சினேகிதம்
நா. விச்வநாதன்

 

நட்சத்திரமொன்று
சேதி சொல்லிற்று-
அது எப்போதுமே
நல்ல சேதிகளைத்தான்
சொல்லும்-
எனக்கருகில் தெரிந்ததால்
மட்டுமே அதோடு கொண்ட
உறவு
அதீதமாயிற்று என்றில்லை-
பார்த்தவுடன் புரிந்தது
அது எனக்கானதென்றும்
நான் அதற்கானவன் என்றும்
இரவில் நெடுநேரம்
பேச்சு தொடரும்@
விடிந்த பின்னரும் சிலநாளில்-
பாஷை புரியாவிட்டாலும்
பாசம் புரிந்ததால்
செய்திகள் கொள்வதில்
சிக்கல் நேர்ந்ததில்லை-
எண்ணத் தொலையாத
எத்தனையோ ஒளிப்புள்ளிகளில்
பளிச்சிடும் இதன் புன்னகை
அடையாளம் காட்டிவிடும்-
உண்பதுபோல்-
யோசிப்பதுபோல்-
உறங்குவதுபோல்-
நித்திய கடன்களில்
ஒன்றாய்ச் சேர்ந்தது இது -
என் வீட்டுக் கொல்லை
பூவரசும் பாரிஜாதமும்
ஜென்னல் குருவியும்
எங்களை விலக்கிவிடாதே
தொலைதூரத்துச்
சினேகிதனுக்காய்யென்
அச்சங்கொண்டு
அவ்வப்போது முறையிடுவது
சகஜமாயிற்று -
இப்படியே எதுவும்
போய்க் கொண்டிருப்பதில்லை
எனச் சொல்வதுபோல்
என்
ஆகாயத்துச் சினேகிதன்
ஒருநாள்
காணாமல் போனான்-
வானம் கருக்கிட்டு
விசித்திரம்
கொண்ட
வருத்தமோ மாளாது-
தூக்கம் தொலைத்து
பசி தொலைத்து
புன்னகை தொலைத்து-
அண்ணாந்து பார்த்து
வானம் அளைவதே
வழக்கமாயிற்று-
எங்கே எங்கேயென
அலை பாய்ந்தபோது
வானத்துக் கம்பிகள்
பூக்களாய்ப் பொழிந்தன
திடீரென்று மறுநாள்-
வரண்ட பூமியில்
சடசடவென குத்திக்
கிழித்தன.
பத்து வருடமாய் இல்லாத
மழை என
நனைந்த சுகத்தில்
தெருவில் குரல் கேட்டது-
உனக்கு - உன் பூமிக்கு
உன்னருகில் வருவதற்கு
என்றாற்போல் பொழிந்த
மழையில் குளிர்ந்த பூமி-
வாசல் பன்னீர்மரத்தின்
வாடிய இலைகள்
தெம்போடு உதிர்த்தன
மழைநின்ற பிறகும் துளிகளை-
உற்றுப் பார்த்தால்
ஒவ்வொன்றிலும்