|
மேற்கு நாடுகளின் வளர்ச்சியும் மூன்றாமுலகமும்.
வாணிதாசன்.
குறுகியகால எல்லைகளில் பெரும் பொருளாதாரச் சாதனைகளை நிறைவேற்றி லாபத்தைத் திரட்டும் வேட்டையில் மேற்கு நாடுகள் கையாண்ட உற்பத்திமுறையால் மூன்றாம் உலக நாடுகளின் சூழலை எவ்வளவு துரம் பாதிப்புறச் செய்துள்ளது என்பது மிக விரிவான ஆய்வுக்கு இட்டுச் செல்வது.
கடந்த காலங்களில் மேற்கு நாடுகள் மேற்கொண்ட கைத்தொழில் விவசாயக் கொள்கைகள் சூழலிலும், மூலவளங்களின் விரயத்திலும் பெருங் கேடுகளை விளைவித்தது. இதுபற்றி இன்று மூன்றாம் உலக நாடுகளின் ஆய்வாளர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் காத்திரமான சிந்தனைப்போக்கு வளர்ந்து வருகிறது.
18ம் நூற்றாண்டில் ஐரோப்பியத்தொழில் உற்பத்தியில் நீராவிமூலம் இயந்திரங்களை இயக்கும் முறை அறிமுகமானது. அதற்கு வேண்டிய எரிபொருள் மரங்களாகவே இருந்தது. இதற்காக அதிகமான ஐரோப்பியக்காடுகள் காடுகள் அழிக்கப்பட்டன. அத்துடன் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்த நாடுகளிலும்; காடுகள் அழிக்கப்பட்டு எரிபொருளாக ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஐரோப்பாவில் காடுகள் அழிக்கப்பட்டதால் அதனுடன் வாழ்ந்த மிருகங்கள், பறவைகள், சிறு பிராணிகளும்; அழிவுற்றன. தற்போதுள்ள ஐரோப்பிய காடுகளில் 80சதவிகிதத்துக்கு மேற்பட்ட காடுகள்;; பிற்காலப்;பகுதிகளில் நடப்பட்டவைகளே.
நிலக்கரியின் கண்டுபிடிப்புக்குப் பின் அதற்காக நிலங்கள் கிண்டப்பட்டதும் காடுகள் அழிக்கப்பட்டதும் தொழிற்சாலைகளின் கழிவுகளும், ஆலைகளிலிருந்து வரும் நச்சுப் புகையும் தூசிகளும் மனிதனுக்கும் சூழலுக்கும் அதிக பின்விளைவுகளைக் கொடுத்தது. பின் எண்ணெய்; பாவனைக்கு வந்தவுடன்;; அதனாலும்; சூழலுக்கு ஏற்பட்ட தாக்கங்கள் பல. எண்ணெய் எடுக்கும் இடங்களும் அதைச் சுற்றிய பகுதிகளிலும்;; அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. அன்று எண்ணெய் சுத்திகரிப்பால் ஏற்பட்ட கழிவுப்பொருட்கள் அப்படியே வெளிகளிலும் காடுகளிலும் கடல்களிலும் கொட்டப்பட்டதால் அவற்றாலும்; சூழலுக்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டது.
15ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் அமெரிக்காவை ஆக்கிரமித்ததும், அங்குள்ள செல்வங்களை அபகரித்ததும் நாம் அறிந்தவையே. அத்துடன் அன்று அங்கு வாழ்ந்த 70 மில்லியன் மக்களையும் 100 மில்லியன் பைசான் எருமைகளையும் ஐரோப்பியர் அழித்தனர.; பல்ஆயிரம் வருடங்களாக அந்நாட்டு மக்கள்; பேணிக்காத்துவந்த மரங்களும், காடுகளும்; அழிக்கப்பட்டன.
இரண்டாம் உலகயுத்தத்தின் பின் மக்களின் வாழ்க்கைமுறையிலும் உற்பத்திமுறைகளிலும் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. அத்துடன் பல தொழில் ஸ்தாபனங்கள், அணுஉலை ஆலைகள் உருவாக்கப்பட்டது. உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின்; 90 சதவிகிதம் மூன்றாம் உலக நாடுகளில் இருந்துதான் பெறவேண்டியிருந்தது. உதாரணம்: உலோகங்கள், எண்ணெய், இரசாயனஆலைகளுக்கு வேண்டிய மூலப்பொருட்கள், அணுஆலைகளுக்கு வேண்டிய யூரேனியம், உலோகங்கள், தாதுப்பொருட்கள், அது மாத்திரமல்லாமல் தேயிலை, கோப்பி, கொக்கோ, றப்பர், பருத்தி, தென்னம்பொருட்கள், பழவகைகள் என்று அடுக்கிக்கொண்டு போகலாம். இவைகளைப் பெறுவதற்காகவும், உற்பத்தி செய்வதற்காகவும் இயற்கை அழிக்கப்பட்டது.
மிருக வளர்ப்பு :
அமெரிக்காவின் பெரிய இரசாயன ஸ்தாபனங்கள், எண்ணெய் ஸ்தாபனங்கள், காப்புறுதி ஸ்தாபனங்கள் பெரிய அளவில் மிருகங்களை வளர்க்கும் முறையை உருவாக்கின. அத்துடன் கோதுமை, சோளம் ஆகியவற்றைக் கொண்டு குறுகிய காலத்தில் மிருகங்களின் பருமனையும் நிறையையும் அதிகரித்து அதிக இலாபமடையும் முறைகளையும் கண்டறிந்தார்கள். இதனால் இவர்கள் சிறு சிறு இடங்களில் பெருந்தொகையான மிருகங்களை வளர்க்கத் தொடங்கினார்கள். இவர்களின் முக்கிய நோக்கம் அதிக மிருகங்களை வளர்த்து அதிக இலாபம் அடைவதே. ஆனால், இதனால் ஏற்படும் தீமைகளையும் சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களையும் பற்றி அறிந்துகொள்ள இவர்கள் முயற்;சிக்கவும் இல்லை. விரும்பவும் இல்லை. இம்முறை நாளடைவில் ஐரோப்பாவிற்கும் பரவியதுமல்லாமல் இடநெருக்கடி காரணமாக மிகச் சிறு இடங்களிலும் பெருந்தொகையான மிருகங்களை வளர்க்கும் முறைக்கும் வித்திட்டது. இவ்வகையில் பெருமளவு விலங்குகளை வளர்க்கும் போது அவற்றிற்கான உணவுவகைகளும் பெருமளவில் தேவைப்படுகின்றது. கால்நடை வளர்ப்பின்போது முக்கியமாக கோதுமை, சோளம், சோயா, எண்ணெய்வித்து வகைகளே உணவாகப் பாவிக்கப்படுகின்றன. மாடு வளர்ப்பில் 1 கிலோ இறைச்சியைப் பெறுவதற்கு 16 கிலோ கோதுமையும் அத்துடன் எண்ணெய் வித்து வகைகளும் சோயா, சோளம் ஆகியனவும் தேவைப்படுகின்றது. இதில் ஏறத்தாழ 15 கிலோ உணவுகள் விலங்கின் எரிபொருள் தேவைக்கும் (நுநெசபல pசழனரஉவழைn) மிகுதி கழிவுப் பொருட்களாகவும் வெளியேற்றப்படுகின்றது. போசனைக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களாகிய சோயா, சோளம், கோதுமை, எண்ணெய் வித்துக்கள் போன்றவை அனேகமாக பிரேசில் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு மலிவான விலையில் மேற்குநாடுகளால் இறக்குமதி செய்யப்படுகின்றன.
பசுமைப்புரட்சி:
60களில் பெருமளவில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் மூன்றாமுலகின் பல பகுதிகளில் புதுவிதமான உற்பத்திமுறைகளை அறிமுகம் செய்தார்கள். உலகநாடுகளின் உணவுத்தேவைகளை பசுமைப்புரட்சி மூலமாகவே நிறைவுபடுத்தமுடியும் என்ற கருத்தை விவசாய வல்லுநர்கள் பல கமத்தொழிலில் ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்தது மாத்திரமல்லாமல் இம்முறையின் மூலமாகத்தான் மூன்றாம் உலக நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமையையும் நீக்கமுடியும் என்ற கருத்தையும் வெளியிட்டார்கள். மாறுதலில்லாத ஒரே தானிய தாவரங்களை ஒரு இடத்திலேயே சிறப்பான வித்துக்கள் மூலம் பயிரிட்டு அதிக உற்பத்தியை அடைய முடியும் என்றும் கூறப்பட்டது. இதற்காக பல பெருங்காடுகள் பெரிய அளவில் அழிக்கப்பட்டதுடன் ஏற்றுமதிக்காகவும் பல புதிய புதிய தானிய எண்ணெய் வித்துக்கள் மூன்றாம் உலகநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் மேற்குலகின் பாரிய மிருகப்பண்ணைகளுக்கு பெருந்தொகையாக தானியங்கள் வேண்டியிருப்பதால் அதற்கெனப் பெருமளவு பொருட்கள் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்பட்டது. இப்படியாக மூன்றாம் உலகநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் பெரும்பகுதி மேற்குநாடுகளில் உணவுக்காக வளர்க்கப்படும் மிருகங்களுக்காகவும், அவர்களின் செல்லப்பிள்ளைகளான நாய் பூனைகளுக்கு உணவாகவும் பயன்படுத்தப்பட்டது.
சிறிதளவு அந்நிய செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் இத்தொழிலுக்காக மூன்றாம் உலகநாடுகளிலுள்ள செழிப்பான பிரதேசங்களும் காடுகளும் அழிக்கப்பட்டன. இதனால் இயற்கைச்சமநிலை பாதிக்கப்பட்டது.. காடுகள் அழிக்கப்பட்டதால் மழைவீழ்ச்;சி குன்றி இந்நாடுகள் வரண்ட பிரதேசங்களாகின்றன. அத்துடன் காடுகள் அழிக்கப்பட்டு விட்டதால் நிலஅரிப்பு ஏற்படுவதோடு, நீர் தேங்கி நிற்காது வழிந்தோடுவதால் மேல் மண்ணில் உள்ள கனிமங்களையும் கழுவிக்கொண்டு கடலில்கொண்டு சேர்த்துவிடுவதால் நிலத்தடி நீரின் அளவும் குறைகின்றது. அது நாளடைவில் மண்ணின் செழிப்புத்தன்மையைக் குறைப்பதோடு விளைச்சலையும் குறைக்கிறது. மழைவீழ்ச்சி குறைவதால் விவசாயத்திற்கு நிலத்தடி நீரைப் பாவிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே சொல்லும் அதேநேரத்தில் நிலத்தடி நீர் மேல் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் சிதைவடைந்து கீழுள்ள உவர்நீர் நன்நீருடன் கலக்கின்றது. அதனால் பயிர்;ச்செய்கை பண்ணப்படும் நிலம் உவராக மாறுகின்றது. மேலும் பயிர்கள் பெரும் விஸ்தீரணத்தில் செய்கை பண்ணப்படுவதாலும் சுழற்சிமுறை பயிர்ச்செய்கை செய்யமுடியாதிருப்பதாலும் மண்ணின் தன்மை மாறுபாடு அடைகிறது. இவற்றை நிவர்த்;தி செய்வதற்காக, நவீன செயற்;கை உரங்களையும் பூச்சிகொல்லி மருந்துகளையும் அதிக அளவில் பாவிக்க வேண்டியதாயிற்று. இவை எல்லாம் பெரும்பாலும் மேலைநாடுகளில் இருந்து அன்னியச் செலாவணியைக் கொடுத்து மூன்றாம் உலகிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றது. அதிகஅளவில் செயற்கை உரங்கள் பாவிப்பதால் மண்ணின்தன்மை மாறுபட்டு அமிலத்தன்மை கூடுகிறது. செடிகொடிகள் வேகமாக வளருவதால் அவற்றின் நோய்எதிர்ப்புச்சக்தி மாறுபட்டு அதிக அளவில் கிருமிநாசினிகளைப் பயன்படுத்தும் தேவையும் ஏற்படுகிறது. மண்ணின் தன்மை மாறுவதால் இயற்கையாகவே மண்ணிலுள்ள நைதரசன் உற்பத்தி செய்யும் நுண்ணங்கிகள் மடிகின்றன. அழுகல் வளரிகள் பாதிக்கப்படுவதால் செடிகொடிகளின் காய்ந்த இலைகளும் குப்பைகளும் உக்கலாக இலகுவில் மாற்றமடைய முடியாதிருப்பதால் அவற்றை தாவரங்கள் மீண்டும் பயன்படுத்தமுடியாமல் போகின்றது. மண்ணின் தன்மை மாறுபடுவதால் தாவரங்களின் வளர்;ச்சிக்குத் தேவையான முக்கிய கனிமங்களாகிய கல்சியம், பொஸ்பரஸ், மங்கனிஸ், கந்தகம் போன்றன நீரில் கரையும் தன்மையற்ற பொருட்களாக மாற்றப்படுவதால் தாவரங்களால் உறிஞ்சப்பட முடியாதவையாக உள்ளன. செயற்கை உரங்களிலுள்ள தாவரங்களால் பாவிக்கப்படாத மேலதிக நைதரசன்பொருட்கள், பொஸ்பேற், சல்பர் போன்றவற்றின் ஒரு பகுதி நிலத்தடி நீரைச் சென்றடைகிறது. மற்றைய பகுதி அடித்துச் செல்லப்படும் மழைநீரோடு கலந்து ஆறு, குளம், குட்டை, கடல் போன்றவற்றைச் சென்றடைகிறது. இவற்றின் சேர்க்கையால் நிலத்தடி நீரின் நைதரசன் செறிவு கூடி இந்நீரைப்பாவிப்பதால் மனிதருக்கும் குழந்தைகளுக்கும் தீமைகள் ஏற்படுகின்றது. குளம் குட்டைகளில் நைதரசன், பொஸ்பேற் ஆகியவற்றின் செறிவு அதிகரிப்பதால் பாசியின் வளர்ச்சி அளவுக்கு அதிகமாக பெருகுகின்றன. இவை நீரில் கரைந்திருக்கும் ஒட்சிசனைப் பாவிப்பதால் நீரில் ஒட்சிசனின் அளவு குறைகிறது. இதனால் ஒட்சிசனை நம்பி வாழும் உயிரினங்கள் மடிகின்றன. அத்துடன் ஒட்சிசன் இல்லாமல் வாழும் உயிரினங்கள் பெருகுகின்றன. இதே போன்றே பரவைக்கடல்கள் போன்ற இடங்களிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகின்றது. பாசிகளின் அழுகலினால் வெளியிடப்படும் மீதேன்வாயு நீரில் கரைவதாலும் உயிரினங்களுக்கு பாதிப்பு உண்டாகிறது. சூரியவெப்பத்தினால் மேலெழும்பும் மீதேன்வாயுவினால் வளிமண்டலம் மாசடைகிறது. மேலும் மண்ணின் தன்மையில் மாற்றம் ஏற்படுவதால் இயற்கை உழவன் என்று அழைக்கப்படும் மண்புழு செத்து மடிவதால் மண்ணிற்குள் ஏற்படுத்தப்படும் மயிர்துளைக் காற்றோட்டம் தடைப்பட்டு தாவரவேர்களினதும் நுண்ணுயிர்களுக்கும் ஒட்சிசன் இல்லாமல் போய்விடுகின்றன.
அனேகமாக பூச்சிகொல்லி, பங்கசுகொல்லி மருந்துகளில் பாரஉலோகங்களும், அலோகங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால் கு.யு.ழு வின் அறிக்கையின்படி குடிநீரை மாசுபடுத்தும் முக்கியகாரணியாக பூச்சிகொல்லி மருந்துகளே அமைகின்றது. பூச்சிகொல்லியின் முக்கிய கூட்டுப்பொருட்களாக பிஸ்மத், அன்ரிமணி, துத்தநாகம், பாதரசம், இரும்பு, தகரம் போன்ற பாரஉலோகங்களும் கந்தகம், பொஸ்பரஸ், குளொறின், சயனைட் போன்ற அலோகங்களும் சேர்ந்துள்ளன. இப்பூச்சிகொல்லிகளால் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பூச்சிகொல்லியின் பாவனை தேவையற்ற பூச்சிகளைவிட பல பயனுள்ள பறவைகள், தேனீக்கள் போன்ற உயிரினங்களையும் அழிப்பதன்முலம் மீண்டும் மீண்டும் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகின்றது. அத்துடன் இவற்றின்; ஒருபகுதி தாவரங்களால் உறிஞ்சப்பட்டும் ஒருபகுதி நிலத்தடி நீரையும் போய் அடைந்து குடிநீரை மாசுபடுத்துகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட தாவரஉணவுகள் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உணவாக உபயோகப்படுத்தப்படுகின்றது. தாவர தானியவகைகளில் மேற்குறிப்பிட்ட பாரஉலோகங்களும் அலோகங்களும் சிறிதளவிலேயே காணப்பட்டாலும் மிருகங்களுக்கு அதிகஅளவில் இத் தானியங்கள் உணவாகக் கொடுப்பதால் பாரஉலோகங்களும், அலோகங்களும் செறிவடைந்த நிலையில் அவற்றின் சிறுநீரகம், மூளை, ஈரல், தசைகள், தோல்கள், மற்றும் கொழுப்பு ஆகிய பகுதிகளிலும் படிவுகளாகப் படிகின்றன. இவைகளை மனிதர்கள் உண்ணுவதால் மனிதனுக்கும் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன.
கால்நடைக் கழிவுகள்:
உதாரணமாக 50 000 மாடுகள் வளர்க்கப்படும் ஒர் பண்ணையில் 10 மில்லியன் லீட்டர் கழிவுகள் கிடைக்கின்றன. இக் கழிவுகளில் பாரஉலோகங்களும் நைதரசன் பொருட்களும் இருப்பதால் இவை விரைவில் உக்கலாக முடியாத காரணத்தினால் மண்ணின் மீளத்தன்மைக்கு ஏற்புடையதாக இல்லாததால் அதன் ஒருபகுதி நிலத்தடி நீரை சென்றடைகின்றது. ஒருபகுதி மீதேன்;, நைதரஒக்சைட்டு, அமோனியா போன்ற வாயுக்களாக வளிமண்டலத்தில் கலந்து அமில மழையாக மீண்டும் பூமியை வந்து அடைகிறது. இதனால் மரங்கள், செடிகள் என்பன பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. ஒல்லாந்து விவசாய விஞ்ஞன ஆராய்ச்சிச் சர்வகலாசாலையினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அமிலமழை பெய்தலும், மண்ணின் தன்மை மாறுபடுதலும், காடுகள் அழிவதற்கும் முக்கிய காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பாவில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் அழிவதற்கும் இந்த அமில மழையே காரணம் என்றும் கண்டறியப் பட்டுள்ளது. இவ் வளிமண்டல மாசடைதல் ஐரோப்பாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. முழு வளிமண்டலத்தையும் மாசடையச் செய்கின்றது. இதனால் உலகின் எல்லாப் பகுதிகளுமே பாதிப்படைகின்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
உலக தானிய உற்பத்தியில், கோதுமையின் மூன்றில் ஒரு பங்கும், எண்ணெய் வித்துக்களாகிய சூரியகாந்தி, சோயா என்பவற்றில் மூன்றில் இரண்டு பங்கும், பால்மாவில் மூன்றில் ஒரு பங்கும் கால்நடை உணவாக பயன்படுத்தப்படுகிறது. கு.யு.ழு அறிக்கையின்படி. அமேசன், பிறேசில் போன்ற நாடுகளில் பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டு மந்தைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாற்றப்;பட்டுள்ளது. இங்கு வளர்க்கப்படும் கால்நடைகளின் மாமிசம் நெஞ்சுப்பகுதியிலும் தொடைப்பகுதியிலும் உள்ள இறைச்சிப்பகுதியாக வெட்டப்பட்டு மேலைநாடுகளுக்கே அனுப்பப்படுகின்றது. மிகுதி அரைக்கப்பட்டு மேலை நாட்டிற்கு நாய், பூனைகளுக்கு உணவாக அனுப்பப்படுகிறது. பிரேசிலின் கிழக்குப்பகுதி முழுவதிலும்; மேற்குநாடுகளுக்காக சோயா பயிரிடப்படுகின்றது.
றீPயோவில் நடைபெற்ற சூழல் பாதுகாப்பு மகாநாட்டில் நெல் உற்பத்தி செய்வதால் மீதேன்வாயு அதிகமாக வெளிவருவதாகவும் சூழலைப்பாதிப்பதாகவும் கூறப்பட்டது. நெல், நீரில்; வாழும் பயிராகையால் நெல்லை அறுவடை செய்தபின் மற்றைய வைக்கோல், நெல்லின் தண்டுகள் தண்ணீரில் அழுகுவதால் அதில் இருந்து வெளியாகும் மீதேன்வாயு வளிமண்டலத்தை பாதிப்பதாக கூறப்பட்டது. இதில் எவ்வளவு தூரம் உண்மை என்று பார்ப்போம். அதிகமாக நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் அறுவடைகாலம் வந்துவிட்டால் வயல்களில் உள்ள நீரை வெளியெறச் செய்து நிலம் காய்ந்து ஒரு சில நாட்களின் பின் தான் அறுவடை துவங்குவது வழக்கம். இயந்திரம் மூலமாக அறுவடை செய்யும் பகுதிகளில் கூட இம்முறையையே பயன்படுத்துவார்கள். இது அறுவடை செய்வதற்கு இலகுவான முறையாக இருப்பதால். இதனால் அறுவடை முடிந்தபின் தண்டுகள் காய்ந்து உக்கிவிடுகின்றது. ஆனால் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் வெளியேற முடியாதிருப்பதால் தண்டுகள் அழுகுகின்றது. இது விகிதாசாரத்தில் பார்க்கும் பொழுது வெகு சிறிதாகவே உள்ளது. இவர்கள் றீயோவில் குறிப்பிட்டதுபோல் வளிமண்டலப் பாதிப்புக்கு நெல் உற்பத்தியும் ஓர் முக்கிய காரணம் என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.
மூன்றாம் உலக நாடுகளில் சூழல்; பாதிப்பு இடம் பெறவில்லை என்பது எனது வாதமில்லை. எமது நாட்டிலும் அதிகமான சூழல் பாதிப்புக்கள்; நடைபெற்றவண்ணமே உள்ளது. இதற்கு அறியாமையும் ஒரு காரணமாக உள்ளது. அறியாமை மாத்திரமல்லாமல் நாட்டை வழிநடத்திச் செல்பவர்களே அதைப்பற்றி அறியாமலும் அறிந்துகொள்ள இயலாமலும் இருப்பதும் ஒரு காரணமாகவும் உள்ளது. எமது மக்கள் இயற்கையைப்பற்றி அறியாதவர்கள் அல்ல. இயற்கைக்கும் மனித வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை அவர்கள் நன்கு அறிவார்கள். இவற்றை நல்ல முறையில் கொண்டு செல்வதற்கு அரசும் சூழலைப் பாதுகாக்க முற்படும் ஸ்தாபனங்களும் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்கள், இரசாயனக்கழிவுகள் நச்சுத்தன்மையுள்ள இயந்திரக் கழிவுகள் பிளாஸ்ரிக், பாரஉலோகங்கள், அலோகங்கள் ஆகிய பொருட்களால் ஏற்படும் சேதங்களையும் அதைச் சூழலுக்கு அதிக பாதிப்பு இல்லாமல் மீளப்பயன்படுத்தும் வழிவகைகளையும் இலகுவான முறையில் விளக்க வேண்டும்.
1964முதல் 1985வரையிலும் பிறேசிலில் பசுமைப்புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக காணி உள்ளவர்களுக்கு சோயாவித்து, இரசாயன உரம், இரசாயன பூச்சிகொல்லி மருந்துகள் வாங்குவதற்கு வங்கிமூலமாக கடன்வசதி ஆகியன வழங்கப்பட்டது. அத்துடன் இவைகளை நடைமுறைப்படுத்துதற்கு வேண்டிய இயந்திரம் வேண்டுவதற்கும் கடன் கொடுக்கப்பட்டது. குறைந்த காலப்பகுதியிலேயே நிலங்களில் இரசாயன உரம், பூச்சிகொல்லிகள் பாவிப்பால் நிலம் நச்சுத்தன்மையாக்கப்பட்டதுமல்லாமல் ஒரேவிதமான தானிய உற்பத்தியின் மூலமாகவும், களைகளை அழிப்பதற்காக பூச்சிகொல்லி மருந்துகள் பாவிக்கப்பட்டதால் வேறு எந்தவிதமான செடிகளும், புற்களும் வளரமுடியாமையால் நிலஅரிப்பும் ஏற்பட்டது.
பேரளவு உற்பத்திமுறைக்கென அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்களையும், இரசாயனப்பசளைகள், பூச்சிகொல்லிகளையும்; ஒவ்வொருமுறையும் வாங்குவதற்கு பெருமளவு பணம் தேவைப்பட்டது. இதனால் திரும்பத் திரும்ப கடன் வாங்கி உற்பத்தி செய்வதை விட்டு விட்டு தமது பழையமுறைப்படி உற்பத்தி செய்த தானியங்களை ஸ்தாபனங்கள் வாங்க மறுத்ததால் அவர்கள் வாங்கிய கடன்களை அடைக்க முடியாமையினால் கடன் கொடுத்த ஸ்தாபனங்கள், வங்கிகள் இவர்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டது.
பூச்சிகொல்லி பாவிப்பால் அதில் உள்ள பாரஉலோகங்கள், அலோகங்கள் னுNளுஇல் மாற்றங்கள் ஏற்படுத்துவதால்; பிறக்கும் குழந்தைகள் அங்கவீனர்களாவதுடன் கருச்சிதைவும் ஏற்படுகின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் காலாகாலமாக தாம் உற்பத்திசெய்த, வாழ்ந்த இடங்கள் பறிபோனதாலும் வேலையில்லாததினால் வேலைதேடி நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து அங்கு சேரிகளிலும் வீதிகளிலும் வாழ்வது மாத்திரமல்லாமல் பல இன்னல்களுக்கும் ஆளாக வேண்டியுள்ளது.
இந்தியாடுடேயில் இருந்து சில குறிப்புக்கள். :
முன்னாள் பள்ளி ஆசிரியரான புருஷோத்தமர், புகழ்பெற்ற ஜப்பானிய இயற்கை விவசாயியான புகுவோகாவின் ~ஒற்றைவைக்கோல் புரட்சியை| தீர்த்தள் என்ற கிராமத்துக்கு முதலில் அறிமுகம் செய்;தார். விவசாயியாகிய இவரின் தோட்டத்தில் ஏழாண்டுகளுக்கு முன் வீசிய புயலின்போது அவரது தோட்டத்திலிருந்த மரங்கள் ஒடிந்து விழுந்தன. ~வேதி(இரசாயன) உரங்களைப் போட்டதால் அவை வலுவிழந்து போய்விட்டன| என்கிறார் ராவ். வேதங்களில் கூறப்பட்டுள்ள பண்டைய வேளாண்மை முறைகளைப்பற்றி அவர் படித்தார். பல முற்போக்கு விவசாயிகளின் உதவியுடன் துணிந்து இயற்கை விவசாயத்தில் இறங்கிவிட்டார். சாணம், மண்புழு, கலப்புரம், கருவுற்றுள்ள பசுவின் மூத்திரம் (கோமியம்) என்று பல இயற்கையான பொருட்களைக் கலந்து உரங்களை தயாரித்தார். அவரது முயற்சியின் விளைவு: உற்பத்தி 40-60 சதவீதமாக உயர்ந்தது. இரசாயன பசளைகளுக்கும் பூச்சிகொல்லிகளுக்கும் வாங்க வேண்டி இல்லாததால் செலவில் 30-40 சதவீதம் குறைவானது. கூட்டுப்பசளைக்கு ராவ் சேர்க்கும் பொருட்கள் வியப்பானவை. (டீழை-பயள) பயோகா@; தொட்டியில் கிடைக்கும் தண்ணீர், கெட்டுப் போன மோர், இளநீர், தேன், நெய். இவ்; உற்பத்திமுறை பல மேல் நாட்டவர்களையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது.
|
 |