில நியாயப்பாடுகள் உள்ளன என்பதும் குறித்த ஒரு காலத்துக்கும்இ அக்காலத்துக்குரிய சமுதாயத்தின் அரசியல் நிலைமைகளைப் பொறுத்தும்தான்இ யார் மறுத்தோடி என்பதுபற்றிப் பேசப்படமுடியும் என்றும் கருதுகிறேன். ஒரு மிகவும் பொதுவான தளத்தில்இ இப்போது நிலவுகிற அரசியல் கருத்தியல்இ பொருளாதார ஒழுங்குஇ சமூக விழுமியங்கள் என்பவற்றுடன் கருத்துரீதியாக முரண்பட்டுஇ ஒத்தோட மறுப்பவரை நாம் மறுத்தோடிகள் என்று அழைக்கமுடியும். இந்தப் பொதுவான தளத்தில் நாம் ஆயிரக்கணக்கானோரை மறுத்தோடிகளாக இனம்காணமுடியும். எனினும் இந்தப் பொதுவான அவதானிப்புக்கு அப்பால்இ நாம் சற்று ஆழமாகவும் விரிவாகவும் செல்லவேண்டி இருக்கிறது.
முரண்பாடுகளையும் அதிருப்தியையும் தன்னுடைய மனதுக்குள்ளே வைத்துப் புழுங்கிக்கொண்டும் குமைந்துகொண்டும் ஆனால் வெளியில் மௌனமாக இருக்கக்கூடியவர்களுக்கும்இ தமது மறுத்தோடித்தனத்தை ஏதாவது ஒரு வழியில் வெளித் தெரிவித்துஇ தமது மறுத்தோடி அரசியலை முன்வைப்பவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் எப்படி அணுகுவது?
ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட தெரிவுகளையும் அத்தகைய தெரிவுகளை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு இருக்கக்கூடிய சுதந்திரத்தையும் நாம் ஏற்றுக்கொள்கிற அதேவேளைஇ அத்தகைய தெரிவுகளின் அரசியலைப்பற்றி அல்லது அறவியலைப்பற்றி முன்வைப்பதற்குரிய சுதந்திரத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்தவகையில்இ இன்றைய எமது அரசியல்பண்பாட்டுச் சூழலில் முரணுற்று நிற்கக்கூடிய பலர் மௌனமாக இருக்கிறார்கள். அவர்கள் முரணுற்று இருப்பதே எங்களுக்கு அந்தரங்கமான நேர்ப்பேச்சின்போதுதான் தெரியவருகிறதே தவிர இவர்கள் தமது மறுத்தோடி அபிப்பிராயங்கiளை எழுத்திலோ பேச்சிலோ அல்லது வேறுவழிகளிலோ தெரிவிப்பதில்லை. இப்படித் தெரிவிப்பதற்கான சூழலும் பெருமளவுக்கு இல்லை. அச்சமும் அறியாமையும் ஏராளமான உண்மைத் தகவல்கள் வெளியே தெரியவர முடியாததுமான ஒரு அரசியல் சூழல்தான் எங்களுடைய தமிழ்ச்சூழல். இந்தச் சூழலில்இ தம்முடைய மாற்றுக்கருத்துக்களையும் அவை தாங்கி வருகிற மறுத்தோடி அரசியலையும் வெளிப்படையாக முன்வைப்பவர்களும்இ அத்தகைய கருத்துக்களுக்குக் களமாக அமைகிற சிறுசஞ்சிகைகளும் எமது கௌரவத்துக்கு உரியன. ஒரு சபாலிங்கத்தைஇ ஒரு ராஜினியைஇ ஒரு செல்வியை மறுத்தோடிகளாக உயர்த்தி நிற்பது இத்தகையதொரு வெளிப்படையான மாற்றுக்கருத்து அரசியல்தான். இந்த அரசியலின் ஆபத்து என்னவென்றால்இ இந்த அரசியலை எதிர்ப்பவர்கள் ஆயுததாரிகளாகவும்இ தமது புனிதப்பாதையில் குறுக்கிடும் எவரையும் எவ்வித தயக்கமற்றுக் கொன்றொழிக்கக்கூடிய சித்தம் படைத்தவர்களாக இருப்பதும்தான்.
இன்னும் அச்சம் தரக்கூடியதாகவும்இ மேலான சமூகவிழுமியங்கள் கொண்ட ஒரு சமூகமாக நாம் உருமாறுவதற்கான சாத்தியங்களையே கேள்விக்குறியாக்குவதாகும். இருக்கிற மற்றொரு அம்சம் என்னவெனில்இ மாற்றுக்கருத்துள்ளோரையும் மறுத்தோடிகளையும் அவர்கள் எத்தகைய நிரபராதிகளாக இருந்தாலும்கூடஇ கொன்றொழிப்பதை யுத்தத்தின் பேரால் நியாயப்படுத்துவதும் ஏற்றுக்கொள்வதும் அல்லது பாராமுகமாக இருந்து விடுவதும் ஆகும். எமது மையநீரோட்டப் பத்திரிகைகளுக்கும் சமூகத்தில் பலருக்கும் இது சாத்தியமாகி உள்ளது என்பது வரலாற்றில் புதிது அல்ல.
கொஞ்சக்காலத்துக்கு முன்பு சரிநிகர் பத்திரிகை விமர்சன அரங்கொன்றில் உரையாற்றிய பழம்பெரும் எழுத்தாளர் வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) அவர்கள்இ செல்வி ~காணாமல்| போனது தொடர்பாகவும் அதுபற்றி விடுதலைப்புலிகளைக் கண்டனம் செய்து பத்திரிகையில் வெளியான கட்டுரைகளையும்பற்றிக் குறிப்பிடுகையில் 'விடுதலைப்பாதையில் முள் இருந்தால் அதனை அகற்றியாகவேண்டும். முள்ளைப்போட்டவர்களைக் கண்டிக்காமல் முள்ளை அகற்றியவர்களைக் கண்டிப்பது என்ன நியாயம்? " என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அண்மையில் கனடாவில் நிகழ்ந்த ஒரு நூல் வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய எஸ். எஸ். குகநாதன் அவர்கள் (ஆறு நாடுகளில் ஒரே நேரத்தில் அச்சாகும் தமிழ்ப்பத்திரிகையான ஈழநாடுவின் பிரதம ஆசிரியர்)இ 'பத்திரிகைகளைப்பொறுத்து இன்றைய சூழலில் நடுநிலைமை என்ற கேள்விக்கே இடம் இல்லை. மேதகு பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளை ஆதரிப்பது மட்டும்தான் எமது நிலைப்பாடு." என்று முழக்கமிட்டிருந்தார். இத்தகைய நிலைப்பாட்டுடன் வெளியாகிற பத்திரிகைகளிடம் இருந்து என்ன எதிர்பார்க்கமுடியும் என்று விரிவுரை எழுதவேண்டிய அவசியம் இல்லை. நண்பன் சபாலிங்கம் கொல்லப்பட்டபோதுஇ ஈழநாட்டின் கனடாப்பதிப்பு வெளியிட்டிருந்த மூன்றரை அங்குல நீளமான ஒற்றைக் கலம் செய்தியின் சாராம்சம் : 'தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவரும் புலிகளுக்கு எதிராக நூல்களை வெளியிட்டவருமான சபாலிங்கம்இ இனந்தெரியாதவர்களால் கொல்லப்பட்டார்." என்பதாகும்.
சபாலிங்கம் வெளியிட்டுள்ள நூல்களின் பட்டியலைப் பார்க்கிற எவருக்கும் மேலேயுள்ள செய்தியின் பொய்மை தெளிவாகத் தெரிந்துவிடும்.
சிறுசஞ்சிகைகளைத் தவிர்த்தால்இ ஐரோப்பாவிலிருந்தும் கனடாவிலிருந்தும் வெளிவருகிற தமிழ்வாரப் பத்திரிகைகள் அனைத்தும் விடுதலைப்புலிகளை விமர்சிக்கிற அல்லது போராட்டம்ஃயுத்தம்பற்றிய விமர்சனப+ர்வமான அலசல்களை வெளியிடத் தயாரானவையாக இல்லை. ஒரு பயங்கரமான சுயதணிக்கையையே இந்தப் பத்திரிகைகள் அனைத்தும் கடைப்பிடிக்கின்றன. கொழும்பில் இருந்து வெளியாகும் மையநீரோட்ட ஆங்கிலஇ சிங்களஇ தமிழ்ப்பத்திரிகைகள் கடைப்பிடிக்கிற சுயதணிக்கையைவிட இது மோசமானது ஆகும். வானொலிச்சேவைகளைப் பொறுத்தும் இதுதான் நிலைமை. ஒரு பக்கமானஇ ~உத்தியோகப+ர்வமான| விடுதலைப்புலிகளது செய்திகள் அல்லது அவர்களுக்கு ஆதரவாகத் தரப்படுகிறஃதிரிக்கப்படுகிற செய்திகள் மட்டுமே வெளியாகின்றன. இந்தவகையில்இ புலிகளது பத்திரிகைகளும் மற்றும் அவர்களது அனுசரணையுடன் வெளியாகும் உலகத்தமிழர் (கனடா)இ ஈழமுரசு (பாரிஸ்) ஆகியவை பலமடங்கு சிறப்பானவையும் வாசிக்கும் தகவு வாய்க்கப்பெற்றவையும் என்பது சுவாரசியமான ஒரு விடயமாகும். இந்தப் பத்திரிகைகளை நாம் வாசிக்கிற அவர்கள் தருகிற தகவல் புலிகளுடையது என்று எங்களுக்குத் தெரியும். யுத்தம்பற்றிய விபரங்கள்இ புலிகள் தரப்புச் செய்திகள்இ நியாயப்பாடுகளை நாம் இவற்றூடாகத் தெளிவாகப் பெறமுடியும். அவற்றை நேர்த்தியாக இவை தருகின்றன. இவற்றைவிட அங்கு நாம் வேறொன்றும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் ஏனைய பத்திரிகைகள்தான் நமது இரக்கத்திற்கு உரியவை. பல சந்தர்ப்பங்களில் உத்தியோக ப+ர்வமாகப் புலிகள் தருகிற விஷயங்களையே ப+தாகரமாகப் பெருப்பித்து எழுதி விடுகிறார்கள். கிளிநொச்சிஇ முல்லைத்தீவுச் சமர் நேரம் இந்தப் பத்திரிகைகளின் செய்திச் சேகரிப்பையும் செய்தி அறிக்கைகளையும் ஒருசேரப் பார்த்தால் இது துலக்கமாகும்.
இலங்கை அரசு தருகிற உத்தியோகப+ர்வமான செய்தியின் விம்பமாகவே இவர்களது அறிக்கை இருக்கும். வித்தியாசம் என்னவெனில் இலங்கை அரசு ஆயிரம் புலிகளும் முந்நூறு படையினரும் பலி என்று அறிக்கை தந்தால் இவர்கள் ஆயிரம் படையினரும் இருநூறு புலிகளும் பலி என்று தருவார்கள். இத்தகையதொரு பத்திரிகைச்சூழலில் மறுத்தோடி எழுத்து என்பது பிரசுரம் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இல்லை. பழைய சோவியத் ய+னியனில் இருந்ததுபோல ணுயஅணைனயவ வகையான எழுத்துக்களே சாத்தியம் என்று தோன்றுகிறது. இத்தகைய எழுத்துக்களிலும் கவிதைஇ சிறுகதை ஆகியவற்றூடாக வெளிப்பட்டிருக்கும் மறுத்தோடிப் பிரதிபலிப்புகள் கணிசமான அளவு உள்ளன. கட்டுரைகள்இ விவாதங்கள்இ புனைகதை இலக்கியம் சாராத எழுத்துக்கள்இ அனுபவப்பதிவுகள் என்பன ஏமாற்றம் தரும் அளவுக்குச் சொற்பமாகவே உள்ளன.
1979 ஜுலை மாதம் வடக்கில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோதிலிருந்துஇ வெளிப்படையான இனப்படுகொலையை இலங்கை அரசுகள் புரிய ஆரம்பித்தன என்று கொண்டால்இ ஒரு இருபது வருடகாலப் பயங்கரமான வாழ்வனுபவங்கள் எங்களுக்கு உள்ளன. இந்த அனுபவங்கள் இரண்டு வகைப்பட்டவை. ஒன்றுஇ அரசும் அதனுடைய இராணுவ எந்திரங்களும் எம்மீது கட்டவிழ்த்துவிட்ட பயங்கரம். மற்றதுஇ இந்தப் பயங்கரத்தின் உபவிளைவாக எமக்குள்ளேயிருந்து வெளிக்கிளம்பிய ஒரு பயங்கரம். இயக்கமோதல்கள்இ படுகொலைகள்இ மறுத்தோடிகளின் ஒழிப்பு என்று இந்தப் பயங்கரத்துக்குப் பல வடிவங்கள் உள்ளன. இந்த இரண்டு பயங்கரங்களின் விளைவாக நடந்திருக்கிற இரண்டு சமூகவியல் மாற்றங்கள் எமக்கு மிகவும் முக்கியமானவை.
ஒன்றுஇ எமக்கும் - பொதுமக்கள்இ சிவில் சமூகம் என்ற அர்த்தத்தில் - போராளி இயக்கங்களுக்கும் இடையேயான உறவுகளையும் தொடர்புகளையும் வரையறை செய்வது வன்முறையும் அதனுடைய அரசியலும் என்பதாகத்தான் இருக்கிறது. இதேபோலவேதான் எமக்கும் இலங்கை அரசுக்குமான உறவு (அப்படி ஏதாவது எஞ்சியிருந்தால்!!) வன்முறைமூலமே தீர்மானிக்கப்படுகிறது. அந்தவகையில் எமது கருத்துக்கள்இ நிலைப்பாடுகள் எமது பங்கு ஆகியன எல்லாம் இக்கணம் நிகழ்ந்துகொண்டிருக்கும் வன்முறைமேலோங்கிய வாழ்க்கைக்கோலத்தில் பெறுமதியற்றவையாக உள்ளன.
இரண்டாவதுஇ கடந்த இருபது வருடகாலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை நாங்கள் இழந்திருக்கிறோம். ராணுவத்திறனிலும் தாக்குதல் வீச்சிலும் இலங்கை அரசை விடுதலைப்புலிகள் மிஞ்சக்கூடும். ஆனால்இ எமது சமூகத்தைஇ அதனுடைய இருப்பு நிலைமைகளிலிருந்து உடைத்தெறிந்துவிடுவது என்ற இலங்கை அரசின் அடிப்படையான நோக்கத்தில் அவர்கள் வெற்றிபெற்று வருகிறார்கள். மூன்றுலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இன்று வடக்குக் கிழக்கைவிட்டு வெளியேறிவிட்டார்கள் அல்லது வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். ஒரு திட்டமிட்டஇ மறைமுகமான இனத்துவச் சுத்திகரிப்பில் (நவாniஉ உடநயளெiபெ) இலங்கை அரசு வெற்றிபெற்று வருகிறது. எமது கல்விஇ பண்பாட்டு விழுமியங்கள்இ கலை வெளிப்பாடு என்பன சிதைந்து வருகின்றன. இவற்றைப் பேணுவதற்கும் இவற்றின் வளங்களையும் செழிப்பையும் விகசிக்கச் செய்வதற்குப் பதிலாகஇ ஒற்றைப்பரிமாணம் கொண்டஇ பெருமளவுக்குச் சாரமற்றஇ பாசிச இயல்புக்கூறுகளை வெளிப்படுத்தும் ஒருவகைக் கலை பண்பாட்டு இலக்கியப் போக்குகளே விடுதலைப்புலிகளால் உத்தியோகப+ர்வமாக ஊக்குவிக்கப்படுகின்றன. இவை எமது விழுமியங்களையும் பன்முகப்பாட்டையும் மேலும் புண்படுத்துகின்றன.
யுத்தத்தாலும்இ கட்டற்ற வன்முறையாலும் எமது சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள உளவியல்இ சமூக பாதிப்புக்கள் மிக உச்சமானவை. உளநலப் பாதிப்புள்ளோர்வீதம் எமது சமூகத்தில் - வடக்குக் கிழக்கிலும் சரிஇ புலம்பெயர்ந்த சூழலிலும் சரி - மிகவும் அதிகரித்துவிட்டது. தமிழ்மொழிஇ புலம்பெயர்ந்த சூழலில் மெல்ல மெல்ல மறைந்துவருகிறது. இவைபோன்ற ஏராளமான சமூக-உளவியல் பண்பாட்டுப் பிரச்சினைகளை நாம் தீவிரமாக எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. இத்தகைய பிரச்சினைகளே எமது சமூக ஒருமைப்பாட்டினைப் புற்றுநோய்போல நீண்டகாலத்துக்குச் சிதைக்கக்கூடியது. இதனை ஏற்படுத்தியதிலும் தொடர்வதிலும் திட்டமிட்ட முறையில் இலங்கை அரசு வெற்றிபெற்றுவருகிறது.
ஆனால் நாமோ எமது எல்லா மூலவளங்களையும்ஃமூளை வளங்களையும் தமிழ் இராணுவத்தில் முதலிட்டுவிட்டுப் பொற்காலக்கனவுகளில் ஆழ்ந்துபோயிருக்கிறோம். நாம் விழித்தெழுகிறபோது என்ன எஞ்சியிருக்கும் என்பதை நினைக்கச் சித்தம் கலங்குகிறது.
எங்களுக்கு இப்போது மிகவும் தேவையாக இருப்பது நான் எழுப்புகிற பிரச்சினைகளையும் மாற்றுக்கருத்துக்களையும் பற்றிய திறந்த மனதுடனான விவாதங்கள். இப்போது மேலோங்கியுள்ள தமிழினவாதக்கருத்தியலும் அரசியலும் இத்தகைய விவாதங்களுக்கு இடம் தருகிற அளவு ஆரோக்கியமானவை அல்ல. எனினும் இத்தகைய விவாதங்களுக்காகப் போராடுவதும்இ மாற்றுக்கருத்துக்களுக்கும் எதிர்ப்புக்குரல்களுக்குமான இடத்தை உருவாக்க முயல்வதும் எங்களுடைய வரலாற்றுக்கடமை மட்டுமல்ல. எமது அறவியல் கடப்பாடும் ஆகும்.
|