காலுடைந்த சிவில்சமூகமும் தமிழ்ப்புத்திஜீவிகளும்

ஸ்பாட்டகஸ்தாசன்

புத்திஜீவிகள் குழுமமும் சிவில்சமூகமும் தமிழில் அருகிப்போய்க்கொண்டிருக்கும் ஒன்றாக உள்ளது. முன்னையது அழிந்துகொண்டிருக்கும் ஓர் இனமாகவும் பின்னையது ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகவும் தோன்றுகிறது. பொதுவாகவே தற்கால தமிழ்சமூகம் புத்திஜீவிகள் எதிர்உணர்வுள்ள ஒரு சமூகம். இங்கு புத்திஜீவிகள் ஏமாற்றுக்காரர்களாகவும் அகங்கார உணர்வுடையவர்களாகவும் ஒட்டுண்ணிகள் என்றும் கருதப்படுகிறார்கள். இந்த நிலைப்பாட்டிற்கு ஈழச்சிந்தனையுலகில் நுழைந்த புத்திஜீவிகள் வெறுப்புணர்வுகொண்ட ஸ்ராலினிச முக்கியமாக மாவோயிச சிந்தனைகளும் வழிவகுத்துக்கொடுத்தது. சுயமான புத்திஜீவிகள் வாதத்தையும் சுயமான ஒரு பொதுத்தளத்தையும், குறிப்பாக, சிவில்சமூகத்தையும் ஸ்ராலின் காலத்திய சோவியத் ய+னியனில் நடத்தப்பட்ட களையெடுத்தல் நடவடிக்கையின்போதும் சீனாவில் கலாச்சாரப் புரட்சியின்போது மாவோயிஸமும் மிகக்கொடூரமான முறையில் அழித்தொழித்தது. இப் போராட்டத்தின்போது எழுந்த புத்திஜீவிகள் எதிர்ப்புவாதம் ஈழத்திலும் நுழைந்தது.

ஏனெனில் தமிழுக்குப் புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்தியதில் முக்கியபங்கு மேற்படி சிந்தனையாளர்கள் சார்ந்தது என்றால் மிகையாகாது. தற்போதைய தமிழ்ப்பொதுப்புத்தியும் இந்த நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. மேற்படி புத்திஜீவிகள்மீதும் சிவில்சமூகம்மீதும் பொதுவான வெறுப்புக்கும் எதிர்ப்புக்கும் காரணம் இல்லாமலும் இல்லை. புத்திஜீவிகள் குழுமம் தன்னைச் சமூகத்துடன் தொடர்பற்ற ஒரு பிரத்தியேக இனமாகக் கொள்வதும் அதிகாரத்தின் நியாயப்படுத்தலின் துணைக்கரமாகச் செயற்பட்டதும் இதற்கு முக்கிய காரணங்களாகும். இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போது, யுக்கோசிலாவியாமீது நேட்டோவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி புத்திஜீவிகள் குழாம் கருத்துக்குண்டுகளைப் போட்டுக்கொண்டு இருக்கின்றது. புத்திஜீவிகள் சமூகமும், ஒரு சிவில் சமூகமும் எப்பொழுதும் முற்போக்காகவும் மனிதநேயம் கொண்டதாகவும் இருக்கும் என்றில்லை. வரலாற்றில் இவற்றின் மனிதவிரோத பிற்போக்கு செயல்பாடுகள் மலிந்தே கிடக்கினறன. ஆனால் ஒரு சமூக முன்னேற்றத்திற்கு அல்லது ஒரு சோசலிச பரிமாற்றத்திற்கு இவ்விரண்டின் இருப்பும் தனித்தன்மையும் முக்கியமானது என்பது எனது கருத்து. மெக்சிக்கோவின் சியப்பா பகுதிமக்களை மையமாகக் கொண்டு எழுந்த ஸபட்டிஸ்ரா இயக்கத்தின் உபதளபதியான மார்க்கோ தமது போராட்டத்தில் நுழைய சிவில்சமூகத்துக்கு அறைகூவல் விடுத்து சியப்பா மக்கள் போராட்டத்தில் சிவில்சமூக போராட்டத்தையும் இணைத்து ஓரளவு வெற்றியும் கண்டார். பின்நவீனத்துவப்புரட்சி என சில கட்டுரையாளர்களால் விபரிக்கப்பட்ட இப்பரிசோதனை முயற்சி(எழுச்சி) மற்றைய நாட்டுப் போராட்டக்குழுக்களால் கூடிய கவனத்துடன் அவதானிக்கப்பட்டதெனினும் அது பின்பற்றப்படுமளவுக்கு உகந்ததாகக் கருதப்படவில்லை. இதற்கு இம்முயற்சியில் காணப்பட்ட பலவீனங்கள்மட்டும் காரணமல்ல. மாறாக, பல முற்போக்குக் குழுக்களின் ஒருவித ஜனநாயக விரோதக்கோட்பாடுமே காரணமாகும். இதுவரை நடந்த போராட்டங்களும் புரட்சிகளும் கொடிய அதிகாரவர்க்கத்தையும் அதிகார ஆட்சிகளையும் உருவாக்கியமையின் காரணமாகவே ஸபட்டிஸ்ரா இயக்கம் தமது போராட்டத்தின் ஒரு பகுதியாக சிவில் சமூகத்தையும் தோழமைக்கு அழைத்தது மாத்திரமல்ல சிவில் சமூகத்திற்குச் சமபங்கையும் அழித்தது. இது புரட்சிகர வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாகும்.

சிவில் சமூகம்பற்றிய புரிதல் பல்வேறு கோட்பாடுகளுக்கு ஏற்றவாறும் பல்வேறு காலகட்டங்களுக்கு ஏற்றவாறும் மாறுபடுகிறது. மார்க்ஸ் சிவில் சமூகத்தை அரசின் ஒரு பகுதியாகவே கண்டார்.(?) மார்க்சியரான கிராம்சியால் இதன் தனித்தன்மை உணரப்பட்டு கருத்து மேலாண்மைக்கான போராட்டதளமாக அடையாளம் காணப்பட்டு மேற்குநாடுகளின் புரட்சியாளர்கள் இதைப்பயன்படுத்த வேண்டியதின் முக்கியத்துவம் உணரப்பட்டது. கிராம்சி சிவில் சமூகத்தை அரசுக்கும் பொருளாதார அடித்தளத்துக்கும் இடைப்பட்ட ஒப்பீட்டளவில் சுயாதீனமான ஒரு தளமாகக் கண்டார். மேற்குநாடுகளில் அரசுகள் தமது இருப்பை சிவில் சமூகமேலாண்மைமூலம் ஸ்திரப்படுத்துவதாகவும் (இங்கு அல்தூஸரின் கருத்தியல் அரசநறுமம் (ஐனநழடழபiஉயட ளுவயவந யுppயசயவரள)?) ஒத்துப்போவதைக்காணலாம். ஆகவே இந்நாடுகளில் அரசுக்கெதிரான போராட்டம் சிவில் சமூகத்தில் புரட்சியாளர்கள் மேலாண்மை பெறுவதன்மூலமே சாத்தியமென நம்பினார். இம் மேலாண்மைக்கான போராட்டத்தில் புத்திஜீவிகளின் பங்கு முக்கியமாகக் கருதப்பட்டது. அத்துடன் எல்லாருமே புத்திஜீவிகள் என்ற ஜனநாயகக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தார். எனினும் ஒரு சிலராலேயே புத்திஜீவிகள் செயல்பாட்டைச் செய்யமுடியும் என்றார்.
அதிதீவிர ஜனநாயகத்திற்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் மேற்குறிப்பிட்ட சிவில் சமூகமும் புத்திஜீவிகளும் ஒரு பொதுத்தளமும் மிகமுக்கியம் எனலாம். மேற்குநாடுகளின் தாராளவாத ஜனநாயக அரசுகளில் நிலவும் ஒரு பொதுத்தளமும் சுயாதீன புத்திஜீவிகள் குழாமும் சிவில் சமூகஅமைப்புகளின் செயற்பாடும் இந்நாடுகளில் நிலவும் ஒப்பீட்டளவிலான ஜனநாயகப் போக்குக்குக் காரணமாகும்.

இன்று சிவில் சமூகத்தைப்பற்றிய ஆரம்பகால அங்கலாய்ப்புகள் எல்லாம் ஆறி அடங்கிவிட்டன. எழுபதுகளில் போலந்திலும் எண்பதுகளின்முடிவில் கிழக்கு ஐரோப்பியநாடுகளின் அரசுக்கெதிராக எழுந்த மக்கள் எழுச்சியின்போதும் உச்சநிலையை அடைந்த விவாதம் பின் மந்தநிலையை அடைந்துவிட்டது. சிவில்சமூகம் என்றால் அரசுக்கெதிரிடையாக உள்ள சமூகவெளியை அல்லது வாழ்வுத்தளத்தைக் குறிப்பிடுவதாகவும் அரசுக்கும் பொருளாதார அடித்தளத்திற்கும் இடைப்பட்ட ஒரு கலாச்சாரத்தளமாகவும் கருதப்படுகிறது. சிவில் சமூகம் அல்லது பொதுத்தளம்பற்றிய புரிதல் தாராளவாதிகளிடத்தில் (ர்யnயொ யுசநனெவஇ னுயாசநனெழசகஇ யுனெசறந யுசயவழஇ சுயறடள) சமூகசீர்திருத்தவாதிகளிடத்தில் (ர்யடிநசஅயளஇ டீழரசனநைர) மற்றும் மார்க்சிஸ்டுகளிடத்தில் வௌ;வேறு மாதிரியான விளக்கத்தையும் செயற்பாட்டையும் பெறுகிறது. கிராம்சி கருத்துப்படி சிவில்சமூகம் அரசுக்கும் பொருளாதார அடித்தளத்திலிருந்தும் மாறுபட்ட ஒப்பீட்டளவில் சுயாதீனமான தளம் ‘hபர்மாஸ் பொதுத்தளத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அரசு தனது இருப்புக்கு நியாயம் பெறும் தளம் இது என்கிறார். அத்துடன் இதற்கும் அரசுக்கும் சமனான பங்கு அளிக்கிறார். புரிதலுக்கு கஷ்டமான இவரின் பொதுத்தளம், சிவில்சமூகம் பற்றிய கோட்பாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளுக்குத்தான் பொருந்தும் எனலாம்.

யுசநனெவ மக்களின் சுயமான செயல்பாட்டை பொதுத்தளமாக கருதுகிறார். சுயதini முழவாயசi எமதுநாடுகளில் அரசுசார்பற்ற நிறுவனங்கள் சிவில்சமூக பங்கை ஆற்றுவதாகக் கூறுகிறார். யுசயவழவின் கருத்துப்படி மேற்கில் சிவில்சமூகம் மேலிருந்து நிறுவப்பட்ட, அதாவது அரசால் நிறுவப்பட்ட ஒரு தளமாகவும் கிழக்கில் கீழிருந்து எழும், அரசுக்கு எதிரான ஒரு தளமாகவும் பொருள் பெறுகிறது. அறற்ரோவின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான விளக்கம், எமது நாடுகளுக்கான புரிதலுக்கு உதவிசெய்யும் எனக் கூறலாம். கிட்டத்தட்ட இதே கருத்துடன் மணிரத்தினத்தின் ~பம்பாய்| திரைப்படத்தின் இறுதிக்காட்சி அமைந்திருந்தது. அதாவது இந்து, முஸ்லிம் கலகத்தை ~சிவில்சமூகம்| எழுந்து தடுப்பதைப்போன்று அக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கற்பனைக்காட்சியில் சிவில்சமூகத்தின் தன்மைகள் காணப்படுகின்றன.

மூன்றாமுலக நாடுகளில் புதிய சமூக இயக்கங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் சிவில் சமூகமாகச் செயற்படுகின்றன என்று கூறலாம்.மூன்றாமுலக நாடுகளில் சிவில்சமூகம் புரட்சி சம்பந்தப்பட்டிராவிடினும் அதன் ஜனநாயகமயப்படுத்தலுடன் சம்பந்தப்பட்டதாக உள்ளது. பலநாடுகளில் சிவில்சமூக எழுச்சி நாட்டின் ஆட்சியாளர்களை மாற்றியுள்ளது. பிலிப்பைந்து, பங்களாதேசம், மாலி, i‘ற்றி போன்ற நாடுகளை உதாரணமாகக் குறிப்பிடலாம். ஈழத்தில் குறிப்பாக தமிழ்த்தேசியவாதத்தின் ஆரம்பக்கட்டத்தில் உருவான அன்னையர் முன்னணி, பிரஜைகள் குழு போன்றவை சிறீலங்கா அரசினது அட்டூழியங்களுக்கு எதிராகத் துணிவுடன் செயற்பட்டது. அன்னையர் முன்னணியின் உதாரணத்துடன் சிங்களப்பகுதியில் உருவாக்கம் அடைந்த சிவில்சமூகம், சிங்களப்பகுதியில் ஐக்கியதேசியக்கட்சியின் அனர்த்தங்களுக்கு எதிராக எழுச்சியடைந்தது. அது ஐக்கிய தேசியக்கட்சி தேர்தலில் தோல்வியடைவதற்கும் காரணமாக அமைந்தது. ஆனால், இச் சிவில்சமூக எழுச்சியைச் சுவீகரித்துக்கொண்ட சிறீலங்கா சுதந்திரக்கட்சி, அக்காலத்தில் நம்பிக்கை தருபவராகக் கருதப்பட்ட சந்திரிக்கா குமாரதுங்காவை ஆட்சிக்குக்கொண்டு வந்தது. ஆனால் தெற்கில் உருவான சிவில்சமூக எழுச்சி, சிங்களப் பகுதியின் மக்கள் எழுச்சிகளின் முக்கிய கூறுகளில் ஒன்றான இனவாதத்தில் விதிவிலக்காக இருக்கவில்லை. மாறாக அது, சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் ஒரு இனவாத சிவில்சமூகமாக மாறி, தெற்கில் நடமாடும் தமிழர்களை அவதானிக்கும் ஒரு அரசு உப படையாகவும் சில இடங்களில் சுயநீதி வழங்கும் ஒரு அமைப்பாகவும் உருவெடுத்தது. இலங்கையில் பெரும் பொருளாதார வீழ்ச்சியின்போதும் இனவாத யுத்தத்தை அரசால் நடத்தக்கூடியதாக உள்ளமைக்கு, இனவாத சிவில் சமூகம்தான் காரணம். அரசகருவியையும் சிவில்சமூகத்தையும் இனவாதத்தில் தோய்த்து தமது அரசைக் காப்பாற்றுவதில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியினர் மிகவும் கெட்டிக்காரர்கள். தமிழ்த்தேசியவாதத்தின் ஆரம்பகாலத்தில் தமிழ்ப்பகுதிகளில் எழுந்த சிவில்சமூகம் இலங்கை அரசுக்கும் ஆயுத இயக்கங்களுக்கும் சவாலாக அமைந்தது. இலங்கை அரசு தமிழ்மக்கள் அழிப்பு நடவடிக்கையின்போதும் இயக்கங்களுக்கிடையேயான மோதலின்போதும் மற்றைய இயக்கங்கள் புலிகளால் தடைசெய்யப்பட்டு தாக்கப்பட்டபோதும் தன் எழுச்சியாக எழுந்த சிவில் சமூக சிறு குழுக்கள் மயிர்க்கூச்செறியுமளவுக்குத் தலையீடுகள் செய்தன. தமிழ்ப்பகுதிகளில் சிவில் சமூகத்தின் இயக்கம், 1987இல் விடுதலைப்புலிகளால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சில சமயங்களில் இயக்கங்களும் சிவில்சமூக உருவாக்கத்திற்கு உந்துதல் கொடுத்தன. குறிப்பாக இந்திய இராணுவக்கட்டுப்பாட்டில் தமிழ்ப்பகுதி இருந்தபோது இந்தியப்படைக்கு எதிராக சிவில்சமூக எதிர்ப்பைப் புலிகள் ஊக்குவித்தனர். ஆனால் இந்திய இராணுவம் பத்திரிகையாசிரியர்களை வேட்டையாடியும் அச்சுறுத்தியும் அச்சுக்கூடத்தைத் தகர்த்தும் சிவில்சமூக இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி விதித்தது. அதன்பின்பு தமிழ்ப்பகுதிகளில் சுயாதீன சிவில்சமூக செயற்பாடு தடைப்பட்டது. அதன்பின் இலங்கை அரசாலும் அல்லது அதன் சார்புக்குழுக்களாலும் வலுக்கட்டாயமாக உருவாக்கிய பொதுத்தளம்தான் மிஞ்சியது. தமிழ்ஈழ நிர்வாக அரசும் தமக்கு இசைவான சிவில்சமூகத்தை உருவாக்கி மக்களுக்கு ஒரு அரசியல் அகற்றப்பட்ட தனிப்பட்ட தளத்தைத்தான் (pசiஎயவந ளிhநசந) அனுமதித்தது. ஆனால் புத்திஜீவிகளை சிவில்சமூகமும், சிவில்சமூகத்தைப் புத்திஜீவிகளும் உருவாக்குகிறார்கள் என்றால் மிகையாகாது.

இவ்வாறான சிவில்சமூக முடக்கம், தமிழ்ப் புத்திஜீவிதக் குழுமத்திலும் பாதிப்பை உண்டுபண்ணியது. ஈழப்புத்திஜீவிகள் பலர், சிறீலங்கா அரச தாக்குதலுக்கும் இயக்கங்களின் அச்சுறுத்தல்களுக்கும் ஒடுங்கி, அரசியலற்ற ஒரு கலை கலாச்சாரத்தளத்தைத் தேர்ந்து எடுத்தனர். இத்தளம் கிழக்குமாகாணம், கொழும்பு, தமிழ்நாடு, புகலிடம் எனத்தளம் கொண்டது. தமிழ்த் தேசியப்போராட்டம் கலை, கலாச்சார உற்பத்தியை வீறுபடுத்தியதெனினும், அது ஒரு பிரச்சார அங்கமாக உருவெடுத்தமையாலும் அதன்மீதான விமர்சனம் ஆபத்தானதாகக் கருதப்பட்டதாலும், அத்துடன் இக்கலைப்படைப்புக்கள் புத்திஜீவிகளால் தரம் குறைந்ததாகக் கருதப்பட்டதாலும் ஒதுக்கப்பட்டது. கொழும்பில் பல்வேறு ஆபத்தினிடையேயும் ஒரு சிறு சிவில்சமூகத்தளம் உருவாகியது. கொழும்பில் உள்ள சிவில்சமூக செயற்பாடுகளிற்கு, இலங்கையின் மற்றைய பகுதிகளுடன் ஒப்பிடும்பொழுது - இங்கு சர்வதேச சமூகத்தின் பார்வை இருப்பதால் - ஓரளவு பாதுகாப்பு இருக்கிறது. ஆயினும் இங்கும் சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் கொலைசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், கொலைமிரட்டலுக்கு உள்ளாகியும், சிறையிலடைக்கப்பட்டும் வருகிறார்கள். தவிர, ஒரு Nபுழு-ஐவெநடடநஉவரயடள வர்க்கமும் இங்கு செயற்பட்டு வருகிறது. (மேலதிக விபரங்களுக்கு சரிநிகர் 131 கோணேஸ்வரிகள் கவிதைபற்றிய எனது விமர்சனத்தைப் பார்க்கவும்)

தமிழ்நாடும் புகலிடமும் ஒருவித சுயாதீன புத்திஜீவிகள் தலையீட்டிற்கு உதவியது. தமிழ்நாட்டில் உருவான தலித்திய இலக்கியப்போக்கு, திராவிட, நவீனத்துவ, பின்நவீனத்துவ விவாதங்களில் ஈழப் புத்திஜீவிகள் பங்குபற்றுகின்றனர். இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்ற மனப்பாங்கிலும் தமது அரசியல் நிலைப்பாடுகளுக்கு பலம் சேர்க்கும் முகமாகவும் தமிழ்ச் சிறுசஞ்சிகை உலகம் இவர்களுக்குத் தளம் கொடுத்தது. அங்கு தளம்பதித்த ஈழத்துப் புத்திஜீவிகள் சிலர், ஒரு அநசஉநயெசலயின் ஆவேசத்துடன் தத்தம் தளத்திற்குச் சேவையாற்றுகின்றனர். (காலச்சுவடு-17 இதழில் டானியல்பற்றி என்ற எனது விமர்சனத்தைப் பார்க்க). ஆனால் சில ஈழப்புத்திஜீவிகளின் தமிழகப் பங்களிப்புக் காத்திரமாக உள்ளது பாராட்டக்கூடிய விடயம். ஏனெனில், தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழ் இல்லை என்கிற கலாச்சார முதலாளிகளும் பிரம்மரிஷிகளும் தனியறிக்கையாளர்களும் நிறைந்த இடம்.

புகலிடத்திலும் புத்திஜீவிகளின் பங்கு புகலிடப் பிரச்சினையுடன் தமிழக, ஈழ விவாதங்களுடன் தொடர்புடையதாக அமைகிறது. புதிய கருத்துக்கள் பல ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. புகலிடத்தில் புத்திஜீவிகளின் நிலையை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, சபாலிங்கம் கொலைக்கு முந்திய நிலை. மற்றது அதற்குப் பிந்தியநிலை, பிந்திய காலத்தில் உலக அளவில் சோசலிச அல்லது சமூகமாற்ற கனவுகள் மந்தமடைந்ததும் இந்நிலையைச் சற்று ஸ்தம்பிதமடையச் செய்தது. ஆனால் பெண்ணிய, தலித்திய மற்றும் ஜனநாயகம் பற்றிய சொல்லாடல்கள் இங்கு மிகமுக்கியம் பெறுகின்றன. புகலிடத்தில் நடைபெறும் எல்லா புத்திஜீவிதச் செயற்பாடுகளும் ~பிரயோசனமும்| புத்திசாலித்தனமானதுமல்ல. ஆனால் சுயாதீனமான ஒரு செயல்பாடு என்று கூறலாம். சமீபத்தில் சில முக்கியமான விவாதங்களை இவர்கள் தொடங்கியுள்ளார்கள். புகலிட சிவில்சமூகப் புத்திஜீவிகள் வரலாற்றில் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னுமொரு அம்சம், ஐடீஊ ஒலிபரப்புநிறுவனத்தின் பங்களிப்பும் ஆகும். இது இயக்கசார்பான புத்திஜீவிகளையும், இயக்கத்திற்கு இசைவான ஒரு பொதுத்தளத்தையும் உருவாக்கி வருகிறபோதும் ஒருவித கறாரான இயக்கப்போக்கை விடுத்து, தமிழ்த்தேசியக் கட்டுமானத்துக்குள் ஒப்பீட்டளவில் சுயாதீனமான ஒரு புத்திஜீவிதக் குழுமத்தை இது உருவாக்கி வருவதாகும். ஈழமுரசு பத்திரிகைக்கும் இதில் ஓரளவு பங்குண்டு. அத்துடன் யாழ்ப்பாணம் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வந்ததாலும் சிறீலங்கா அரசின் தமிழ்மக்கள் மீதான யுத்தம் தற்போது கொடூரமடைந்துள்மையாலும் சுயாதீனமாக அல்லது ~தீவிர ஜனநாயக முகாமுக்குள்| முன்பு இருந்த புத்திஜீவிகள் பலர், இன்று புலிஇயக்க ஆதரவான ஆனால் ~சுயமான| தளத்தை உருவாக்கிச் செயற்பட்டுவருவதும் முக்கியமான ஒன்றாகும்.

வரலாற்றில் சிவில் சமூகம் பல்வேறு பரிமாணத்தை எடுக்கிறது. அது எல்லா இடத்திலும் சரியானநிலைப்பாட்டை எடுக்கும் என்று இல்லை. சில இடங்களில் பிற்போக்கு நிலைப்பாட்டையும் எடுக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் சுயமான சிவில்சமூக செயற்பாட்டை அரசு தடுப்பது அதன் சர்வாதிகாரப்போக்குக்கு உதாரணம். அத்துடன் ஒரு சமூகத்தின் கலாச்சாரவாழ்வையும் வாழ்வுலகையும் இது பாதிக்கும். முடிவில் ஒரு அரசியல் கலாச்சார வரட்சிதான் ஏற்படும். சிறீலங்கா அரசும் தமிழ்ப்பகுதி நிர்வாக அரசும் ஒரு சுயாதீனமான தமிழ் சிவில்சமூக செயற்பாட்டை அனுமதிக்க மறுக்கின்றனர். இருபகுதியினரும் தமக்கு இசைவான ஒரு சிவில்சமூகத்தைக் கட்டி அமைப்பதிலேயே அக்கறையாக உள்ளனர். ஆனால் ஒரு சமூக கலாச்சார முன்னேற்றம் ஒரு சுயாதீன சிவில் சமூக செயற்பாடு அற்ற நிலையில் சாத்தியமாகா, எனது சிவில் சமூகம் பற்றிய புரிதல் ஒருவயப்பட்டதல்ல. மற்றும் சிவில்சமூகம்பற்றி அதன் வரலாற்றில் பல்வேறு விளக்கங்கள் கோட்பாடுகள் உள்ளன. சிவில் சமூகம் பல்வேறு தருணங்களில் பல்வேறு பொருள்பட உபயோகிக்கப்பட்டமை, சிவில் சமூகம் என்றால் என்ன என என்னால் அறுதியாக கூறமுடியாமல் உள்ளது. ஒரு சமூக முன்னேற்றத்திற்கு சுயமாக செயற்படும் சிவில்சமூகமும், சுதந்திர புத்திஜீவிகள் குழாமும் போதுமான காரணமாக இல்லாவிடினும் அத்தியாவசிய காரணமாகும்.

ஜனநாயகம் சுவாசிக்கும் காற்றுப்போன்றது
கோர்பாச்சேவ்